ஏப்ரல் 2-ல் வெளியாகும் ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்: ‘டாக்டர்’ பாணியை கடைப்பிடிப்பாரா நெல்சன்

‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகிறது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ’விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர்.

image

‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் டீசரையும் ட்ரெய்லரைம் காண பீஸ்ட் மோடில் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். அதற்கு காரணம், விஜய் படம் என்பது மட்டுமல்ல... கொரோனா சூழலிலும் சூப்பர் ஹிட் கொடுத்து மக்களை தியேட்டர் வரவைத்த நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் என்பதாலும்தான். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்ததால் ஹாட்ரிக் வெற்றிக் கொடுப்பாரா நெல்சன் திலீப்குமார் என்று உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ‘டாக்டர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது யூகிக்கும்படியாக கதையை ட்ரெய்லரில் சொல்லி, ஆனால், படத்தில் அதற்கு நேரெதிராக காட்சிகளை அமைத்து கைத்தட்டல்களைப் பெற்றார் நெல்சன் திலீப்குமார். ‘டாக்டர்’ ட்ரெய்லர் பிடிக்கவில்லை என்றே பலரும் கருத்திட்டார்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டித் தீர்த்தனர்.

image

'பீஸ்ட்’ ட்ரெய்லரும் அதேபாணியில் வெளியாகுமா அல்லது விஜய்க்காக மாற்றங்கள் செய்துள்ளனரா என்று ட்ரெய்லர் வெளியானால் தெரிந்துவிடும். இந்த நிலையில், ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.  ’பீஸ்ட்’ ட்ரெய்லர் எப்படி இருந்தாலும் நெல்சன் ஏமாற்றமாட்டார் என்றே நம்புகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்