இடுகைகள்

Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடிகர் செந்திலின் பீமரதசாந்தி விழா: திருக்கடையூர் அபிராமி கோவிலில் இன்று நடைபெறுகிறது

படம்
நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரதசாந்தி விழா இன்று நடைபெறுகிறது மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.  இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்நிலையில், பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெறவுள்ளது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும்' குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இரவு கஜபூஜை, கோபூஜை

‘விடுதலை’ படத்தில் எத்தனை இடங்களில் மியூட்? - வெளியான சென்சார் சான்றிதழ்!

படம்
வெற்றிமாறனின் ‘விடுதலை - 1’ படத்தில் மொத்தம் 11 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ள சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதில் முதல் பாகம் வருகிற 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் சூரி, காவலராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் முதல் பாகம் எடிட் செய்யப்பட்டுள்ளநிலையில், இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தில் 11 இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு காட்சிகளில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதனால், ‘வடசென்னை’ போன்று இந்தப் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழ், அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வக

”எங்களது தேர்வு முடிவு வெளியாகல”-போராட்டத்தில் ஈடுபட்ட TNPSC தேர்வர்கள் அதிர்ச்சி புகார்!

படம்
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் அடுத்தடுத்து பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சிபெற்றது குறித்து விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு புகார் குறித்து, குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை எனக் கூறி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு 40க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. விதிகளை மீறியதாகக் கூறி தங்களது தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யத் தகுதியற்றது என டிஎன்பிஎஸ்சி பதிலளித்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு, நில அளவர் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்

விபத்து வழக்கில் நேரில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த் - நீதிமன்றம் எடுத்த முடிவு

படம்
நடிகை யாஷிகா ஆனந்த் மீது போடப்பட்ட பிடிவாரண்ட் தளர்த்தப்பட்டு, வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி, யாஷிகா ஆனந்த் தனது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார். அப்போது வரும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் யாஷிகா ஆனந்தின்ன் நெருங்கிய தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளி பவானி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவ

‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆஸ்கர் பரப்புரை செலவு ரூ.80 கோடியா? - விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி!

படம்
‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.  ‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிர

வெளியான மகேஷ் பாபுவின் அடுத்த பட அப்டேட்... இயக்குநர் இவர்தானா? குஷியில் ரசிகர்கள்!

படம்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 28-ஆவது திரைப்படம், 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. தெலுங்கில் ஃபீல்குட் திரைப்படங்களை இயக்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை அறுவடை செய்வதில் வல்லவரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் 3-ஆவது முறையாக இணைந்துள்ளார் மகேஷ் பாபு. திரிவிக்ரமும் மகேஷ் பாபுவும் ஏற்கெனவே கரம் கோத்த அத்தடு, கலேஜா ஆகிய திரைப்படங்கள், பாக்ஸ்ஆபீஸை அடித்து நொறுக்கி புதிய சாதனைகளைப் படைத்தன. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் புதிய திரைப்படத்துக்குத் தமன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியன்று வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பத்து தல To லியோ.. 2023ல் திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கும் நட்சத்திரங்களின் படங்கள்!

படம்
ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம்.  இந்த மாதம் முடிய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. அந்த நாட்களிலும் சில படங்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழரசன் - மார்ச் 30 பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகத் தெரிகிறது. பத்து தல - மார்ச் 30 இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் நடித்துள்ள படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தி

”அடிச்சு கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க”.. லியோ அப்டேட்டும்.. GVM கலகல பதிலும்!

படம்
இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் குறித்து சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ’லியோ’ படம் குறித்து இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். காஷ்மீரில் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் அடுத்தது சென்னையில்தான் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முக்கியமான ஒரு கேள்விக்கு மிக

முதல் நாள் இன்ஸ்டாவில் வீடியோ.. மறுநாள் சடலமாக ஹோட்டலில் மீட்பு - போஜ்புரி நடிகை தற்கொலை?

படம்
பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.  இதற்குப் பிறகு, நடிகை 'முஜ்சே ஷாதி கரோகி' மற்றும் 'சாஜன்' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார். . நேற்று இரவு,  படப்பிடிப்பிற்குப் பிறகு உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஹோட்டலில் தங்குவதற்காக அகன்ஷா சென்றிருந்தார். இந்நிலையில் தூக்கில் தொங்கியபடி அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு கூட கடைசியாக இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏராளமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சக திரையுலகினர் மற்றும்

‘விஜய் சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது’ - ‘லியோ’ பட அனுபவத்தை பகிர்ந்த பிரபல நடிகர்!

படம்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை, பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், தமிழில் சத்யராஜின் ‘பூவிழி வாசலிலே’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘சூரியன்’, ‘அஞ்சலி’ உள்ளிட்டப் படங்களில் வில்லனாகவும், தற்போது குணசித்திர நடிகராகவும் நடித்து வரும் பாபு ஆண்டனி தனது சமூகவலைத்தளம் வாயிலாக ‘லியோ’ படப்பிடிப்புத் தளத்தில் விஜ

‘வாட்ஸ் அப் உலகத்தில் உண்மையைவிட பொய் செய்தி அதிகமாக பரவுகிறது’ - அமைச்சர் உதயநிதி!

படம்
“வாட்ஸ் அப் மூலம் வரும் தகவல்களில் எது உண்மை செய்தி, எது பொய் செய்தி என்பதை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்; உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுகிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றிபெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். அதனையும் தாண்டி போதைப் பொருட்களை ஒழி

”என்னுடைய படங்களில் இதுபோன்ற காட்சிகளை நான் எடுத்ததில்லை” - இயக்குநர் விக்னேஷ் சிவன்

படம்
“நான் இதுவரை என்னுடைய படங்களில் குடிப்பது, புகைப்பிடிப்பது போல் படம் எடுத்ததில்லை” என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “திரைத்துறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குறும்பட போட்டி என்பது ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. இதுபோன்ற விசயங்களை படமாக எடுக்க முடியாது, அதற்காக தான் குறும்படமாக எடுத்

பாடலாசிரியர் பா. விஜய் இயக்கும் படத்தில் ஜீவா, அர்ஜூன் - மேதாவியா; புதியக் கதையா?

படம்
ஜீவா - அர்ஜூன் நடிக்கும் பீரியட் ஆக்‌ஷன் படத்தை பாடாலாசிரியர் பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு கே. பாக்யராஜ் நடிப்பில் உருவான ‘ஞானப்பழம்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான பா.விஜய், முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். பின்னர் ‘ஞாபகங்கள்’ படத்தின் வாயிலாக நடிகராகவும் அறிமுகமானதுடன், ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தை இயக்கி நடித்திருந்தார். தொடர்ந்து, ‘ஆருத்ரா’ படத்தை இயக்கியிருந்த நிலையில், தற்போது ஜீவா, அர்ஜூன் நடிக்கும் புதியப் படத்தை பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில், கடந்த 2020-ம் ஆண்டு ‘மேதாவி’ என்ற ஹாரர் த்ரில்லர் படம் உருவாக உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் இந்தப் படத்தில் நடிக்க இருத்த ரஷ்யப் பெண் உயிரிழந்தது ஆகியவற்றின் காரணமாக படம் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பா.விஜய் இயக்கும் புதியப் படத்தில் ஜீவா - அர்ஜூன் நடிக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். பீரியட் டிராமாவாக உருவாக உள்ள இந்தப் படத்திற்காக, ஹைதராபாத் ராமேஜி ராவ்

ஆசிரியர் தாக்கப்பட்டதன் எதிரொலி - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஆசிரியர்கள்

படம்
தூத்துக்குடி  ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியரை பள்ளியில் வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், இதனை கண்டித்தும், எந்த ஒரு ஆசிரியருக்கும் இது போன்ற நிகழ்வு ஏற்படாத வகையிலும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு சட்டசபை கூட்டத்தொடரில் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் கோஷங்கள் எழ

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? - குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

படம்
பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடலை பாடியதன் மூலம் இங்கு புகழ்பெற்றார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி பல முன்னனி இசையமைப்பாளர்களின் இசைகளில், ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார். இந்த நிலையில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சமீபத்தில் லண்டன் சென்ற பாம்பே ஜெயஸ்ரீ, அங்கே தங்கியிருந்த விடுதியில் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவை இழந்ததாகவும், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் இன்று தகவல் பகிர்ந்துள்ளனர். அதில், “பாம்பே ஜெயஸ்ரீக்கு இங்கிலாந்தில் வைத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. வேகமாக குணமடைந்து

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி!

