இடுகைகள்

விஜய்யின் ‘வாரிசு’க்காக சிம்பு குரலில் பாடல்? -ஆடியோ வெளியீட்டு விழா குறித்து கசிந்த தகவல்

படம்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில், நடிகர் சிம்பு ஒருப் பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவலும் கசிந்துள்ளது. தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, தற்போதிலிருந்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூட்யூப்பில் வெளியாகி 66 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் மற்றும் மானசி இந்தப் பாடலை பாடியுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் தமன், ஏற்கனவே சூசகமாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில்,

108 வைணவ திவ்ய தேச உலா - 69 | பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில் https://ift.tt/VDbc0LH

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தராகண்ட் மாநிலத்தில் சுமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில் 69-வது கோயிலாகப் போற்றப்படுகிறது. அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள இக்கோயில், இமயமலையின் குளிர் காரணமாக வருடத்தில் 6 மாதங்கள் (ஏப்ரல் கடைசி முதல் நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இத்தலத்தை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார் பாசுரம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘காந்தாரா’வின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடை நீக்கம்-கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

படம்
காப்புரிமை சர்ச்சையில் சிக்கிய ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடையை நீக்கி கோழிக்கோடு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் படக்குழு நிம்மதி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற ‘காந்தாரா’ படத்தை, ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தநிலையில், கேரளாவைச் சேர்ந்த கோவிந்த் வசந்தாவின் இசைக்குழுவான ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ இசைத்து யூட்யூப்பில் வெளியிட்டு இருந்த ‘நவரசம்’ பாடலும், ‘வராஹ ரூபம்’ பாடலும் ஒன்றாக இருப்பதாக காப்புரிமை சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ‘வராஹ ரூபம்’ பாடலை ஒலிபரப்ப தடைவிதித்து கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் நேற்று அமேசான் பிரை

108 வைணவ திவ்ய தேச உலா - 68 | தேவப்பிரயாகை நீலமேகர் கோயில் https://ift.tt/sOBxDqN

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தராகண்ட் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள தேவப்பிரயாகை நீலமேகர் கோயில் (திருக்கண்டம் என்னும் கடிநகர்) 68-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ரிஷிகேஷில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 45 மைல் தொலைவில் 1,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் சிறப்புகள் பற்றி பத்ம புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம் மற்றும் அக்னி புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மதேவர் இங்கு தொடங்கியதால், இவ்விடம் பிரயாகை என்றும், திருமாலை தேவனாகக் கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால், தேவப்பிரயாகை என்றும் அழைக்கப்படுகிறது. தேவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்த வேளையில் திருமாலை வணங்குவதால் தேவப்பிரயாகை என்று இத்தலம் பெயர் பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘முன்னெல்லாம் ஷூட்டிங் போய்ட்டு வறீங்களானு கேட்பாங்க.. ஆனால் இப்போ...’ - நடிகர் சூரி வேதனை

படம்
பண மோசடிப் புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் சூரி மீண்டும் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக திரைப்பட நகைச்சுவை நடிகரான சூரி கடந்த மார்ச் மாதம் அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடிகர் சூரி மூன்று முறைக்கும் மேல் இவ்வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், இன்றும் நடிகர் சூரி மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கேட்கப்பட்ட க

‘காந்தாரா’ படத்தின் உயிர் ஜீவனான ‘வராஹ ரூபம்’ பாடலின்றி ஓடிடி ரிலீஸ் - நடந்தது என்ன?

படம்
அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘காந்தாரா’ படத்திலிருந்து ஒரிஜினல் ட்ராக்கான ‘வராஹ ரூபம்’ பாடல் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம். ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், கன்னடத்தில் கடந்த செப்டம் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தத் திரைப்படம், இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூலை விட அதிகளவில் ‘காந்தாரா’ படம் வசூலித்துள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பிரபாஸ், சிம்பு, கங்கனா ரனாவத், கார்த்தி உள்பட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தை பாராட்டியுள்ளனர். அத்துடன் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் கூஸ் பம்ப் ஆக இருந்தது. ச

குப்பைகளை பிரித்தெடுக்கும் தூய்மை பணியாளரான நடிகர் யோகி பாபு - ஏன் தெரியுமா?

படம்
தூய்மை பணியாளராக வீடு தோறும் சென்று தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்கும் காட்சியில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக குறும்படம் தயாரிக்கப்படும் நிலையில், அதில் தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபுவை வைத்து குறும்படம் இயக்கப்படுகிறது. Urbaser Sumeet நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்குக் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். தூய்மையாக வைத்துக் கொள்ள மாநகராட்சி பணியாளர் உடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தி குறும்படம் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News