திரையரங்குகளில் 50-வது நாளை நெருங்கும் யஷின் ‘கேஜிஎஃப் 2’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் யஷின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற ‘கே.ஜி.எஃப்2 ’ திரைப்படம், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பாலே தயாரிப்பில், நடிகர் யஷின் நடிப்பில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ‘கே.ஜி.எஃப்.2’. இவர்களின் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப் 1’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து, ‘‘கே.ஜி.எஃப்.2’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கொரோனா காரணமாக பட வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டநிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், படக்குழுவின் எதிர்பார்ப்புகளையும் மீறி வெற்றி நடைபோட்டு வருகிறது.

image

படம் வெளியாகி 47 நாட்கள் ஆகியும் திரையரங்குகளில் வரவேற்பு குறையாதநிலையில், இதுவரை 1238 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது ‘கே.ஜி.எஃப்.2’ படம். இந்நிலையில், ‘கே.ஜி.எஃப்.2’ படம், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். ‘கே.ஜி.எஃப்.2’ படத்தில் நடிகர் யஷுடன், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ், அர்ச்சனா ஜோயிஸ் ஆகியோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்