படம்
பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப் பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, லால்குடி ஜெயராமன், டி.ஆர். பாலாமணி ஆகியோரிடம் வாய்ப்பாட்டு கற்றவர். கடந்த 2021-ம் ஆண்டு, மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக இசை ரசிகர்களை தனது ‘வசீகர’ குரலால் கவர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களிலும் பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. கல்கத்தாவில், தமிழ் குடும்பத்தில் பிறந்த பாம்பே ஜெயஸ்ரீ, ஜி.என். தண்டபாணி ஐயரிடம் வீணையும், பின்னாளில் இந்துஸ்தானி கிளாஸிக்கல் இசையையும் கற்றுள்ளார். எம்.எஸ். விஸ்வநாதன் துவங்கி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எம்.கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், ஷங்கர், இமான், யுவன் சங்கர் ராஜா, கோவிந்த் வசந்தா வரை பலரின் இசையில் பாடியுள்ளார். குறிப்பாக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் - பாடலாசிரியர் தாமரை - இயக்குநர் கௌதம்

நடிகர் அஜித்தின் தந்தை உடல் தகனம் - ஆறுதல் கூறிய திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்

படம்
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல், பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.  இந்நிலையில், நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காலமானார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்துக்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து 85 வயதாகும் சுப்பிரமணியம் உடல் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். அமைச்சர் உதயநதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.  அதேபோல் நடிகர்கள் விஜய், பார்த்திபன், பிரசன்னா, மிர்ச்சி சிவா, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய் மற்றும் தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோரும சென்று மரியாதை செலுத்தினர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்ப

புகாரைவிட கூடுதலான நகைகளை கைப்பற்றிய போலீசார் - ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த திட்டம்?

படம்
லாக்கரில் இருந்த நகைகள் காணாமல் போன வழக்கில், நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் இருந்து நகைகள் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஐஸ்வர்யா வீட்டிலிருந்து திருடிய நகைகளை வைத்து, சோழிங்கநல்லூரில் ஈஸ்வரி 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பினாமி தான் என்றும், அதனால் அவர்தான் தனது பெயரை பயன்படுத்தி அந்த வீட்டை வாங்கியிருப்பதாகவும், ஈஸ்வரி தனது குடும்பத்தாரிடம் சொல்லி வைத்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால், ஐஸ

நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: ‘மருத்துவர்களுக்கு கடமைபட்டுள்ளோம்’- சகோதரர்கள் அறிக்கை

படம்
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. ‘துணிவு’ படத்துக்குப்பின், அடுத்தப் படத்திற்கான பணிகளுக்கு இடையே தனது குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வருகிறார் நடிகர் அஜித். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்  இன்று காலை உயிரிழந்தார். அஜித்தின் தந்தை, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, நடிகர் அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தை பி.எஸ்.மணி பல நாட்களாக உடல்நலன் சரியின்றி இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். அவருக்கு வயது 85. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்களது தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தும் வந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைபட்டுள்ளோம்.  சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்களது தாயின் அன்போ

”இதையும் கவனத்தில் கொண்டால்”- வேளாண் பட்ஜெட் குறித்து கார்த்தியின் பாராட்டும் வேண்டுகோளும்

படம்
நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி, 2023- 2024க்கான வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள அதேவேளையில், ஒரு சில கோரிக்கைகளும் அறிக்கை வாயிலாக வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று காலை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நம் மாணவர்கள் உழவு பற்றியும், உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க