இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அத்தி வரதர் வைபவம் - 2019  https://ift.tt/0RAQfeW

படம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதற்காக, 20 அடி ஆழமும், 2.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அனந்த சரஸ் புஷ்கரணி தீர்த்த குளத்தில் 40 ஆண்டுகளாக வாசம் செய்து வந்த அத்திவரதரை வெளியே எடுப்பதற்காக, குளத்தில் இருந்த தண்ணீர், மின்மோட்டார்கள் மூலம் கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள பொற்றாமரை குளத்துக்கு மாற்றப்பட்டது. அதில், வளர்ந்த மீன்களும் பாதுகாப்பான முறையில் அக்குளத்துக்கு மாற்றப்பட்டன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் 40 ஆண்டுகளாக நீருக்குள் இருந்த அத்தி வரதர் ஜூன் 28-ம் தேதி வெளியில் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் உள்ள நீர் வடிவதற்காக வசந்த மண்டபத்தில் வைத்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுத்தடுத்த அப்டேட்களால் குஷியில் சிம்பு ரசிகர்கள் - ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம்
நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ள சிம்புவின் ‘பத்து தல’ படம் வருகிற டிசம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்தான் ‘பத்து தல’. அந்தப் படத்தை கன்னடத்தில் இயக்கிய இயக்குநர் நார்தன் தான் இந்தப் படத்தை முதலில் இயக்கினார். பின்னர் சில காரணங்களால் அவர் விலக ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்

’2019ல் முதலில் பரிந்துரைத்ததே இவரைத்தான்’ - கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

படம்
நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீகரகத்தின் கோல்டன் விசா கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களான ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், அமலா பால், லஷ்மி ராய், பாடகி சித்ரா, மீனா, காஜல் அகர்வால், விஜய் சேதுபதி, பார்த்திபன், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், பிரணிதா உள்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது துபாயில் உள்ள நடிகர் கமல்ஹாசன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது

”வேண்டாம் தற்காலிக ஆசிரியர்கள்; போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்க“ - வேல்முருகன்

படம்
தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, சென்னையில் போராடிவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்போது 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடமும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும் 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளன. மொத்தம் 13,331 காலிப் பணியிடங்கள். இந்தப் பணியிடங்களில் இடைக்கால ஆசிரியர்களை நியமிக்க முடிவெடுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை, அவர்களை ஜூலை 1-ம் தேதி முதல் பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. இது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள், பள்ளிகளில் தங்களை பணியமர்த்தக்கோரி 3ஆம் நாளாக சென்னை டிஜிபி வளாகத்தில் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் த

ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா - 'அருமை தம்பி' எனப் பாராட்டிய கமல்ஹாசன்

படம்
ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு வந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக அளவில் திரையுலகப் பிரபலங்களிடையே மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு, பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளை வழங்கும் தேர்வுக்குழுவில், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 4000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். விருதுக்கான படங்களை பரிந்துரை செய்யும் குழுவின் உறுப்பினர்களான இவர்கள் தங்களுக்குப் பிடித்த படங்களுக்கு வாக்களிக்க முடியும். இந்தச் சிறப்புக்குரிய ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகரும் இல்லை. இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு, ஆஸ்கர் விருது விழாவில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் உறுப்பினராக சேர அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன், சூர்யாவுக்கு தனது ட்விட்டர் வாயி

போலீஸ் பாதுகாப்புடன் நெல் விதைப்பை தொடங்கிய விவசாயிகள்.. காரணம் இதுதான்!

படம்
மயிலாடுதுறை அருகே நேரடி நெல் விதைப்பு தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருவதால், சில கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு தொடங்கி நடைபெற்றது. பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தால் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய கூலி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனிடையே பருத்திக்குடி கிராமத்தில் மூன்று விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்ய உள்ளனர். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, மேல பருத்திக்குடி மற்றும் கீழப் பருத்திக்குடி, காலனி தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்க

அத்தி வரதர் வரலாறு - ஓர் அறிமுகம் https://ift.tt/6yAUDIv

படம்
ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர், தனது காரியம் செவ்வனே நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்தார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை. சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, பிரம்மதேவர் சரஸ்வதி தேவிக்கு பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார். சினம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப் பெருக்கெடுத்து வந்தாள். பிரம்மதேவரின் யாகத்தைக் காக்கத் திருவுள்ளம் கொண்ட திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார். வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது. தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், பெருமாளைப் பணிந்து தொழுதார். தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்’ என்ற திருப்பெயர் கொண்டார். ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ண

அத்திவரதர்: பிரம்மதேவன் போற்றிய பேரருளாளன்  https://ift.tt/87d32VT

படம்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் சிறப்புமிக்க தொண்டை மண்டத்து திவ்ய தேசமாகத் திகழ்வது காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயில். இது காஞ்சி மாநகரத்தின் கீழ்க்கோடியில் சிறப்புற அமைந்துள்ளது. உயர்ந்த கோபுரங்களும் நெடிதுயர்ந்த மதில்களும் அவற்றின் நடுவே விளங்கும் புண்ணியகோடி விமானமும் வெகுதூரத்தில் இருந்தே நமக்கு காட்சி நல்குகின்றன. இவ்விமானத்தின் கீழ் அஸ்திகிரி என்னும் சிறு மலையின் மேல் ஸ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து வெளியான அப்டேட்

படம்
நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி வருவதாக புகைப்படத்துடன் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவரான டி. ராஜேந்தர், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் என டி.ராஜேந்தரரின் மகனும், முன்னணி நடிகருமான சிம்பு அண்மையில் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். இதையடுத்து டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யவும், அறுவை சிகிச்சையை விரைவாகச் செய்யவும், அவருக்கு முன்னதாகவே, அவரின் மகன் சிம்பு அமெரிக்கா சென்றார். இதனைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது என் மகன் சிலம்பரசனுக்காக தான் உயர் சிகிச்சைக்கு செல்கிற

விஜயின் ‘வாரிசு’ பட தயாரிப்பாளருக்கு குழந்தை பிறந்தது - குவியும் வாழ்த்துகள்

படம்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து, அவருக்கு பிரபலங்கள் பலரும்  வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. 51 வயதான தில் ராஜூவின் முதல் மனைவி அனிதா உடல்நிலை குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தநிலையில், இரண்டவதாக தன்னை விட மிகவும் குறைந்த வயதுடைய தேஜஸ்வினி என்கிற வைகா ரெட்டி என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து கர்ப்பமாக இருந்த தில் ராஜூவின் மனைவி வைகா ரெட்டிக்கு இன்று காலை ஐதராபாத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருக

பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ் - பிரபல நடிகர் தான் காரணம்?

படம்
‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பெருமான் ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். அதுவும் அவரின் தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் தாஸ் கதாபாத்திரத்தில் அர்ஜூன்தாஸ் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் வரவேற்பு பெற்றநிலையில், ‘விக்ரம்’ படத்தின் கிளைமேக்சில், ‘கைதி’ அன்புவாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அர்ஜூன் தாஸ் பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 86 புதுமுகங்களைக் கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இளைஞர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக வரும் ஆண

‘இந்தியாவில் மட்டும் இல்ல’... வெளிநாடுகளையும் மிரள வைக்கும் ‘விக்ரம்’

படம்
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இந்தியாவைத் தாண்டி, வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் இழப்பை சந்தித்த கோலிவுட் திரையுலகத்தில், அடுத்து அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களாக வெளியாகி வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’, நெல்சனின் ‘டாக்டர்’, விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சிபி சக்ரவர்த்தியின் ‘டான்’ ஆகியப் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றன. இதேபோல் சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’, ஹெச். வினோத்தின் ‘வலிமை’, நெல்சனின் ‘பீஸ்ட்’ ஆகியப் படங்கள் நல்ல வசூலையும் ஈட்டி இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் பெற்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 26 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் ஷங்கரின் ‘2.O’ படத்திற்குப் பிறகு, கோலிவுட்டில் ‘விக்ரம்’ படம் தான் வசூல் வேட்டையாடி வருகிறது. திரையரங்குகளில் இன்றும் வரவேற்பு கிடைத்

‘வெந்து தணிந்தது காடு’ - டீசருடன் வெளியானது மாஸ் அப்டேட்! குஷியில் சிம்பு ரசிகர்கள்

படம்
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மாநாடு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் 3-வது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ள புதிய டீசர் வீடியோ வியூஸ்களை குவித்து வருகிறது. இதையும் படிக்கலாம்: `எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’ Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News |

ஆட்டத்துக்கு ரெடியான லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம்
லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’ . இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்துள்ளார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, மறைந்த விவேக், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ‘மொசலோ மொசலு’, ‘வாடி வாசல்’ ஆகிய இரண்டு பாடல்களும் யூ-ட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவை லெஜண்ட் சரவணன் பிரம்மாண்ட நடத்தி முடித்திருந்தார்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!

படம்
2022-ம் ஆண்டு துவங்கி அரை வருடங்கள் கடக்க இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த பிரபலங்களில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றே நமது வாழ்க்கையில் அத்தியாவசிய தேவையாக இருந்தது. இந்த மூன்றுடன் தற்போது 4-வதாக செல்ஃபோனும் சேர்ந்துள்ளது என்றால் மிகையாது. வீட்டில் பக்கத்து ரூமில் இருக்கும் நமது உறவுகளை கூப்பிடக் கூட செல்ஃபோன் தான் உதவுகிறது. அந்த அளவுக்கு செல்ஃபோன் பயன்பாடு அதிகரித்து வரும்நிலையில், பெரியவர்களிடம் ஒரு விஷயங்களை கேட்பதெல்லாம் பழைய காலமாகி, பெரியவர்களுக்கே சிறிய குழந்தைகள் கற்றுக் கொடுக்கும் அளவும் இந்த செல்ஃபோன் மூலம் கூகுளில் எதை தட்டினாலும் கிடைக்கிறது. ஒருவர் பேசும், எழுதும் விஷயங்களை கூட கூகுள் பயன்பாடு இல்லாமல் சொல்ல, எழுத முடியாத நிலை உருவாகி விட்டது என்றே சொல்லலாம். அதன்படி அரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ஜூன் மாதம் 23-ம் தேதி அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த 100 பிரபலங்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய

'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!

படம்
கமல்ஹாசன் - கிரேஸி மோகன் காம்போவில் வந்த படங்கள் அனைத்தும் பக்கா எண்டெர்டெயினரா இருந்தாலும் 2002ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்துல வெளியான பஞ்சதந்திரம் எப்போதுமே மாஸ்டர்பீஸ்னுதான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு எத்தனை முறை பாத்தாலும் அள்ள அள்ள கிடைக்குற அட்சய பாத்திரம் மாதிரி வயிறு குலுங்க குலுங்க சிரிக்குற அளவுக்கு படம் நெடுக காமெடியின் அம்சம் அமோகமா இருக்கும். படம் வெளியாகி இன்றோடு 20 வருஷம் ஆகியிருக்க நிலையில, படத்த பத்தின கதை எல்லாருக்குமே பெரும்பாலும் தெரிஞ்சுருக்கும். ஆனால் இப்போ நாம பாக்க போறதே பஞ்சதந்திரம் படத்தோட வேற டைமென்ஷன்தான். அது என்னனா? கல்ட் example ஆக இருக்குற பஞ்சத்தந்திரம் படத்துக்கு வசனம் எழுதிய கிரேஸி மோகன் அதுல ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்க இருந்தாரு. அது எந்த கதாப்பாத்திரம்னு தெரியுமா? பஞ்சத்தந்திரம் படம் வெற்றிபெற முக்கிய காரணம் என்ன? எதனால இத்தனை வருஷமாகியும் இந்த படம் நிலைச்சு இருக்கு? இப்படி பல சுவாரஸ்யமான தகவல்கள பத்திதான் பார்க்க போறோம். ஹாலிவுட்டிலும் செரி, இந்தியாவில் உள்ள எல்லா cinema woodலயும் சரி மல்டிகாஸ்ட் படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம்தான் இருக

`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’

படம்
விக்ரம் படம், கமலின் திரைப்பயணத்தில் வெகுநாட்கள் கழித்து மிகப்பெரிய வசூல் ரீதியான வெற்றியை கொடுத்த படம். இந்த பெருமையுடன், கொரோனாவுக்குப் பின் தமிழ் சினிமாவை மீட்டெடுத்த பெருமையும் விக்ரமுக்கு உண்டு. இப்படி இன்றைய சூழலில் பல பெருமைகளை கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கான பல வழிகளில் ப்ரமோஷன் செய்தது படக்குழு. அதில் முக்கியமான ஒன்று நடிகர்கள் ஜெயராம் - ஸ்ரீமன் - யூகி சேது - ரமேஷ் அரவிந்த் ஆகியோரின் நடிப்பில் - கமலின் ப்ரசன்ஸூடன் வெளியான ப்ரமோ. இந்த `பஞ்சதந்திர’ மேஜிக் கூட்டணி இணைந்து நடித்திருந்த `பஞ்சதந்திரம்’ படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. 20 ஆண்டுகள் கழித்தும், இப்போதும் பஞ்சதந்திரம் ரசிகர்கள் மத்தியில் நிரம்பிக்கிடக்க காரணம், அது எடுத்துக்கொண்ட நகைச்சுவை ஜானர் மிகமுக்கிய காரணம். பஞ்சதந்திரம் கதைகளத்தின்படி, 5 நண்பர்கள். ஒவ்வொருத்தரும் தென் இந்தியாவின் ஒவ்வொரு மொழி பேசுபவர். ஒருவர் மலையாளம், ஒருவர் தெலுங்கு, ஒருவர் கன்னடம், ஒருவர் தமிழ், இன்னுமொருவர் மேற்கூறிய நான்கு மொழியையும் சகஜமாக பேசுபவர். இந்த ஐவரையும் இணைக்கும் புள்ளி, ஃப்ரெண்ட்ஷிப்! என்ன ஆனாலும் இணைபிரியாத அந்த ஐவ