இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குஜராத்தி சினிமாவில் தடம் பதிக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்: வெளியான அறிவிப்பு

படம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து குஜராத்தி மொழியில் படமொன்றை தயாரிக்க உள்ளனர். இவர்களின் `ரௌடி பிக்சர்ஸ்’ சார்பில் தமிழில் மட்டுமே படங்கள் தயாராகி வந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாக குஜராத்தி திரையுலகிலும் தடம்பதிக்க தயாராகிவிட்டது இந்த ஜோடி! இவர்கள் இருவரின் இணை தயாரிப்பில் `காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸூக்கு காத்திருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பதுடன் விக்னேஷ் சிவம் இயக்கவும் செய்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தங்களின் `ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் குஜராத்தி திரைப்படமொன்றை தயாரிக்க உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் . தனது பதிவில், “குஜராத்தி சினிமாவில் எங்களது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளோம். இதுகுறித்து அறிவிப்பதில், எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் குஜராத்தி சூப்பர்ஸ்டார் மல்ஹர் தாக்கர் நடிக்கிறார். அவருடன் மோனல் காஜர் நடிக்கிறார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மனிஷ் இயக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார் விக்னே

இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

படம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், ஆர்.கே. செல்வமணி 955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம், 389 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே. செல்வமணி மீண்டும் இயக்குநர்கள் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'வலிமை' படத்தில் வெட்டப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியானது

படம்
வலிமை படத்தில் குறைக்கப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் வெளியான படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை முறியடித்துள்ளது. வலிமை படம் முதல் நாளே தமிழகத்தில் மட்டும் 35 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை விட வெளிநாடுகளில் வலிமை படத்திற்கு வரவேற்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. வலிமை படம் இரண்டு மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடியது. இதனால் படத்தில் சில காட்சிகளை நீக்கி, ரன்னிங் டைமை குறைக்க படக்குழு முடிவு செய்தது. அதன்படி வலிமை படத்தில் 14 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டரை மணி நேரம் கொண்ட படமாக வலிமை படம் இன்று முதல் திரையிடப்பட்டு வருகிறது. செகண்ட் ஆஃப்பை விட ஃபஸ்ட் ஆஃப்பில் நிறைய காட்சிகளை குறைத்துள்ளனர். குறைக்கப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tami

அருண் விஜயின் 'யானை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

படம்
அருண்விஜய்யின் யானை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரியும் அருண் விஜய் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் யானை திரைப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘யானை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

’கோப்ரா’ ரிலீஸ் தேதி எப்போது?: ரசிகரின் கேள்விக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர்

படம்
’கோப்ரா’ படத்தினை வெளியிட திட்டமிடும் தேதியை அறிவித்திருக்கிறார், அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார் விக்ரம். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குநர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ’எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு. இன்னும் கோப்ரா ரிலீஸ் தேதிதான் வராம இருக்கு” என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை டேக் செய்திருந்தார். இந்த நிலையில்,

புனித் ராஜ்குமார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

படம்
நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் விஜய். 46 வயதான கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.  இதனால், நடிகர் சூர்யா, ராம் சரண், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஷால், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்தும் நினைவிடத்திற்குச் சென்றும் ஆறுதலும் அஞ்சலியும் செலுத்திய நிலையில், இன்று நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தீபாராதனைக் காட்டி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தும்போதும், அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வரும்போதும் விஜய் கண்கலங்கியபடி வருவது அவரது ரசிகர்களை உருக வைத்துள்ளது.  அவருடன், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கலந்துகொண்டார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News

எந்தெந்த தமிழ் மற்றும் இந்தியப் படங்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டன?

படம்
இயற்கை வளங்கள் நிறைந்த உள்ளூரில் என்னதான் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டாலும், படத்தின் ஒரு பாடலையாவது வெளிநாடுகளில் படம் பிடிக்க நமது ஊர் இயக்குநர்கள் சென்று விடுவது வழக்கம். திரையில் வெளிநாடுகளின் இயற்கை அழகை கண்டுக்களிப்பதில், நமக்கும் விருப்பம் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் இயற்கை வளங்கள் நிறைந்த உக்ரைனில், தமிழ் உள்பட சில இந்தியப் படங்களின் பாடல்கள் படம்பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ரோஷமாக அங்கு போர் நடந்து வரும் நிலையில், இதுபோன்ற தகவல்கள் தேவைதானா என்று கூட நமக்கு தோன்றும். எனினும், பாடல்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட அவ்வளவு அழகான வளங்கள் உள்ள நாடு அழியக்கூடாதே என்பதுதான் நமது நோக்கமும். விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். தற்போது உக்ரைனில் படம் பிடிக்கப்பட்ட பாடல்கள் குறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம். 1. வின்னர் (தெலுங்கு) கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், சாய் தரம் தேஜ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்து, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் ‘வின்னர்’. இந்தப்படத்தின் மூன்று பாடல்கள் கீவ், லிவ

கவனம் ஈர்த்த வெங்கட் பிரபு - அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’- ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம்
வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகும் இப்படம் குறித்து, “மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்குப் பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட ஜாலியான படம். இந்தப் படம் 1980-களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு‘ படத்தின் நவீன வடிவமாகவும், பார்வையாளர்களுக்கு புதுவித திரைக்கதை அனுபவத்தை தருவதாகவும் இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வெறு காலக்கட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது” என்று தெரிவித்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், ‘மன்மத லீலை’ வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு - எத்தனை நிமிடம்? என்ன காரணம்?

படம்
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அஜித் நடிப்பில், திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, ரசிகர்கள் அஜித்   கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தில் பைக் சேஸிங், சண்டைக் காட்சிகள் மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்டிருப்பாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதுவரை வெளியான அஜித்  படங்களில் இதுவே அதிக வசூல் செய்தப் படமாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘அண்ணாத்த’ (ரூ.35 கோடி) மற்றும் ‘மாஸ்டர்’ (ரூ. 34.80 கோடி) ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.  எனினும் ‘வலிமை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூலில் சாதனைப் புரிந்து வந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவ

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

”விஜய் ஆண்டனி நடிப்பில் நிறையவே தேறிவிட்டார்” - விஜய் மில்டன்

படம்
”விஜய் ஆண்டனி நடிப்பில் நிறைய தேறிவிட்டார்” என்று பாராட்டியுள்ளார் இயக்குநர் விஜய் மில்டன். ‘கடுகு’ படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைராகி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அதேசமயம், விஜய் ஆண்டனியுடன் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தினையும் இயக்கி வருகிறார். சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், விஜய் மில்டன் படம் குறித்து மனம் திறந்துள்ளார். ”நானும் விஜய் ஆண்டனியும் நீண்ட வருடங்களாகவே நெருங்கிய நண்பர்கள்’ நான் இயக்குநராக முயற்சித்த போது, அவர் நடிகராக முயற்சித்தார். சமீபத்தில், அவரை சந்தித்தப்போது அவரிடம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஆரம்பித்து விட்டோம். இப்படம், ஒரு உணர்ச்சிகரமான ஆக்சன் படமாக இருக்கும். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் எந்த சொந்தமும் இல்லாமல் ஒரு புதிய இடத்திற்கு வருபவனுக்கு வாழ்க்கை அம்மா, தங்கை என எல்லாவற்றையும் கொடுக்கிறது. எதுவும் இல்லாத ஒருவனை, எல்லாம் இருக்கும் ஒருவன் என்னவேண்டு

சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’

படம்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ சீன மொழியில் வெளியாகவுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கனா’ விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்தை எஸ்.கே புரொடொக்‌ஷன் மூலமாக தயாரித்து தயாரிப்பாளராவும் அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏழைப் பெண்ணின் கிரிக்கெட் கனவை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ’கனா’வில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இப்படத்தின், வெற்றியாலேயே போனி கபூர் தயாரிக்கும் ’ஆர்டிகிள் 15’ படமான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தினை உதயநிதியை வைத்து இயக்கி வருகிறார் அருண்ராஜா காமராஜ். பாரட்டுக்களைக் குவித்த ‘கனா’ வரும் மார்ச் 18 ஆம் தேதி சீனாவில் சீன மொழியில் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் இதனைப் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தியாவின் சினிமா தலைநகரமாக ஐதரபாத்தை மாற்ற வேண்டும் - பிரபல நடிகர் விருப்பம்

படம்
ஐதராபாத்தை இந்தியாவின் திரைப்பட தலைநகரமாக்க வேண்டும் என்று பிரபல நடிகர் ராணா டகுபதி விருப்பம் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பிஜுமேனன், பிருதிவிராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து இந்தப் படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் ‘பீம்லா நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு முன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராணா டகுபதி, “திரைப்பட உலகில் உள்ள பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளேன். எனினும், பவன் கல்யாண் மட்டும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இனி அடுத்தடுத்து வரவிருக்கும் எனது திரைப்படங்களில், பவன் கல்யாணின் தாக்கம் நிச்சயம் இருக்கும். சினிமா துறையின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் திரைப்பட தலைநகராக ஐதராபாத்தை மாற்ற பாடுபடுவேன். அதற்காக எனது ஒத்துழைப்பையும் தருவேன்” என்று கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil