’கோப்ரா’ ரிலீஸ் தேதி எப்போது?: ரசிகரின் கேள்விக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர்

’கோப்ரா’ படத்தினை வெளியிட திட்டமிடும் தேதியை அறிவித்திருக்கிறார், அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார் விக்ரம். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குநர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது.

image

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ’எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு. இன்னும் கோப்ரா ரிலீஸ் தேதிதான் வராம இருக்கு” என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை டேக் செய்திருந்தார். இந்த நிலையில், ரசிகரின் ட்விட்டை ரீட்விட் செய்து, “வரும் மே 26 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று உற்சாகமுடன் பதிலளித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்