நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விசாரணை அறிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விவகாரத்தில், தனியார் மருத்துவ மையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி அறிவித்தது சர்ச்சையை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில், மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியானது. அதில், ஐசிஎம்ஆர்-ன் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக விசாரணை அறிக்கை வெளியானது. எனினும், சிகிச்சையளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமன