இடுகைகள்

ஓடிடி திரைப் பார்வை: சந்தானம் படத்தின் சீரியஸ் வெர்ஷன்தான் ’கார்மேகம்’!

படம்
சினிமாவோ, சின்னத்திரையோ… நடிப்பில் கலக்கும் ராதிகா சரத்குமாரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘கார்மேகம்’. ராதிகாவுடன் சாய் குமார், சாந்தினி, சைதன்யா கிருஷ்ணா, அஷ்ரிதா, நந்தினி ராய், ஷாரித், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் ஷரன் கோபிஷெட்டி இயக்கிய இத்தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சிறுவயதிலிருந்தே ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதி திடீரென்று கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு குடும்பமும் இடி விழுந்ததுபோல் பேரதிர்ச்சியில் கதறிக்கொண்டிருக்கும்போது வீட்டு வாசலில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. படுகாயமடைந்தவரைக் காப்பாற்றும்போதுதான், அந்த இரட்டைப் படுகொலையைக் செய்த கொடூரனே இவன்தான் என்பது தெரிய வருகிறது. அந்தக்கொடூரனை பாதிக்கப்பட்ட குடும்பம் என்ன செய்கிறது? புதுமணத் தம்பதியின் இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? அதனை, மோப்பம் பிடிக்கும் காவல்துறையிடமிருந்து அக்குடும்பம் தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறது? இவைதாம் ‘ கார்மேகம் ’ தொடரின் கதை. கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை அஜய்யின் அம்மா

வெளியாக இருக்கும் ‘அவதார் 2’ கிளிம்ப்ஸ் வீடியோ? - ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம்
உலக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள ‘அவதார் 2’ திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, இன்று CinemaCon நிகழ்ச்சியில் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை, அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல்ரீதியாக சாதனை படைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். அத்துடன், ‘அவதார் 2’ படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியநிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி இந்தப் படம் டால்பி பிரீமியம் 4k உடன், 3D தொழில்நுட்பத்தில், உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்திற்கா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இடம்

படம்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் பள்ளியான கேந்திர வித்யாலயா சங்கேதனில் ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு அடிப்படையில் சில இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. அதற்கென ஒதுக்கப்பட்டு வந்த இடங்கள் இந்த கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிர்வாகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள் கேந்திரிய வித்யாலயா ஊழியர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கல்விச் செலவு ’பிரதமர் கேர்ஸ்’ திட்டத்தின் மூலம் ஈடு செய்யப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சேர்க்கை விண்ணப்பம் குறைவாக இருப்பின், மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாவது அறிவிப்பு வ

கேரள திரையுலகில் மீண்டும் அதிர்ச்சி - பிரபல நடிகர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்

படம்
சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பிரபல மலையாள நடிகர் விஜய்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பிரபலமானவர் விஜய்பாபு. இவர், ‘பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பெண்’ (Philips and the Monkey Pen)  என்ற குழந்தைகள் படத்தை தயாரித்து நடித்தற்காக, கேரள மாநில விருதை பெற்றுள்ளார். மேலும், விஜய்பாபு பிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபலமான படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் விஜய்பாபு மீது, இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி முதல், ஏப்ரல் 14-ம் தேதி வரை தன்னை உடல்ரீதியாக தாக்கியதுடன், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, நடிகர் விஜய் பாபு மீது பாதிக்கப்பட்ட பெண், ஏப்ரல் 22-ம் தேதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் அந்தப் பெண், பாலியல் வன்முறைக்கு எதிரானப் பெண்கள் என்ற பெயரில் உள்ள ஃபேஸ்புக் குழுவில், புகார் குறித்து முழுமையாக தெரிவித்துள்ளார்.

இந்தமுறை தனுஷ் ரசிகர்களை சமாளித்த நெட்பிளிக்ஸ் - வெளியானது ‘தி கிரே மேன்’ மாஸ் அப்டேட்!

படம்
‘தி கிரே மேன்’ திரைப்படம் வருகிற ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாவதாக நடிகர் தனுஷ், தனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தடுத்து நடித்து வருவதுடன், பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இதையடுத்து ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரே மேன்’ (The Gray Man) ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து வந்தார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்காக நடிகர் தனுஷ் சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். அந்தப் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக

ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்.. சேதமான கதவுகள் - நடந்தது என்ன?

படம்
குடிபோதையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீ கிளிப் அவென்யூ 5-வது டிரைவ் தெருவில் வசித்து வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் ஹிப்ஹாப் பாடல்கள் பாடி பிரபலமானவர். விஷாலின் ‘ஆம்பள’ படத்திற்கு இசைமைத்துள்ள அவர், மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் கதவில் மர்ம நபர்கள் சிலர் குடிபோதையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் கதவு சேதமாகியுள்ளது. எதிர் வீட்டில் வசிப்பவர்கள் இதனைக் கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடாந்து அங்கு வந்த போலீசாரை கண்டதும், மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களின் காரின் பதிவெண்ணை கண்டுபிடித்தனர். அதை வைத்து காரின் உரிமையாளரான அஜய் வாண்டையாரின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். விசாரண

ஓடிடியில் வெளியாகும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ - படக்குழு வெளியிட்ட தகவல்

படம்
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், வரும் மே 13-ம் தேதி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.  கடந்த 1990-ம் ஆண்டின் துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரில் வாழ்ந்துவந்த இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து தப்பி, நாட்டின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. பிரபல பாலிவுட் இயக்குநரான விவேக் அக்னி ஹோத்ரி இயக்கிய இந்தப் படம், பல்வேறு சட்டப் பிரச்சனைகளை தாண்டி கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில், அனுபம் கெர், விவேக் அக்னி ஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பாஷா சும்ப்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு, பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி, மத்தியப் பிரதேசம், கோவா, ஹரியானா, குஜராத், கர்நாடகா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வரி வி