இடுகைகள்

இந்து தமிழ் திசை : News in Tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உங்கள் இயல்பான, இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். பயணங்கள் சிறப்பாக அமையும். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பிற்பகல் முதல் தடைகள் உடைபடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு https://ift.tt/NqJAFS5

படம்
மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ரூ.87 லட்சத்தில் புதிய தேர் திருப்பணி தொடக்கம் https://ift.tt/UN9nImh

படம்
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்தில் புகழ்பெற்ற துர்க்கையம்மன் கோயிலான ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் வடிவமைக்கும் திருப்பணி தொடங்கப்பட்டது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள் உற்சவமாக விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும். ஆனால், அந்த உற்சவத்தின் போது தேர் இல்லாததால் கட்டுத்தேரைக் கொண்டு விழாக்களை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, புதிய தேர் வடிவமைக்கப் பக்தர்கள் வலியுறுத்தியதின் பேரில், கோயில் நிர்வாகம் ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கி, புதிய தேர் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணி தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை https://ift.tt/UxScd04

படம்
சென்னை: அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் https://ift.tt/u9Av1fI

படம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நேற்றிரவு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குரு பகவான் நேற்றிரவு 11.27 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் நேற்றிரவு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை https://ift.tt/erDPwjS

படம்
சென்னை: சென்னையில் ரம்ஜான் பண்டிகைகோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு தொழுகையின்போது இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இந்த மாதத்தில்தான் இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பதுகடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவர். இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு, கடந்தமார்ச் 24-ம் தேதி தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை | குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 24 முழுமையாக

படம்
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை (22.04.2023) சுக்ல பட்சத்து துவிதியை திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், கௌலவம் நாமகரணம், ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், மேஷ லக்னத்தில், சந்திரன் ஓரையில், குரு பகவான் மீனத்திலிருந்து மேஷம் ராசிக்குள் அதிகாலை 5 மணி 14 நிமிடத்துக்கு பெயர்ச்சியாகிறார். காலப்புருஷ தத்துவப்படி குருபகவான் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைவதால் சொத்து மதிப்பு உயரும். மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை உள்ள காலகட்டங்களில் குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் அசுவினி நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண இழப்பு, ஏமாற்றம், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்து நீங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதி புஷ்கரணி விழா - ஏராளமான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வழிபாடு https://ift.tt/QUJdKV0

படம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆதிபுஷ்கரணி விழா இன்று தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். நவகிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குரு பகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு, அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும். மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் சனிக்கிழமையான இன்று பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, மேஷ ராசிக்குரிய நதியான, புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா தொடங்கியது. சங்கராபரணி ஆறு வடக்கு நோக்கி பாய்வதாலும் கங்கைக்கு நிகரானது என்பதாலும் இந்த புஷ்கரணி விழா மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி 2023 - 24 | கடகம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

படம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பலன்கள்: ஈர மனசும் இயல்பான பேச்சும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் அமர்ந்திருந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும், புதிய தொடர்புகளையும் கொடுத்த குருபகவான் இப்போது ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் எதிலும் இழுபறி நிலை உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. என்றாலும் குருவின் பார்வையால் பல நன்மை உண்டாகும். உங்கள் ராசிக்கு 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பேசியே பல பெரிய காரியங்களை முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் வரும். பழைய சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பார்வை கோளாறு நீங்கும். உங்கள் ராசிக்கு 4ம் வீட்டை குரு பார்ப்பதால் தாய்மாமன் வகையிலிருந்த மனக்கசப்புகள் தீரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல வீட்டுக்கு மாறுவீர்கள். சிலருக்கு வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். 6ம் வீட்டை குரு பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். வெள

குரு பெயர்ச்சி 2023 - 24 | ரிஷபம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

படம்
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) பலன்கள்: இதயம் அழுதுக் கொண்டிருந்தாலும், உதட்டில் புன்னகையை உதிர்ப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், வசதி வாய்ப்பையும், பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து வந்த குருபகவான் ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்களின் விரய வீடான 12 ம் வீட்டிலேயே அமர்வதால் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். நினைத்த காரியங்கள் கூட இழுபறியாகி முடியும். யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். குரு பகவான் உங்கள் 4 ம் வீட்டை பார்ப்பதால் தாயாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும். வீடு வாங்கும் திட்டம் இப்போது நிறைவேறும். உங்களிடம் இருந்த கூடாப்பழக்கங்கள் குறையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinem

குரு பெயர்ச்சி 2023 - 24 | மேஷம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பலன்கள்: பரந்த மனதும், பிரதிபலன் பாராமல் உதவும் பண்பும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு வீண்பழி, விரயச் செலவு, மன உளைச்சல் என உங்கள் நிம்மதியை கெடுத்த குருபகவான் இப்பொழுது ஏப். 22, 2023 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து மே 01, 2024 வரை ஜென்மகுருவாக அமர்வதால் உடல் நிலை பாதிக்கும். தலைச்சுற்றல், ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்குறைவு என வரக்கூடும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவு, பிரிவு வரக்கூடும். குருவின் பார்வையால் கெடுபலன்கள் குறையும். குருபகவான் உங்களின் 5 ம் வீட்டை தனது அருட்பார்வையால் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக அமையும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily

அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் ஏப்.23-ல் 12 கருட சேவை உற்சவம் https://ift.tt/fjRC5Js

படம்
கும்பகோணம் : அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் ஏப்.23-ம் தேதி 12 கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். நிகழாண்டு, ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
21-04-2023 சோபகிருது 8 சித்திரை வெள்ளிக்கிழமை திதி: பிரதமை காலை 8.32 வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்: பரணி இரவு 11.02 வரை. பிறகு கார்த்திகை. நாமயோகம்: ப்ரீதி காலை 11.02 வரை. பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: பவம் காலை 8.32 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53. அஸ்தமனம்: மாலை 6.22 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3,5,7 சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவண்ணாமலை கோயிலில் ரூ.2.07 கோடி உண்டியல் காணிக்கை https://ift.tt/XFdhua0

படம்
திருவண்ணாமலை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், துர்க்கை அம்மன் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. அவ்வாறு, பங்குனி மாத பவுர்ணமியையொட்டி பெறப்பட்ட காணிக்கையை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201 ரொக்கம், 195 கிராம் தங்கம், 1,205 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 |  மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு எப்படி?

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும், பார்க்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 | துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு எப்படி?

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ராசியில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 | கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு எப்படி?

படம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுகஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி | புஷ்கரணியில் நீராடும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் - 200 போலீஸார் பாதுகாப்பு https://ift.tt/BGzOcYr

படம்
புதுச்சேரி: புஷ்கரணி வரும் பக்தர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தால் பந்தல் வசதி, நீராடும் பக்தர்கள் ஆடை மாற்ற ஆண், பெண்களுக்கு தனித்தனியாக அறைகளும், 50 மொபைல் டாய்லெட்டுகளும் அமைக்கப்படும். 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று ஆட்சியர் வல்லவன் கூறினார். நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகும்போது, அந்தந்த ராசிக்குரிய ஆறுகளில் புஷ்கரணி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். புஷ்கரணி என்பதற்கு ஆறுகளில் புனித நீராடுதல் என்பது பொருளாகும். புஷ்கரணி விழாவின்போது, சம்பந்தப்பட்ட ஆறுகளில் மக்கள் புனித நீராடுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 | மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு எப்படி?

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்