மருத்துவ பொதுப்பிரிவு கலந்தாய்வு - முதல் நாளில் 3,824 மாணவர்கள் விண்ணப்பம்

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 10,461 மாணவர்களில் முதல் நாளில் 3824 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

2021-22 ஆம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வின் முன் பதிவு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. Www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த முன்பதிவில் பங்கேற்று கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் படி ஏற்கனவே மருத்துவக் கல்வி இயக்ககம் 10,461 பேருக்கு அழைப்புவிடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணி முதல் சுமார் 6 மணி நிலவரப்படி 3824 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

image

இது ஆன்லைன் விண்ணப்பித்தல் முறை என்பதால் இரவு பகலாக வரும் 1 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். எனவே மீதமுள்ள மாணவர்கள் கொடுத்திருக்கும் காலஇடைவெளிக்கு முன்னதாக விண்ணப்பித்துவிடும்படி மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 2 ஆம் தேதி காலை 8 மணியளவில் மாணவர்கள் விருப்பமான மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்யும் Choice locking நடைமுறை இதே போல் இணைய வழியாகவே தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்