கிறிஸ்துமஸ்: 150-ம் ஆண்டு விழா காணும் ரேஸ்கோர் சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ்' தேவாலயம் https://ift.tt/3JjzbBF
கோவையில் உள்ள பழமையான தேவாலயங்களில் ரேஸ்கோர்ஸில் உள்ள சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் தேவாலயம் குறிப்பிடத்தக்கது. கற்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இன்றளவும் அதன் தன்மை மாறாமல் அப்படியே உள்ளது. 1866-ம் ஆண்டு இந்ததேவாலய கட்டுமானப் பணிகள் தொடங்கின. கட்டுமான செலவாக ரூ.13,767 நிர்ணயிக்கப் பட்டது. இதில், மானியமாக அன்றைய அரசுரூ.5 ஆயிரமாக அளித்துள்ளது. நன் கொடையாளர்கள் உதவியுடன் எஞ்சியுள்ள தொகை பெறப்பட்டு தேவலாயம் கட்டப்பட்டது. 1872-ம்ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பயன் பாட்டுக்கு வந்த இந்த தேவாலயம் நடப்பாண்டு 150-ம் ஆண்டு விழா காண்கிறது. அதை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.
முதலில் ஆங்கிலேயர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் இந்த தேவாலயத்தில் வழிபாடு நடத்தி வந்தனர். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு இந்தியர்களும் இந்த தேவாலயத்தில் வழிபடத் தொடங்கினர். 1980-ம் ஆண்டு வரையிலும் ஆங்கில பாதிரியார்களே இந்த தேவாலயத்தில் இருந்துள்ளனர். அதன்பிறகு இந்திய பாதிரியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலமொழி பேசும் இந்திய மக்கள் வழிபட்டு வருகின்றனர். கல்விபணிக்காக கோவையில் தங்கியிருந்த ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களும் இங்கு வழிபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக