ஆசிரியர் தாக்கப்பட்டதன் எதிரொலி - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஆசிரியர்கள்

தூத்துக்குடி  ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியரை பள்ளியில் வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதனை கண்டித்தும், எந்த ஒரு ஆசிரியருக்கும் இது போன்ற நிகழ்வு ஏற்படாத வகையிலும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு சட்டசபை கூட்டத்தொடரில் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

image

பின்னர் செய்தியாளர்களிடம் பொது செயலாளர் ரங்கராஜன் கூறுகையில், ஆசிரியர்கள் மீது சமுதாயத்தில் உள்ள நச்சு விதை உள்ள புல்லுருவிகள் ஆசிரியர்களை தாக்கக்கூடிய நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கக்கூடிய நிகழ்வாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருதுகிறது. அந்த தாக்கப்பட்ட நபர்களை தமிழக அரசின் காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்களை சிறையில் அடைத்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிலே நடைபெறக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக தான் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசானது ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். ஆசிரியர் சமுதாயத்திற்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி எங்களுடைய ஆசிரியர் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். பட்ஜெட் கூட்டத்தோடு இந்த சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்