கிறிஸ்துமஸ்: குழந்தைகளின் உள்ளங்களை கவரும் கிறிஸ்துமஸ் தாத்தா! https://ift.tt/3EpHzvO

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, உலா வரும் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு தன் உடையில் ஒளித்து வைத்திருக்கும் இனிப்புகளை, தேடிப்பிடித்து வழங்குவது குழந்தைகளை குதூகலப்படுத்தும் விஷயமாகும். அவரது உருவம் குழந்தைகளுக்கு பிடித்த ஒன்றாகிவிட்டதால், உலகமெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா என்றழைக்கப்படும் சாண்டா கிளாஸ் வேடம் தரிக்கும் தாத்தாக்களுக்கு ரசிகர் பட்டாளம் அனைத்து ஊர்களிலும் உண்டு.

குறிப்பாக குழந்தைகள் பட்டாளம் தான்! கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளைதாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் உலமைப்புடன் வசீகரமாக வலம் வருபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்