இடுகைகள்

நடிகர் தனுஷின் ‘மாரி‘ படம் செய்த மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

படம்
தனுஷ் நடிப்பில் 6 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மாரி’ படத்தின் தர லோக்கல் பாடல், யூ-டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் - காஜல் அகர்வால் நடித்து, கடந்த 2015-ம் ஆண்டு வெளியானப் படம் ‘மாரி’. தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் ராதிகாவின் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரித்திருந்தது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதற்கு, அனிருத்தின் இசையும் காரணம். ‘மாரி’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. குறிப்பாக டானு டானு பாடல் 170 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் மற்றொரு ஹிட் பாடலான தரலோக்கல் பாடல் யூ-டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு முன்பாக தனுஷின், ஒய் திஸ் கொலவெறிடி, டானு டானு, ரௌடி பேபி, மறுவார்த்தை உள்ளிட்ட பாடல்களின் வரிசையில், 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தனுஷின் ஐந்தாவது பாடல், தர லோக்கல். இதனால், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவசர எண் விளம்பரத்தில் புது யுக்தி- நடிகர் விஜயின் படங்களை வைத்து தெறிக்கவிட்ட கேரள போலீஸ்

படம்
கேரளாவில் அவசர உதவி எண்ணை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், அம் மாநில காவல்துறை, நடிகர் விஜயின் படங்களை வைத்து, புது யுக்தியின் மூலம் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக நாம் பேருந்திலோ, ரயிலிலோ அல்லது சாலைகளிலோ பயணிக்கும்போது, எதிர்பாராதவிதமாக நமக்கு அவசர உதவி தேவைப்படும். நாம் மட்டுமின்றி நமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படலாம். அந்தவகையில், அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் 911 என்ற எண் இருப்பது போல், தீயணைப்பு, பெண்கள் பாதுகாப்பு, காவல்துறை, ஆம்புலன்ஸ் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, மத்திய அரசு 112 என்ற அவசர எண்ணை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை ( 112) அழைக்கும் திட்டத்தின் கீழ், இந்தத் திட்டம் படிப்படியாக பல மாநிலங்களிலும் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கேரள மாநில அரசும் ஏற்கனவே இணைந்துள்ளது. இந்நிலையில், 112 அவசர எண்ணை விளம்பரப்படுத்த கேரள மாநில காவல்துறை புது முயற்சியை மேற்கொண்டுள்ளது. கேரள மாநில காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜயின் ‘ போக்கிரி’

‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

படம்
‘பீப்’ பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்புவுக்கு எதிராக, சென்னை காவல்துறையில் பதிவான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் சிம்பு, பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாகக் கூறி, இணையத்தில் ‘பீப்’ பாடல் ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடலைப் பாடிய சிம்பு மற்றும் அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக, பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனைத் தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி, நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், கோவை ரேஸ் கோர்ஸில் பதியபட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோ

”யார் வெற்றி பெற்றாலும் நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்” - ஐசரி கணேஷ்

படம்
”நடிகர் சங்கத் தேர்தல் செல்லும். மறுதேர்தல் தேவையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை ’வரவேற்கிறேன் என்றும் யார் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்குத் தனது உதவிகள் தொடரும்’ என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். அதுதொடர்பான, விஷால் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் ”நடிகர் சங்கத் தேர்தல் செல்லும். மறுதேர்தல் தேவையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசியும் யார் தலைவராக இருந்தாலும் தனது உதவிகள் தொடரும் என்றும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அந்த வீடியோவில், ”தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தீர்ப்பு வெளியாகியுள்ளதை வரவேற்கிறேன். என்னைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் உடனடியாக நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடிக்கவேண்டும். அதுதான் எனது முதல் வேண்டுகோள். அது நானாக இருந்தாலும் சரி. வேறு யாராக இருந்தாலு

'பிக்பாஸ் அல்டிமேட்': ஸ்டைலிஷ் லுக்கில் தொகுத்து வழங்கும் சிம்பு

படம்
பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்குப் பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’பிக்பாஸ்’ நிகழ்ச்சி சீசன் 5 வரை ஹிட் அடித்ததால் ’பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார், சினேகன், ஜூலி, தாமரை, அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். நடிகர் கமல்ஹாசனே ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது ‘விக்ரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாலும் படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாவதாலும் அது சார்ந்த பணிகளில் ஈடுபடவிருப்பதால் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் கமல்ஹாசன். அவருக்குப் பதில் யார் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில், ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது விஜய் டிவி. இன்று வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவில் செம்ம ஸ்டைலிஷ் லுக்குடன், “எதிர்பார்கலல்ல... நானே எதிர்பார்க்கல.. பார்க்கலாமா” என

பைக் வேகத்தில் பாதியாவது திரைக்கதைக்கும் வேண்டாமா? - 'வலிமை' திரைப்பார்வை

படம்
நீண்ட பெரும் எதிர்பார்ப்புகளை அடுத்து இன்று திரைக்கு வந்திருக்கிறது வலிமை. அஜித், எச்.விநோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய இந்த சினிமா உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்களை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம். நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக வருகிறார் அஜித். சாத்தானின் அடிமைகள் என்ற குழு போதைப் பொருள் விற்பனை, நகைபறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடு படுகின்றன. டெக்னாலஜி உதவியுடன் அவர்கள் செய்யும் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணரும் அஜித் மற்றும் காவல்துறை அந்த கும்பலை எப்படி சேஸ் செய்தது என்பதே திரைக்கதை. ஒன்லைனாகப் பார்த்தால் சூப்பர் என்று சொல்லத் தோன்றலாம். ஆனால் மிகப்பழைய திரைக்கதை டெம்ப்ளேட்டை எடுத்து அதில் பைக் ஸ்டண்ட், டெக்னாலஜி என சில விசயங்களை சேர்த்து புதுமை செய்ய முயன்றிருக்கிறார்இயக்குநர் எச்.விநோத். வழக்கமான மாஸ் ஹீரோ கதைகளைப் போலவே அஜித்துக்கும் நல்ல அன்பான குடும்பம் இருக்கிறது. குடிகார அண்ணன், வேலை இல்லாத தம்பி, அன்பான அம்மா இவர்களை சுமக்கும் பொறுப்பில் ஒரு நல்ல சகோதரனாக இருக்கிறார் அஜித். ஆனால் இப்பட