இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பொதுப்பலன்: வழக்கு பேசி முடிக்க, வாஸ்துப்படி வீட்டை திருத்தி அமைக்க, மிருதங்கம், சமையல், தியானம் கற்றுக் கொள்ள, வெற்றிலை பயிரிட, குழந்தைக்கு பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் தடைகள் விலகும். நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நன்மை உண்டு. சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம். மேஷம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். பணவரவு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்