பிரதீப் குமாரின் பிரமாதமான குரலில் கவனம் ஈர்க்கும் துல்கரின் ‘ஹே சினாமிகா’ பாடல்

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ’தோழி’ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் ’ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹே சினாமிகா’ வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு துல்கர் நடிக்கும் தமிழ் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் துல்கர் குரலில் ‘அச்சமில்லை’ பாடல் வெளியான நிலையில், தற்போது ’தோழி’  பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. கோவிந்த் வசந்தா இசையில் மென்மையாக ஒலிக்கும் பிரதீப் குமாரின் பிரமாதமான குரல் ரிப்பீட் மோடில் காதுகளிலும் மனதிலும் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. மழை பின்னணியில் ’யாரோடும் காணாத தூய்மையை உன்னில் நான் காண்கிறேன்’ என்று துவங்கும் பாடல் துல்கர்-காஜல் அகர்வாலுக்கான நட்பு மழை போன்று தூய்மையானது என்று உணர்த்த மழையை குறியீடாய் வைத்து உருவாக்கி ரசிகக் வைத்துள்ளார்கள். பாடல் நடுவில் ’தோழி.. தோழி.. என்ன தோழி... சொல்லடி’ என்று வரும் பிரதீப் குரல் இன்னும் ‘டீப்’பாய் மனதில் பதிந்து கவனம் ஈர்த்துவிடுகிறது.

பிரதீப் குமார் குரலில் சமீபத்தில் ஜோஜு ஜார்ஜின் ‘மதுரம்’ படத்தின் ‘பரிமித நேரம்’, டொவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’ படத்தில் குரு சோமசுந்தரத்திற்கு வரும் ‘ரவில்’ பாடல்கள் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்தன. இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’ படத்தின் பலரின் சூப்பர் ஹிட் அடித்து இப்போதும்கூட பலரின் காலர் ட்யூனாக ஒலிக்கும் ‘ஆசை ஓர் புல்வெளி, ’மெட்ராஸ்’ படத்தின் ‘ஆகாயம் தீப்பிடிச்சா’, ’குக்கூ’ படத்தின் ‘ஆகாசத்த நான் பாக்குறேன்’, ‘மெஹந்தி சர்கஸ்’ படத்தின் ‘கோடி அருவி கொட்டுதே’ உள்ளிட்ட பாடல்களை பிரதீப் குமார்தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில், ’ஹே சினாமிகா’ படத்தின் ‘தோழி’ பாடலும் ஆண்டுகள் கடந்தாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இப்பாடலை வெளியிட்டுள்ளார்கள். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்