இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘வாழு.. வாழவிடு’.. 11 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித் எடுத்த அந்த அதிரடி முடிவு!

படம்
தன்னுடைய 40வது பிறந்த நாளில் ரசிகர் மன்றத்தை கலைத்து நடிகர் அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் திரை நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித்குமார். நாளை மே ஒன்றாம் தேதி அஜித் தனது 51வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 11 வருடங்களுக்கு முன்பு இதேபோன்றதொரு பிறந்தநாள் கொண்டாட்ட மனநிலையில்தான் அஜித் ரசிகர்களும் இருந்தனர். மே ஒன்றாம் தேதி பிறந்தநாள் என்றால் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அஜித்திடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. நிச்சயம் அவரது ரசிகர்கள் அந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்த அறிக்கை என்ன?, தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கும், உச்சநட்சத்திர நடிகர்களின் வளர்ச்சிக்குமான உறவு என்ன என்பது குறித்து இந்த கட்டுரை தொகுப்பில் காணலாம். பாகவதர் காலம் காதல் தொட்டு.. கர

'ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்துக' -டிஆர்.பாலு எம்.பி கடிதம்

படம்
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி நியமனங்களுக்கான தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டுமென ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்வு மையங்கள் அலகாபாத், மைசூர், ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள். ஆகவே தமிழ்நாட்டில் உள்ள நகரங்களிலேயே தேர்வு மையங்களை அமைக்க வேண்டுமென கடிதத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். இதற்காக சென்னை ரயில்வே நியமன வாரியத்துக்கு உரிய ஆணை பிறப்பிக்குமாறும் டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

ஆயிரம் கோடி வசூலை கடந்தது கேஜிஎஃப்-2 ! இந்தியில் மட்டும் 350 கோடி வசூலை வாரிக் குவித்தது!

படம்
உலகளவில் கேஜிஎஃப்-2 ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதன் இந்தி பதிப்பும் ரூ.350 கோடி வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக ராக்கி பாய் கதாபாத்திரத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் கன்னடா, இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் கே.ஜி.எஃப் -2 வெளியானது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகம் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், இரண்டு வாரங்கள் தாண்டியும் நிறைய திரையரங்குகளில் கே.ஜி.எஃப்2 இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  “ராக்கி பாய்” ஆக யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த பிரஷாந்த் நீலின் “கேஜிஎஃப்: அத்தியாயம் 2” பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வசூல் சாதனைகள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியான வண்ணம் இருந்தன. சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய வேடங்களில் நட

விருச்சிக ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்

படம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை) - கிரக நிலை: - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புத பகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார். பலன்கள்: உழைப்பு, செயல்திறன், பேச்சு ஆகியவற்றில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் விருச்சிக ராசியினரே! இந்த மாதம் பல வகையான யோகத்தைத் தரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்

துலாம் ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்

படம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார். பலன்கள்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கன்னி ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்

படம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரக நிலை: - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புத பகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார். பலன்கள் : மிக எளிதில் எதிலும் உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய திறமை மிகுந்த கன்னி ராசியினரே! இந்த மாதம் காரியங்கள் வெற்றியைத் தரும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதுர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். பங்கு மார

சிம்ம ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்

படம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார். பலன்கள் : from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டபுள் ரோலில் டபுள் ட்ரீட் கொடுக்கும் அஜித்! - ‘ஏகே 61’ அப்டேட்ஸ்

படம்
’அஜித் 61’ படத்தில் அஜித் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங், தபு நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜிப்ரான் இசையமக்கிறார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்திற்கக கடந்த ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கை படக்குழு அமைத்து வந்த நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், அஜித் இப்படத்தில் வில்லன் - ஹீரோ என டபுள் ரோலில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 51 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டில் லுக்கையும் வெளியிடவுள்ளனர். ஏற்கனவே, ‘வாலி’, ‘வரலாறு’, ’வில்லன்’, ‘சிட்டிசன்’, ‘அசல்’, ‘அட்டகாசம்’, ’பில்லா’ என அஜித் நடித்தவற்றில் சில டபுள் ரோல் படங

வடிவேலுடன் கலக்கிய மூத்த நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

படம்
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகையான ரங்கம்மா பாட்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.ஆர்.ரங்கம்மா என்ற ரங்கம்மா பாட்டி. சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், எம்.ஜி.ஆரின் 'விவசாயி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உட்பட பல நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுடன், ரங்கம்மா பாட்டி இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக, ‘கி.மு.’ திரைப்படத்தில் இவரும், வடிவேலும் சேர்ந்த நடித்த நகைச்சுவையான ‘போறது போற அந்த நாயை சூனு சொல்லிட்டு போ’ எனக் கூறும் நகைச்சுவை, பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இதேபோல், வடிவேலுவுடன், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பேய் பிடித்த பாட்டியாக, இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 

டீசரே இப்படி என்றால் மெய்ன் பிக்சர் எப்படியிருக்கும்?: மிரட்டும் ’பிசாசு 2’ டீசர்

படம்
'பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ’பிசாசு ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் ’பிசாசு 2' படப்படிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்தது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் பெங்களூரில் நிறைவுற்றன. வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின், தெலுங்கு உரிமையை ‘விஜய் 66’ இயக்குநர் தில்ராஜு கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் டீசர் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. பேய் படங்கள் என்றாலே ரசிகர்களை பயமுறுத்தும். ஆனால், ‘பிசாசு’ படத்தில் பேயாக நடித்த பிரக்யா ரசிகர்களின் பிரியங்களை அள்ளிக்குவித்த பேயாக மாறினார். அந்தளவிற்கு நடிப்பாலும் அழகாலும் ரசிக்க வைத்தார். இப்படத்தில், மென்மையாக பயமுறுத்தியிருந்த மிஷ்கின், ‘பிசாசு 2’ வில் ஹார்ட் பீட் எகிறவைக்கும் அளவுக்கு டீசரில்

மகரம், கும்பம், மீன ராசி அன்பர்களே!  இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 4-ம் தேதி வரை

படம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. 28ம் தேதி புத பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். 28ம் தேதி சுக்கிர பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீகச் சொத்துகளில் இருந்து பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து வந்த இழுபறி நீங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே!  இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 4-ம் தேதி வரை

படம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ராசியில் சூர்யன், புதன், ராகு என கிரகநிலை இருக்கிறது. 28ம் தேதி புத பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். 28ம் தேதி சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம், சிம்மம், கன்னி ராசி அன்பர்களே!  இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 4-ம் தேதி வரை

படம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தான ராசியில் சூர்யன், புதன், ராகு என கிரகநிலை இருக்கிறது. 28ம் தேதி புத பகவான் லாப ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். 28ம் தேதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Da

’மணி ஹெய்ஸ்ட்’ கொரிய ரீமேக்: ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்

படம்
கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். வெப் சீரிஸ்கள் மீது உலக ரசிகர்களைத் வெறிகொள்ளவைத்த ’மணி ஹெய்ஸ்ட்’ இறுதிப்பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனைத்தொடர்ந்து, தற்போது கொரிய மொழியில் ’மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. புரஃபசர் கதாபாத்திரத்தில் ஜூ ஜி டேவும், பெர்லினாக ’ஸ்க்விட் கேம்’மில் கவனம் ஈர்த்த பார்க் ஹே சூவும், டோக்கியோவாக ஜூன் சாங் சியோ, ரியோவாக லீ ஹியூன் வூ, நைரோபியாக ஜாங் யூன் வூவும் நடித்துள்ளார்கள். சமீபத்தில் நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ். ஒரிஜினல் ‘மணி ஹெய்ஸ்ட்’போல் கவனம் ஈர்க்கவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டாலும், புரஃபசர், ரேக்கல், பெர்லின், ரியோ, டோக்கியோ, டென்வர், மோனிகா, ஆர்த்தோ, ஹெல்சிகி, நைரோபி, மாஸ்கோ என மாஸ் காட்டிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கொரிய நடிகர்கள் பாஸ் ஆகிறார்களா என்பதை பார்க்க செம்ம வெய்ட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், வரும் ஜுன் 24 ஆம் தேதி கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘மணி ஹெய்ஸ்

மேஷம், ரிஷபம், மிதுன ராசி அன்பர்களே!  இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 4-ம் தேதி வரை

படம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - ராசியில் சூர்யன், புதன், ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - விரய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது. 28ம் தேதி புத பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். 28ம் தேதி சுக்கிர பகவான் விரய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாலி இந்தி ரீமேக் விவகாரம்: போனி கபூருக்கு எதிராக எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

