புதுச்சேரியில் முதல் முறையாக ஆதி புஷ்கரணி விழா - ஏராளமான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வழிபாடு https://ift.tt/QUJdKV0

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆதிபுஷ்கரணி விழா இன்று தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.

நவகிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குரு பகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு, அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும். மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் சனிக்கிழமையான இன்று பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, மேஷ ராசிக்குரிய நதியான, புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா தொடங்கியது. சங்கராபரணி ஆறு வடக்கு நோக்கி பாய்வதாலும் கங்கைக்கு நிகரானது என்பதாலும் இந்த புஷ்கரணி விழா மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்