இடுகைகள்

பிரதீப் குமாரின் பிரமாதமான குரலில் கவனம் ஈர்க்கும் துல்கரின் ‘ஹே சினாமிகா’ பாடல்

படம்
துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ’தோழி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் ’ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹே சினாமிகா’ வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு துல்கர் நடிக்கும் தமிழ் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் துல்கர் குரலில் ‘அச்சமில்லை’ பாடல் வெளியான நிலையில், தற்போது ’தோழி’  பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. கோவிந்த் வசந்தா இசையில் மென்மையாக ஒலிக்கும் பிரதீப் குமாரின் பிரமாதமான குரல் ரிப்பீட் மோடில் காதுகளிலும் மனதிலும் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. மழை பின்னணியில் ’யாரோடும் காணாத தூய்மையை உன்னில் நான் காண்கிறேன்’ என்று துவங்கும் பாடல் துல்கர்-கா

இன்று முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

படம்
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல்நாள், சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த கலந்தாய்வுகள் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருக்கிறது. 30ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்குகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘மாறன்’: நடனத்தால் கவனம் ஈர்க்கும் தனுஷின் ‘பொல்லாத உலகம்’ பாடல்

படம்
தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ படத்தின் ’பொல்லாத உலகம்’ பாடல் வெளியாகியுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தமாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடல் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறது படக்குழு. ஆரம்பத்தில் புல்லட்டில் செம்ம ஸ்டைலாக படுத்திருக்கும் தனுஷ், பாடலின் எண்டுவரை ஃபுல் எனர்ஜியுடன் ஆடி நடனத்தால் கவனம் ஈர்க்கிறார். நடனம் மட்டுமல்ல உடலையும் உற்றுநோக்க வைத்திருக்கிறார். கொஞ்சம் எடையைக் கூட்டி ஃபிட்டாக காட்சியளித்து ‘குட்’ சொல்ல வைக்கிறார். விவேக் எழுதியுள்ள இப்பாடலை தனுஷும் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து பாடியுள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

சென்னையில் துவங்கும் ’சிவகார்த்திகேயன் 20’ படப்பிடிப்பு

படம்
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சிவகார்த்திகேயன் 20’ படத்தின் படப்பிடிப்பு இந்தவாரம் துவங்கவுள்ளது. ’டாக்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தினைத் தொடர்ந்து, தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 20 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தின் இதன் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியான நிலையில், படப்பிடிப்பு இந்த வார இறுதியில் சென்னையில் துவங்கவுள்ளது. ஏற்கனவே, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் வெளியாகி வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

அருண் விஜய்யின் ‘யானை’ டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய ஓடிடி தளம்

படம்
’யானை’ படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராய் இருக்கிறது. இந்த நிலையில், ‘யானை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News