இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’கடைசியில் விஜய்’: ‘பீஸ்ட்’ புகைப்படங்களை ஒவ்வொன்றாக இறக்கி தெறிக்கவிடும் படக்குழு!

படம்
’பீஸ்ட்’ படத்தின் புதிய புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளது படக்குழு. ’கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ’விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், விஜய் மற்றும் படக்குழுவினரின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். அப்படித்தான், மால் போல் இருக்கும் இடத்தில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், சதீஷ், சிவா அரவிந்த், அருண் அலேக்சாண்டர் உள்ள

கடகம், சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை

படம்
கடகம்: கிரக நிலை: சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் செவ், சுக், சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 03-04-2022 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-04-2022 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேஜிஎஃப் 2’ படத்தின் ரன்னிங் டைம், சென்சார் குறித்து வெளியான தகவல்

படம்
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரன்னிங் நேரம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது. கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படமும் முதல்பாகத்தைவிட வசூலில் பெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பீரியட் ஆக்சன் படமான இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரன்னிங் நேரத்தைப் பொறுத்தவரை 2 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 06 விநாடிகளை இந்தப்படம் கொண்டுள்ளது.  ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’ படம், 2 மணி நேரம் 35 நிமிடங்களை

மேஷம், ரிஷபம், மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை

படம்
மேஷம்: கிரகநிலை: ராசியில் ராகு - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ், சுக், சனி - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 03-04-2022 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-04-2022 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துகளைக் கூறாமல் இருப்பது நல்லது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hin

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம்
நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகிறது. 'ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ கடந்த மார்ச் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு தியேட்டரில் வெளியான சூர்யா படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு இருந்தது. அதனை  நிறைவேற்றும் விதமாகவே சூர்யா ரசிகர்கள் இதயங்களில் இடம்பிடித்து பாராட்டுக்களைக் குவித்தது. குறிப்பாக, பெண்ணியவாதிகள் ’எதற்கும் துணிந்தவன்’ பெண்களுக்கு எதற்கும் துணியும் துணிச்சலைக் கொடுத்தது என்று கொண்டாடினார்கள். அதேசமயம், சினிமா விமர்சகர்கள் இப்படம் தங்களை ஈர்க்கவில்லை என்று கலவனையான விமர்சங்களையும் கொடுத்தனர். ‘ஜெய் பீம்’ படத்திற்கு வந்த எதிர்ப்பால் பல மாவட்டங்களில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பகீரங்கமாகவே மிரட்டல்கள் வந்தன. இதனால், பல தியேட்டர்கள் கூட்டம் இல்லாமல்

ஏப்ரல் 2-ல் வெளியாகும் ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்: ‘டாக்டர்’ பாணியை கடைப்பிடிப்பாரா நெல்சன்

படம்
‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகிறது. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ’விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர். ‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் டீசரையும் ட்ரெய்லரைம் காண பீஸ்ட் மோடில் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். அதற்கு காரணம், விஜய் படம் என்பது மட்டுமல்ல... கொரோனா சூழலிலும் சூப்பர் ஹிட் கொடுத்து மக்களை தியேட்டர் வரவைத்த நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் என்பதாலும்தான். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்ததால் ஹாட்ரிக் வெற்றிக் கொடுப்பாரா நெல்சன் திலீப்குமார்

ரூ.500க்கு விற்கப்பட்ட வினாத்தாள்கள்.. பிளஸ் 2 தேர்வு திடீர் ரத்து - எந்த மாநிலத்தில்?

படம்
உத்தரபிரதேசத்தில் பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்த தேர்வுக்கான வினாத்தாள், பாலியா மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு கசிந்ததாகவும், ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் மாநிலக் கல்வி வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல மாவட்டங்களில் இந்த வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, பாலியா, எடா, பாஹ்பத், பதோன், சீதாபூர், கான்பூர், லலித்பூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த ஆங்கிலத் தேர்வை மாநிலக் கல்வி வாரியம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த மாவட்டங்களில் விரைவில் மறுதேர்வு நடத்தப்படும் என்றும், வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu Ne

அன்று விஜய்யுடன் விளம்பரத்தில்..இன்று நாயகியாக படத்தில்! -’விஜய் 66’ நாயகி அப்டேட்

படம்
’விஜய் 66’ படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் 'விஜய் 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ‘விஜய் 66’ படப்பிடிப்பு தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான ஏப்ரல் 2 ஆம் தேதி கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற உள்ளது என்றும் அப்படி இல்லையென்றால் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வந்தாலும் இன்னும் நாயகி குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகவில்லை. ஆரம்பத்தில் ‘விஜய் 66’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் கீர்த்தி அதனை மறுத்துள்ளார். அவருக்கு அடுத்து ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் பெயர்கள் சொல்லப்பட்டன. ஆனால், அவர்களும் இல்லை... ‘விஜய் 66’ படத்தில் பாலிவுட் நடிகை திஷா

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்

படம்
நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்

’நடிப்புடன் சேர்ந்து, இந்த வேலையையும் நடிகர் யாஷ் செய்தார்’ - இயக்குநர் அளித்த தகவல்

படம்
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ திரைப்படத்தில் கதாநாயகன் யாஷ், தனது கதாபாத்திரத்திற்கான பெரும்பாலான வசனங்களை அவரே சொந்தமாக எழுதியதாக, இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டம் கன்னட திரையுலகை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்தப் படத்தில் ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டதுடன், அவருக்கு பான் இந்தியா அளவில் ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது. வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது. கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ராதே ஷ்யாம்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற படங்களைப் போல், இந்தப் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரு

விஜயின் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட்? - நெல்சன் பகிர்ந்த ட்வீட்

படம்
நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியாகலாம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அப்டேட் நாளை வெளியாகலாம் என அப்படத்தின் இயக்குநர் நெல்சனின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளன. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயை வைத்து இயக்கி வருவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ‘பீஸ்ட்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகிய நிலையில், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ளது. இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் அல்லது ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், இந்

நாட்டில் 1,515  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை?

படம்
இந்திய நாட்டின் நிர்வாகப் பணிகளை கவனிக்க 1515 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் நிர்வாகம் சார்ந்த Cadre அதிகாரி பதவிகளில் Non-Cadre அதிகாரிகளை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்தை சந்திப்பதாகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான தேவை இருக்கின்ற காரணத்தால் அதனை உயர்த்துமாறும் பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு பரிந்துரை செய்துள்ளது பாராளுமன்ற நிலை கமிட்டி.  மொத்தமாக 6746 என்ற எண்ணிக்கையில் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு அதிகாரிகள் தேவை இருப்பதாக தெரிகிறது. இது பாராளுமன்ற நிலைக்குழுவின் 112-வது அறிக்கையின் படி தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் தற்போது 5231 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அவர்களில் 1444 பேர் பதவி உயர்வு பெற்று வந்தவர்கள் எனவும் தெரிகிறது. தேர்வு மூலம் நேரடியாக தேர்வானவர்கள் 3787 பேர்.   மாநில வாரியாக இந்த பற்றாக்குறையை கணக்கிட்டு பார்த்தால் அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 57% பற்றாக்குறை உள்ளது. இதில் குறைந்தபட்சமாக பார்த்தால் தமிழ்நாட்டில் 14.3% என பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source: D

கட்டாயப்படுத்தி விவசாய இடுபொருட்களை விற்றால் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

படம்
மானிய உரங்கள் விற்பனையின்போது இதர விவசாய இடுபொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தினால், உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு உழவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மானிய உரங்களை விற்பனை செய்யும் போது, விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக பல இடங்களில் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ள அரசு, இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் கூறியுள்ளனர். எனவே இதர விவசாய இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உழவர் நலத்துறையால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது போன்று விதிமீறல்களில் ஈடுபடும் உர விற்பனையாளர்கள் குறித்து புகார் அளிக்க தனித்த தொலைபேசி எண்ணும் அரசால் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதர உரங்களை வாங்கினால் மட்டுமே விவசாயத்துக்கு தேவையான அடிப்படை உரங்கள் விற்கப்படும் என பல இடங்களில் உர விற்பனையாளர

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைநிலை படிப்புகளில் சேர வேண்டாம் - யுஜிசி எச்சரிக்கை

படம்
தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று யுஜிசி (UGC) எச்சரித்துள்ளது. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் விடுத்துள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தங்களிடம் அனுமதி பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணாக்கரை சேர்த்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயலாகும் என்று அவர் கூறியிருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும் தொலைநிலை, திறந்த நிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது என்றும் ரஜ்னிஷ் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 2014 - 15 வரை மட்டுமே, தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே அந்தக் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அறிவுறுத்தி உள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil Ne

டிஎன்பிஎஸ்சிக்கு விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம்

படம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றும் நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அரசு காலிப் பணியிடங்கள், அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் குரூப் 1 , குரூப் 2, மற்றும் குரூப் 4 பதவிகள் தவிர, பிற அனைத்து நேரடி நியமனங்களுக்கும் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாக தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கும் போது, அப்பணிக்கு தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களையும் இணைய விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் தங்களது சான்றிதழ்களை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எழுத்துத் தேர்விற்குப் பின்னர் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாக தனியாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது என்பதால், தேர்வர்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு - முழு விவரம்

படம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி கீழ்,  தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வுகளில் வெற்றிபெறுவது இளைஞர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார். நாளை (மார்ச் 30) முதல், ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியுள்ளார். மொத்தம் 7,382 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா  மூலம் நிரப்பப்படுகின்றன. 7301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வ

கைவிடப்பட்ட கனவுப் படத்தை மீண்டும் இயக்கும் தனுஷ்? - வெளியான தகவல்

படம்
நடிகர் தனுஷின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி வந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டநிலையில், அந்தப் படத்தை தனுஷ் மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது போன்றவற்றின் மூலமும் தனது திறமைகளை நிருபித்து வந்தார். இதையடுத்து கடந்த 2017-ல், 'ப. பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தில், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் தனுஷ் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை மையமாக கொண்டு, இரண்டாவதாக ஒரு படம் இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் தனது கனவுப் படமான அந்தப் படத்தை நடிகர் தனுஷ் கைவிட்டதாக கூறப்பட்டநிலையில், பல படங்களில் தனுஷ் நடித்து வருவதாலேயே, அந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் அந்தப் படத்தை மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்

‘தி பவர் ஆஃப் தி டாக்’ - ஆண்மை மீது வைக்கப்பட்ட விமர்சனம்

படம்
சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் ‘தி பவர் ஆஃப் தி டாக்’, கௌபாய்கள் திரியும் அமெரிக்க வெஸ்டன் வகை கதையாகும். ஒரு துப்பாக்கித் தோட்டா வெடிக்கும் சத்தம் இல்லாத கௌபாய் திரைப்படம் இது. வெடிச்சத்தமோ, குதிரை மனிதர்கள் மோதும் ரத்தக்களரியோ இல்லாத அதேவேளையில், வன்முறைக்குப் பின் இயங்கும் ஆண்மையும், வீரசாகசமும் எவ்வளவு நோய்க்கூறானது என்பதை அழுத்தமாக ‘தி பவர் ஆப் தி டாக்’ மூலம் திரையில் படைத்து, பெண் இயக்குனர் ஜேன் காம்பியன் ஆஸ்கர் பரிசையும் வென்றிருக்கிறார். 1994-ம் ஆண்டு ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்துக்காக திரைக்கதைப் பிரிவில் ஆஸ்கர் வென்றவர் ஜேன். வெஸ்டர்ன் திரைப்படங்களுக்கே உரித்தான மலைகளின் பின்னணியில் நெடிதாக நீண்டிருக்கும் மேய்ச்சல் நிலப்பகுதியில், பர்பேங்க் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பில் மற்றும் ஜார்ஜின் கதை இது. சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் நிகழ்கிறது. பில் மற்றும் ஜார்ஜ் இருவரும் தங்கள் பெற்றோர்கள் அளித்த பண்ணையை ஒரு பழைய மாளிகையில் தங்கி நிர்வகிக்கிறார்கள். குதிரைகளைப் பழக்கி, காளைகளைக் காயடிப்பதில் பில் வல்லவனாகவும் இரக்கமற்ற தீரனாகவும

ஓடிடியில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’

படம்
துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.  நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான ‘ஹே சினாமிகா’ ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்தது. பொதுவாகவே, துல்கர் சல்மானுக்கு இளைஞர் கூட்டமும் பெண் ரசிகைகளும் அதிகம். அதுவும்,  ‘ஹே சினாமிகா’வில் காதல் மனைவியை உருகி உருகி காதலிக்கும் ஹவுஸ் ஹஸ்பண்டாக நடித்தால் ரசிகர்களின் எண்ணிக்கை கூடாமலா இருக்கும்?. காதலர்களை ஹார்ட் அர்ரெஸ்ட்டே செய்துவிட்டார். அந்தளவிற்கு, காதலர்கள் கூட்டம் ஜோடி ஜோடியாய் தியேட்டர்களை ஆக்கிரமித்திருந்தது. காஜல் அகர்வால், அதிதி ராவ் நடித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். அவரின், பாடல்களும் ஹிட் அடித்தன. இப்படத்தின், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஹே சினாமிகா’ தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹே சினாம

’ரிவெர்ஸ் கேமரா நிச்சயம் வேண்டும்’-பள்ளி வாகனங்கள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

படம்
பள்ளிகளில் கடந்த காலங்களில் நடந்த விபத்துக்கள், அந்த விபத்துகளில் இருந்து கற்ற படிப்பினைகள் மூலம் சில வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களை வேனில் அழைத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம். சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விபத்தில் 2ஆம் வகுப்பு மாணவன் உயரிழந்தது அனைவரது மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்து குறித்த விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பள்ளி மாணவர்களை வேனில் அழைத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பள்ளிகளில் கடந்த காலங்களில் நடந்த விபத்துக்கள், அந்த விபத்துகளில் இருந்து கற்ற படிப்பினைகள் மூலம் சில வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது. அதேபோல் போக்குவரத்து துறையும் பல்வேறு வழிகாட்டுதலைகளை கொடுத்துள்ளது. பள்ளிகளில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கும், வாகனங்களை இயக்கும் அனுமதி கொடுக்கும்போது, குறிப்பாக வாகனங்களில் கதவு இருக்க வேண்டும