இடுகைகள்

மதுரையில் நடக்கவிருந்த புத்தக கண்காட்சி திடீரென ஒத்திவைப்பு! காரணம் இதுதான்?

படம்
மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த 2006 முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தக கண்காட்சி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்ட செய்தி குறிப்பில், `மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிரிக்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாகவும், புத்தக கண்காட்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவித்து உள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் பணிகள் நிறைவு பெறாத

காலில் விழுந்த ரசிகர்: பதிலுக்கு காலில் விழுந்த ஹிருத்திக் ரோஷன்

படம்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஓருவர் அவரது காலில் விழ, ஹிருத்திக் ரோஷனும் திரும்பி அந்த ரசிகரது காலில் விழுந்தார். தமிழில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. இதில் விக்ரமாக நடிகர் மாதவனும், வேதாவாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். தற்போது அப்படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். இதில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சையிப் அலி கானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இப்படத்தையும் புஷ்கர் காயத்ரி தான் இயக்கி உள்ளனர். இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்துள்ள படக்குழு சமீபத்தில்  அதன் டீசரை வெளியிட்டது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஓருவர் அவரது காலில் விழ, ஹிருத்திக் ரோஷனும் திரும்பி அந்த ரசிகரது காலில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'ஹிருத்திக் ரோஷன் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நல்ல மனிதர்&

அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் https://ift.tt/CnTNHcm

படம்
விழுப்புரம் : மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு ஆவணி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம் - செப்டம்பர் 7-ம் தேதி பெரிய தேர்பவனி https://ift.tt/Xf7hJbr

படம்
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்.7-ம் தேதி நடைபெற உள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா நாளை (ஆக.29) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, பேராலய முகப்பிலிருந்து நாளை மாலை 5.45 மணிக்கு கொடி ஊர்வலம் தொடங்கி, கடற்கரைச் சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக மீண்டும் பேராலய முகப்பை வந்தடையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி மலையடிவாரம் அலிபிரியில் கோலாகலமாக திருப்படித் திருவிழா https://ift.tt/mH2s7v0

படம்
திருப்பதி : திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியில் திருப்படி திருவிழா நேற்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாச சாகத்யம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை திரிமாசிக திருப்படி திருவிழா நடந்தேறியது. இதனையொட்டி, தாச சாகத்ய திட்ட சிறப்பு அதிகாரி அனந்த தீர்த்தாச்சாரி தலைமையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தி பாடல் குழுவினர், திருப்பதி 3வது கோவிந்தராஜ சத்திரத்தில் இருந்து அலிபிரி வரை பாத யாத்திரையாக பஜனை கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாரதிராஜாவிற்கு நுரையீரலில் தொற்று.. உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

படம்
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான பாரதிராஜா நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “பாரதிராஜாவிற்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்” இவ்வாறு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை