இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

`ச்ச... என்னா மனுஷன்யா’- அப்டேட்களைத் வாரி வழங்கிய தளபதி 67 படக்குழு! குஷியில் ரசிகர்கள்!

படம்
நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டது. அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள அப்டேட்களை  மட்டும், இந்தத் தொகுப்பில் பார்ப்போம். 'வாரிசு' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இம்மூவரும் 2வது முறையாகக் கூட்டணி அமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அதேநேரத்தில், ‘தளபதி 67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை (ஜனவரி 30) வெளியானது. ’விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ’தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67ல் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது’ என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் மத்தியில் இப்பதிவுகள் வைரலாகின. Good evening guys! More than

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி சண்முக நதிக்கரையில் 23 அடிக்கு வேல் https://ift.tt/q8dyAM1

படம்
பழநி : பழநி சண்முக நதிக்கரையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 23 அடி உயரத்திற்கு ஐம்பொன்னால் ஆன வேல் நிறுவப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

`நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி எங்க நிலத்தை வாங்க வேண்டும்”- கடலூர் விவசாயிகள்

படம்
“என்.எல்.சி க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி, கடலூரில் 7 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து `குறை தீர்க்கும் கூட்டத்தில்’ மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூரில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. கடலூரில் கடந்த 1957 ம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் இருந்து கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்படி இதுவரை 69 கிராமங்களில் பழுப்பு நிலக்கரியின் இருப்பு அறியப்பட்டு, அங்கிருந்த இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இன்னும் 29 கிராமங்களில் நிலக்கரியின் இருப்பு அறியப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அங்குள்ள விவசாயிகள், தங்களின் நிலங்களை என்.எல்.சிக்கு தர இம்முறை சில நிபந்தனைகள் விதித்துள்ளனர். அதில் “என்.எல்.சி எங்கள் நிலத்தை தோண்டி எடுத்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 6.50 கோடி முதல் ரூ. 12 கோடி வரை லாபம் ஈட்டுகிறது. அதே சமயம் எங்களுக்கு சொற்ப தொகைதான் தருகிறது. ஆகவே எங

வெளியானது ஹன்சிகாவின் திருமண வீடியோ டீசர்! என்ன ஆனது நயன்-விக்கியின் திருமண வீடியோ?

படம்
ஹன்சிகாவின் திருமண ஆவணப்படத்தின் முழு வீடியோ எப்போது வெளியாகும், அதில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலுடன் டீசர் ஒன்றை பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் முன்னிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா பேலஸில் தனது காதலரான சோஹெல் கத்தூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி கரம் பிடித்தார் நடிகை ஹன்சிகா. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக, டீசருடன் நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த டீசர், ஹன்சிகா அவரது தாயாருடன் கலந்துரையாடும் வகையில் உள்ளது. இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண வீடியோ குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 'Nayanthara: Beyond The Fa

`ஒன்லைன் கேட்டபோதே முடிவுபண்ணிட்டேன்’- தளபதி 67-ல் மிரட்ட வரும் சஞ்சய் தத்!

படம்
விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று காலை தனி விமானத்தில், படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அங்கு நாளை முதல் நடைபெற உள்ளதாகவும், அங்கு துவங்கும் படப்பிடிப்பில் சஞ்சய் தத் உள்பட முக்கிய நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அதனை உறுதிசெய்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. We feel esteemed to welcome @duttsanjay sir to Tamil Cinema and we are happy to announce that he is a part of #Thalapathy67 #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/EcCtLMBgJj — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்கி வரும் சஞ்சய் தத், ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் மூலம் கன்னட திரையுலக

‘தளபதி 67’ படக்குழுவினருடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த்? - வைரலாகும் புகைப்படங்கள், வீடியோ!

