புதிதான ஒரு களத்திற்கு அழைத்துச் செல்லும் ‘அயலி’ -வித்தியாசமான முயற்சியில் கவனம் ஈர்த்ததா?
தொடர்ச்சியாக த்ரில்லர், கொலை, கொள்ளை என நம் மேல் ரத்தம் தெறிக்கும் படியான கண்டெண்ட்களைத் தந்து கொண்டிருக்கும் வெப் சீரிஸ் உலகில், புதிதான ஒரு களத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறது ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் ‘அயலி’. உலகின் பல மொழி சினிமாக்களில் Utopian and dystopian fiction என்ற ஒரு வகைமை உண்டு. நிகழ்கால பிரச்சனைகளை மையமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கதையைச் சொல்லும் வடிவம் அது. அதன் ரிவர்ஸ் வடிவமாக, ‘அயலி’-ஐ எடுத்துக் கொள்ளலாம். இப்போது வரை இருக்கும் பெண்களுக்கு பிரச்சனையை பற்றி, கடந்த காலத்தில் களம் அமைத்து பேசியிருக்கிறது. அது இரு காலகட்டத்திலும் பொதுவாய் அமைந்திருக்கிறது என்ற சமூக அவலத்தையே எடுத்துப் பேசுகிறது இந்த சீரிஸ். நூற்றாண்டுகளுக்கு முன் ஊரின் காவல் தெய்வம் அயலியின் கோபத்தால் நிகழ்ந்ததாக சொல்லப்படும் பாதிப்புகளுக்குப் பின், வீரப்பண்ணை கிராமத்து மக்கள் ஒரு ஊர் கட்டுப்பாட்டை கொண்டு வருகிறார்கள். அந்த ஊரில் ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன், அவளுக்குத் திருமணம் செய்வது என்பதுதான் அந்தக் கட்டுப்பாடு. அதே வீரப்பண்ணை கிராமத்தில் வசிக்கும் தமிழ்ச்செல்வி (அபி)க்கு நன்றா