’மணி ஹெய்ஸ்ட்’ கொரிய ரீமேக்: ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்
கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.
வெப் சீரிஸ்கள் மீது உலக ரசிகர்களைத் வெறிகொள்ளவைத்த ’மணி ஹெய்ஸ்ட்’ இறுதிப்பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனைத்தொடர்ந்து, தற்போது கொரிய மொழியில் ’மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. புரஃபசர் கதாபாத்திரத்தில் ஜூ ஜி டேவும், பெர்லினாக ’ஸ்க்விட் கேம்’மில் கவனம் ஈர்த்த பார்க் ஹே சூவும், டோக்கியோவாக ஜூன் சாங் சியோ, ரியோவாக லீ ஹியூன் வூ, நைரோபியாக ஜாங் யூன் வூவும் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ். ஒரிஜினல் ‘மணி ஹெய்ஸ்ட்’போல் கவனம் ஈர்க்கவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டாலும், புரஃபசர், ரேக்கல், பெர்லின், ரியோ, டோக்கியோ, டென்வர், மோனிகா, ஆர்த்தோ, ஹெல்சிகி, நைரோபி, மாஸ்கோ என மாஸ் காட்டிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கொரிய நடிகர்கள் பாஸ் ஆகிறார்களா என்பதை பார்க்க செம்ம வெய்ட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில், வரும் ஜுன் 24 ஆம் தேதி கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் வெளியாகும் என்று நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ’ஜாய்ண்ட் எக்கனாமிக் ஏரியா’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடரின் ப்ரோமோ வீடியோவோடு வெளியிட்டிருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
கருத்துகள்
கருத்துரையிடுக