படம்
விஜய்யின் ‘தளபதி 67’ படக்குழுவினருடன் நடிகைகள் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் - தயாரிப்பாளர் லலித்குமார் 2-வது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ‘தளபதி 67’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை தந்து கவனம் ஈர்த்துள்ளதால், ‘தளபதி 67’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ‘மாஸ்டர்’ படம் போன்று இல்லாமல், இந்தப் படம் 100 சதவிகிதம் தனதுப் படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதால், படத்தின் மீதான ஆர்வம் கூடுதலாக இருந்து வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கியுள்ளது தெரிய வந்தாலும், நேற்று மாலை தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் இன்று காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனைப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும் விமான டிக்கெட்டை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். Actress #PriyaAnand Flying to Kashmir for #Thala

தை கிருத்திகையை முன்னிட்டு பழநியில் தரிசினத்திற்கு குவிந்த பக்தர்கள் https://ift.tt/9gDw4Ob

படம்
பழநி : பழநி முருகன் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்குமா தமிழக அரசு?

படம்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் மொழியியல் சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக வரும் ஆறாம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்களிக்கக்கோரி மொழி சிறுபான்மையினர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டிருந்த இந்த அறிவிப்பு ஆணையை ரத்துசெய்ய கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மொழியியல் சிறுபான்மையினராக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடிய சூழலில் அரசின் இந்த முடிவினால் அவர்களது கல்வி பாதிக்கப்படும் என வாதிட்டார். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேறு மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களுக்க

‘வீர சிம்ஹா ரெட்டி பார்த்து தலைவர் ரஜினி சொன்ன அந்த வார்த்தைகள்’ - கோபிசந்த் நெகிழ்ச்சி!

படம்
பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குநரை, நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில், நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், வரலஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு சங்ராந்தியை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், இதுவரை ரூ. 129.58 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கோபிசந்த் மாலினேனியை தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உண்மையிலேயே இது ஒரு அதிசயமான தருணம். தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. படத்தைப் பார்த்து மிகவும் பிடித்ததாகக் கூறினார். அவர் உணர்ச்சி மிகுந்து

வெளியானது தளபதி 67 அப்டேட்.. ஃபோட்டோ வெளியிட்ட லோகேஷ்.. குஷியில் ரசிகர்கள்!

படம்
விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்குகிறார் என்ற ஊரறிந்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ. அதன்படி தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என இன்று (ஜன.,30) பிற்பகல் 3 மணியளவில் 67 புள்ளிகளை மட்டும் வைத்து 6.07 மணிக்கு அறிவிக்கப்படும் என ட்விட்டரில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பதிவிட்டிருந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் ட்விட்டரில் #Thalapathy67 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் சரியாக 6.07 மணிக்கு தளபதி 67-ஐ நாங்கள்தான் தயாரிக்கிறோம் என்று ட்விட்டரில் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். The one & the only brand #Thalapathy67 , is proudly presented by @7screenstudio We are excited in officially bringing you the announcement of our most prestigious project We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97 — Seven Screen Studio (@7screenstudio) January

ஷாருக்கானை பதான் என அழைத்து ‘ஹே ராம்’ படத்திலேயே கணித்த கமல்ஹாசன்

படம்
‘பதான்’ படம் பாக்ஸ் ஆபிஸீல் தாறுமாறான வெற்றி அடைந்து வரும் நிலையில், 20 வருடங்களுக்கு முன்னரே உலக நாயகன் கமல்ஹாசன் ‘ஹே ராம்’ படத்திலேயே, ஷாருக்கானை பதான் என அழைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியானதால் எழுந்த எதிர்பார்ப்புகளையும் மீறி, கடந்த 5 நாட்களில் 542 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது ‘பதான்’. ‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’ படங்களின் சாதனைகளையெல்லாம் அசால்ட்டாக கடந்து வரும் நிலையில், இந்தப் படத்தின் பெயருக்கும், கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பை குறித்து அறியலாம். தமிழ் சினிமாவில் எப்போதும் தொழில்நுட்ப விஷயங்களிலும் சரி, நடிப்பு சார்ந்த விஷயத்திலும் சரி பரீட்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர் கமல்ஹாசன். அந்தவகையில் கடந்த 2000-ம் ஆண்டு ‘ஹே ராம்’ என்றப் படத்தை நடிகர் கமல்ஹாசன், எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தும் இருந்தார். இந்தப் படத்தில் சாக்கேத் ராம் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், அவரது ந

‘தளபதி 67’ படத்தில் சிம்பு,ரக்ஷித் ஷெட்டி ?படத்தை இந்த தேதியில் வெளியிட படக்குழு திட்டம்?