படம்
வாலி திரைப்பட ரீமேக் விவகாரத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடையாளத்தை பெற்றுத்தந்தது. கோலிவுட்டில் ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் முடிவு செய்திருந்தார். அதன்படி, வாலி படத்தின் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ். எஸ். சக்கரவர்த்தி இடமிருந்து படத்தை ரீமேக் செய்யும் உரிமையை பெற்றிருந்தார் போனி கபூர். தொடர்புடைய செய்தி:  எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே என்ன பிரச்னை? வாலி பட விவகாரத்தில் நடப்பதென்ன? அதே நேரத்தில் அந்த திரைப்படத்தை இந்தி மொழியில் தானே இயக்க எஸ்.ஜே. சூர்யா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் `கதை எழுதியவருக்கே கதை சொந்தம் என்ற அடிப்படையில் வாலி திரைப்படத்தை போனிகபூர் ரீமேக் செய்யக்கூடாது’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேதநாயகம், ஜிந்தாவாக மிரட்டிய நடிகர் சலீம் கவுஸ் காலமானார்... திரைப்பிரபலங்கள் இரங்கல்

படம்
பிரபல பழம்பெரும் வில்லன் நடிகரான சலீம் கவுஸ் உடநலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி சென்னையில் பிறந்து வளர்ந்த சலீம் கவுஸ், மாநிலக் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர். மேலும், புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிட்யூட்டில் பட்டப்படிப்பு படித்துள்ளார். நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னர் நாடகங்களை இயக்கியும் உள்ளார். மேலும், தொலைக்காட்சித் தொடர்களில் ராமா, கிருஷ்ணா, திப்பு சுல்தான் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிகர் சலீம் நடித்துள்ளார். 1978-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஸ்வர்க் நரக்’ படத்தில் மாணவனாக அறிமுகமான சலீம், அதன்பிறகு இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் பிரதாப் போத்தன் இயக்கத்தில், கமல்ஹாசன், பிரபு, அமலா நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு, கடந்த 1989 -ம் ஆண்டு வெளியான ‘வெற்றி விழா’ படத்தில் வில்லனாக அறிமுகமானநிலையில், அந்தப் படத்தில் ஜிந்தா கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். குறிப்பாக, ‘ஸ்டீஃபன் ராஜ்.. மை டியர் ஸ்டீஃபன் ராஜ்’ என இவர் த

லைலத்துல் கத்ர் சிறப்புக் கட்டுரை: நன்மைகளைப் பன்மடங்காக்கும் இரவு https://ift.tt/ESOGKAC

படம்
இறை அருளின் ஆற்றல் வாய்ந்த இரவு என்று கருதப்படும் லைலத்துல் கத்ர் இரவு இன்றிரவு கொண்டாடப்படுகிறது. லைல் என்றால் இரவு, கத்ர் என்றால் சிறப்பு, கண்ணியம் என்று அர்த்தம். சிறப்பும் கண்ணியமும் மிகுந்த இந்த இரவே இஸ்லாமிய நாட்காட்டியின் புனிதமான இரவு. ஆயிரம் மாதங்களுக்கும் மேலானதாகக் கருதப்படும் இந்த இரவில் செய்யப்படும் நன்மையின் பலன் பன்மடங்கு உயர்வானது. இந்த இரவில்தான், இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் புனித குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டன. ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் வரும் ஒற்றைப்படை நாட்களின் இரவுகள் லைலத்துல் கத்ர் எனக் கருதப்படுகின்றன. இருப்பினும் பொதுவாக, புனித ரமலான் மாதத்தின் 27வது நாளே லைலத்துல் கத்ர் என உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தி நமது தேசிய மொழியா? - திரைப் பிரபலங்கள் சொல்வது என்ன?

