மதுரையில் நடக்கவிருந்த புத்தக கண்காட்சி திடீரென ஒத்திவைப்பு! காரணம் இதுதான்?
மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த 2006 முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தக கண்காட்சி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்ட செய்தி குறிப்பில், `மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிரிக்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாகவும், புத்தக கண்காட்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவித்து உள்ளார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் புத்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 45 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கலையரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது, ஏறத்தாழ 95 சதவீதப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
கருத்துகள்
கருத்துரையிடுக