படம்
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் ‘தளபதி 67’ படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மனோபாலா, நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் கதையாகவும், லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கதையாகும் உருவாகி வருவதால், ஏராளமான நடிகர்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தாலும், இந்தப் படம் சம்பந்தமான புரோமோ அல்லது புகைப்படங்கள் என எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இதுதொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளை குறித்து வைத்துக்கொள்ளுமாறும், அது மட்டும் தான் தன்னால் சொல

25 ஆண்டுகளுக்கு பின் கம்பேக்... ஜோதிகாவின் உருக்கமான பதிவுக்கு சூர்யா போட்ட வாவ் கமெண்ட்!

படம்
நீண்ட வருடங்கள் கழித்து நடிகை ஜோதிகா இந்தி படம் ஒன்றில் நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட பகுதியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து புகைப்படத்துடன் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜோதிகா. அதற்கு நடிகர் சூர்யா தனது கருத்தை தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘Doli Saja Ke Rakhna’ என்ற படத்தின் மூலம் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், சூர்யாவின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் வாயிலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ‘முகவரி’, ‘குஷி’, ‘தெனாலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்ததுடன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். எனினும், சில வருடங்களில் ‘36 வயதினிலே’ ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, பெண்களை மையப்படுத்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாரடைப்பால் உயிரிழந்த இளம் ரசிகர் - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி

படம்
சென்னையில் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளராக இருந்த 29 வயதான வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வினோத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வினோத்தின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். வினோத் வயது 29. தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக உள்ளார். வினோத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். @Karthi_Offl pic.twitter.com/uuJxe7mueR — Ramesh Bala (@rameshlaus) January 29, 2023 கடந்த ஆண்டு வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் - 1’, ‘சர்தார்’ என அடுத்தடுத்த 3 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக

‘எப்போதும் நான் காமெடியன்தான்... அதுதான் எனது தொழில்’ - ‘பொம்மை நாயகி’ விழாவில் யோகி பாபு!

படம்
‘பொம்மை நாயகி’ திரைப்படம் வருகிற 3-ம் தேதி வெளியாகவுள்ளதை முன்னிட்டு நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் யோகி பாபு தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசும்போது, “யோகி பாபு ஒரு நல்ல நடிகர். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அவரின் நடிப்பு மிகவும் பிடித்து இருந்தது. அதை வைத்து தான் இந்தப் படத்திற்கு அவரை தேர்வு செய்தோம். கதை எனக்கு ரொம்ப பிடித்தது. கழிவிரக்கம் என்பது எனக்கு சரியானது இல்லை. ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். அவ்வாறு உள்ள கதைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன். யோகி பாபுவை வைத்து தான் இந்தப் படத்தை கொண்டு செல்வோம். இந்த சமூகம் எனக்கு தந்ததை திருப்பி தர வேண்டும் என்ற சமூக அக்கறை தான் என்னுள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் சிறிய படங்களை ஓடிடி தளங்கள் வாங்கியது. ஆனால் தற்போது அவற்றை வாங்குவது இல்லை. நிறைய சின்ன தயாரிப்பாளர்கள் தங்கள்

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ்

படம்
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று

‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’ சாதனையை முறியடித்த ‘பதான்’ - 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்

படம்
ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது.  ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், சல்மான்கான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த இந்தப் படத்தை, ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான 4 நாட்களில் ரூ. 415 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 218. 75 கோடி வசூலை ஈட்டி, 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்தியில் அதிவேகத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற பெருமையையும் ‘பதான்’ படம் பெற்றுள்ளது. #Pathaan crosses ₹ 400 Crs gross at the WW Box office in 4 days.. — Ramesh Bala (@rameshlaus) January 29, 2023 இந்தியில், ‘கே.ஜி.எஃப். 2’ வின் முதல்நாள் வசூல் சாதனையான ரூ. 53.95 கோடியை முந்தி, ரூ. 55 கோடி வசூலித்திருந்தது ‘பதான்’. தற்போது எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படம் 6 நாட்களிலும், யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படம் 5 நாட்களிலும், பாலிவுட்டில் படைத்த

திருமலையில் ரத சப்தமி விழா - ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் திருவீதி உலா https://ift.tt/DgVnsBC

படம்
திருமலை : திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல், இரவு வரை தொடர்ந்து 7 வாகனங்களில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி, அனைத்து சிறப்பு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சூரிய ஜெயந்தி, மினி பிரம்மோற்சவம் என்றழைக் கப்படும் இவ்விழாவில், திரளானபக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தாகோவிந்தா’ என பக்தி திளைக்ககோஷமிட்டு ஏழுமலையானை வழிபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

`ரஜினிகாந்த் பெயர், குரல், போட்டோவை அனுமதியின்றி பயன்படுத்தினால்...’-வழக்கறிஞர் எச்சரிக்கை

படம்
நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும், மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுகிறார். திரையுலகம் முழுவதும் ரசிகர் பட்டாளமும், மரியாதையும் ஒப்பிட முடியாதது. மறுக்க முடியாதது. குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பில், அவரது நற்பெயர் அல்லது ஆளுமைக்கு ஏதேனும் சேதம் எற்பட்டால் அது ரஜினிகாந்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ரஜினிகாந்திற்கு அனைத்து அம்சங்களிலும் உள்ள ஆளுமை, பப்ளிசிட்டி, உரிமை உள்ள நிலையில், அவரது பெயர், குரல், புகைப்படம், கேலிச்சித்திரப ;படம், கலைப் படம், கணினி செயற்கை நுண்ணறிவு மூலம் உ

கோலிவுட்டுக்கு வரும் `சீதா மகாலக்‌ஷ்மி’? மிருணால் தாகூர் கோலிவுட் எண்ட்ரி இந்தப் படத்திலா?

படம்
'சீதா ராமம்' படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை மிருணால் தாகூர், கோலிவுட்டில் 'சூர்யா 42' படத்தின்மூலமாக கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்காலம் கலந்து வரலாற்றுப் பின்னணியில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் நடிகர் சூர்யாவின் அதிகபட்ச பொருட்செலவில் உருவாகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இந்தி திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகவுள்ளது. அதன்படி, 'சூர்யா 42' படத்தில் ஒரு குறிப்பிட்ட

”இருந்தாலும் நியாயம் வேண்டாமா?” - ரசிகரின் ஃபோனை ரன்பீர் தூக்கியெறிந்தது இதற்குதானாம்!

படம்
சினிமா பிரபலங்கள் பொது வெளியில் வரும் போது ரசிகர்கள் படை சூழ்ந்து ஃபோட்டோ எடுக்கத் தொடங்கி விடுவார்கள். கூட்டம் அதிகபடியாக கூடிவிட்டால் வேறு வழியில்லாமல் நட்சத்திரங்கள் வேக வேகமாக அவ்விடத்தை காலி செய்யும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நித்தமும் வெளியாவதுண்டு. இப்படி இருக்கையில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவும், நடிகை ஆலியா பட்டின் கணவருமான ரன்பீர் கபூருடன் இளைய ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முற்பட்டிருக்கிறார். அப்போது சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த ரன்பீர் திடீரென அந்த ரசிகரின் கையில் இருந்த ஃபோனை வாங்கி பின்னால் தூக்கி எறிந்திருக்கிறார். Shocking  Ranbir Kapoor THROWS Fan's Phone for annoying him for a Selfie. #RanbirKapoor pic.twitter.com/dPEymejxRv — $@M (@SAMTHEBESTEST_) January 27, 2023 வெறும் ஆறு நொடி மட்டுமே இருந்த அந்த வீடியோ நாடுமுழுக்க பட்டித் தொட்டியெங்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 40 வயதை தொட்டபின்னரும்கூட, ஒரு குழந்தைக்கு தந்தையான பின்னரும்கூட பாலிவுட்டின் சாக்லேட் பாயாகவே இப்போது வரை இருந்து வரும் ரன்பீர் கபூர் இப்படியா கோபத்தில் பொதுவெளியில

அஜித்தின் AK 62-ஐ இயக்கப் போவது இவரா? அண்மைத் தகவலால் ரசிகர்கள் ஆரவாரம்..!

