நாட்டில் 1,515  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை?

இந்திய நாட்டின் நிர்வாகப் பணிகளை கவனிக்க 1515 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் நிர்வாகம் சார்ந்த Cadre அதிகாரி பதவிகளில் Non-Cadre அதிகாரிகளை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்தை சந்திப்பதாகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான தேவை இருக்கின்ற காரணத்தால் அதனை உயர்த்துமாறும் பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு பரிந்துரை செய்துள்ளது பாராளுமன்ற நிலை கமிட்டி. 

மொத்தமாக 6746 என்ற எண்ணிக்கையில் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு அதிகாரிகள் தேவை இருப்பதாக தெரிகிறது. இது பாராளுமன்ற நிலைக்குழுவின் 112-வது அறிக்கையின் படி தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் தற்போது 5231 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அவர்களில் 1444 பேர் பதவி உயர்வு பெற்று வந்தவர்கள் எனவும் தெரிகிறது. தேர்வு மூலம் நேரடியாக தேர்வானவர்கள் 3787 பேர்.  

மாநில வாரியாக இந்த பற்றாக்குறையை கணக்கிட்டு பார்த்தால் அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 57% பற்றாக்குறை உள்ளது. இதில் குறைந்தபட்சமாக பார்த்தால் தமிழ்நாட்டில் 14.3% என பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: DNA

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்