‘வாட்ஸ் அப் உலகத்தில் உண்மையைவிட பொய் செய்தி அதிகமாக பரவுகிறது’ - அமைச்சர் உதயநிதி!
“வாட்ஸ் அப் மூலம் வரும் தகவல்களில் எது உண்மை செய்தி, எது பொய் செய்தி என்பதை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்; உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுகிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றிபெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். அதனையும் தாண்டி போதைப் பொருட்களை ஒழி