படம்
ட்விட்டர் தளத்தில் எங்கு காணினும் அஜித்தின் 62வது படம் குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. இதனால் #AK62 , #Ajithkumar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக ஹெச்.வினோத் இயக்கத்திலேயே நடித்திருந்த நடிகர் அஜித்குமார் அவரது 62வது படத்துக்காக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், அதை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்றதும் ரோம்-காம் பாணியிலான கதையாக இருக்குமோ என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தார்கள். ஷூட்டிங் பணிகளும் விரைவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் Thank U #AjithSir for this greatest opportunity to work with you for the prestigious #AK62 Words can’t explain the happiness With my king @anirudhofficial again  & @LycaProductions   pic.twitter.com/xFnT8jGSEf — WikkiFlix (@VigneshShivN) Marc

தூத்துக்குடி | புனித அந்தோணியார் திருத்தல திருவிழா தொடக்கம் https://ift.tt/4XcvUOf

படம்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை ஆண்டுப் பெருவிழா நடைபெறும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்... தூக்கியெறிந்த ரன்பீர் கபூர்! என்ன நடந்தது?

படம்
செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தூக்கி எறிந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார், ரன்பீர் கபூர். இவர் நடிகை ஆலியா பட்டின் கணவரும் ஆவார். இவருக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதில் ரசிகர் ஒருவர், ரன்பீரை பார்த்த சந்தோஷத்தில் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அவரும், அந்த ரசிகருடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளார். ஆனால், ரசிகர் தன் செல்போனில் எடுத்த கேமராவில், ரன்பீருடன் எடுத்த செல்ஃபி பதிவாகவில்லை எனத் தெரிகிறது. இதனால், மறுமுறையும் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அப்போதும் பதிவாகவில்லை. ஆகையால் மீண்டும் இன்னொரு முறை அந்த ரசிகர் முயற்சி செய்ய, அதில் கோபமடைந்த ரன்பீர் கபூர், அந்த ரசிகரின் போனை தூக்கி எறிகிறார். அதன்பின், அவரைக் கண்டுகொள்ளாமல் ரன்பீர் விலகி செல்கிறார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “ரன்பீர் கபூர் செய்த செயல் வருத்தத்தைத் தருகிறது” எனப் பதிவிட்டும் வருகிறார்கள்.

ஒருவேள ஸ்பூஃப் கல்லூரியா இருக்குமோ! எந்த ஊர் காலேஜுங்க இது..? எப்படியிருக்கு Engga Hostel

படம்
கனவுகளுடன் பொறியியல் கல்லூரிக்கு வரும் ஜூனியர்களும், அவர்களை ரேகிங் செய்யும் சீனியர்களும், இவர்கள் படிக்கும் கல்லூரியில் நடக்கும் தில்லுமுல்லுகளுமே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் #EnggaHostel கதைக்களம். எல்லா பொறியியல் கல்லூரிகளைப் போலவும் இந்தக் கல்லூரியிலும் ரேகிங் கொடிகட்டிப் பறக்கிறது. அதென்ன எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் என்கிறீர்களா? அதாவது சினிமாக்களில் காட்டப்படும் எல்லா பொறியியல் கல்லூரிகளிலும். என்னதான் ரேகிங் என்பதெல்லாம் அப்பாஸ், வினித் நடித்த காதல் தேசத்து காலத்திலேயே பல கல்லூரிகளில் மறைந்துவிட்டாலும், தமிழ் சினிமாவில் மட்டும் இன்னும் அது ஓய்ந்தபாடில்லை. அதிலும் புதிது புதிதாக வெவ்வேறு மாடலில் ரேகிங்கிற்கான சிந்தனையுடன் கல்லூரி தொடர்பான காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அப்படியானதொரு கல்லூரிக்குள் முதலாமாண்டு மாணவர்களாக அடியெடுத்து வைக்கிறார்கள் ஜெய வீர பாண்டியன், யுவராஜ், அஹானா, ராஜ திலகம், அஜய் , செந்தில். கல்லூரி என்றால் ஹாஸ்டல் இருக்கும். ஹாஸ்டல் என்றாலே அங்கே ஒரு ஏழரை சீனியர் ரேகிங் செய்ய காத்திருப்பான் என்னும் அடிப்படையில், அகஸ்மாத்தாய் அமர்ந்திருக்கிறார் சித்தப