படம்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு பதிலளிக்கும் வகையில், இந்தி நமது தேசிய மொழி என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்ததையடுத்து, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், சோனு சூட், மதுபாலா, பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்து குறித்து காணலாம். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், “பான் இந்தியா படங்கள் தற்போது உருவாகி வருகிறது. இந்தி தேசிய மொழி இல்லை” என்று தெரிவித்தார். இதையடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், “இந்தி தேசிய மொழி இல்லை என்றால், உங்களது தாய்மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி தான் நமது தாய் மொழி. தேசிய மொழியாகவும் எப்போதும் இருக்கும். ஜன கன மன” என்று இந்தியில் நடிகர் கிச்சா சுதீப்புக்கு ட்விட்டரில் பதிலளித்தார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த நடிகர் கிச்சா சுதீப், “எனது கருத்தை தவறாக புரிந்துகொண்டீர்கள், நேரில் பார்க்கும்போது கூறுகிறேன்” என்று தெரிவித்த அவர், தனது அடுத்தப்பதிவில், “நீங்கள் இந்தியில் அனுப்பிய உரை எனக்குப் புரிந்தது. நாங்கள் அனைவரும் இந்தியை மதித்

'காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்: ட்ரெய்லர் போலதான் படமும் இருக்கிறதா?

படம்
ட்ரெய்லரிலேயே கலகலப்பையும் சலசலப்பையும் எகிறவைத்தது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் இயக்கம், அனிருத் இசை, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பு என செம்ம காம்போவாக வெளியாகியுள்ளது. அனிருத்துக்கு 25வது படமாம். வாழ்த்துகள் ப்ரோ. தமிழ் சினிமாவுக்கு நீங்கள் மிக மிக முக்கியமானவர். பகலில் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும்போது நயன்தாராவையும் இரவு பப்பில் பவுன்சராக இருக்கும்போது சமந்தாவையும் ஒரே நேரத்தில் காதலிக்கிறார்; காதலிக்கப்படுகிறார் ராம்போ (விஜய் சேதுபதி). இதற்குக் காரணம் ‘டிஸ்சசோசியேட் ஐடிண்டிட்டி சிண்ட்ரோம் ’ எனப்படும் வினோத மன நோய்தான் என்றும் அவரை காதலிக்கும்போது இவரையும், இவரை காதலிக்கும்போது அவரையும் தெரியாது எனவும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையான காரணம் என்ன? நயன்தாராவையும் சமந்தாவையும் விஜய் சேதுபதி எப்படி காதலித்தார்? இருவருக்கும் உண்மை தெரிந்ததா? இருவரையும் எப்படி சமாளிக்கிறார்? யாரை திருமணம் செய்துகொள்கிறார்? இதுதான் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கதை. ‘96’ படத்திற்குப்பிறகு விஜய்சேதுபதி சோலோவாக நடித்த படங்கள், பெரிய அளவில் ரசிக்க வைக்கவில்லை. இதில் டபுள்

உரங்கள் விலை உயர்வை தவிர்க்க மானியம் அதிகரிப்பு

படம்
மத்திய உரத்துறை பரிந்துரைப்படி, கரீஃப் பருவத்தில் (01.04.2022 முதல் 30.09.2022 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் அதிகரித்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கரீஃப் 2022 பருவத்தில் உள்நாட்டு உரங்களுக்கு ஆதரவு அளிப்பது உட்பட ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியமாக ரூ.60,939.23 கோடியை போக்குவரத்து மானியம் வாயிலாகவும், உள்நாட்டு உற்பத்திக்கு கூடுதல் ஆதரவு மற்றும் டிஏபி இறக்குமதி வாயிலாகவும் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கு தற்போது வழங்கப்படும் மானியத்தை ரூ.1,650-ஐ ரூ.2,501-ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மானியத்தை விட 50% அதிகமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பதிலடிக்கு பதிலடி - இந்தி மொழியை வைத்து ட்விட்டரில் பிரபல நடிகர்கள் வாக்குவாதம்!

படம்
பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப், இந்தி தேசிய மொழி அல்ல என்றும், பாலிவுட் நடிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தங்களது படங்களை டப் செய்து வெற்றிபெற திணறுகிறார்கள் என்றும் தெரிவித்த நிலையில், அதற்கு அஜய் தேவ்கன் பதிலளிக்க, மீண்டும் அதற்கு கிச்சா சுதீப் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படங்கள், இந்தியிலும், உலக அளவிலும் கவனத்தை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை புரிந்து வருகின்றன. குறிப்பாக, ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘புஷ்பா’, ‘கே.ஜி.எஃப். 2’ உள்ளிட்ட படங்கள் இந்தியில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இந்தியில் மட்டுமே இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே 100 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகின்றன. இதனால், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்கள் அதிகளவில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிற்கும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும் இடையில் ட்விட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கன்னட நடிகர் கிச்சா சுதீப், கடந்த சில தினங்களுக