கல்விக் கொள்கை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பொன்முடி மறைமுக பதில்

புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்த பின்னரே அதுகுறித்து தாங்கள் பேசிவருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி,  “மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.

image

மேலும் அவர் பேசுகையில் “புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுத்தேர்வு கொண்டு வந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும். இங்கு சிலர் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நன்கு படித்துப் புரிந்துகொண்ட பிறகுதான் அதுபற்றி பேசி வருகிறோம்” என்று ஆளுநரை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார்.

இதையும் படிங்க... “கர்நாடகாவில் குட்கா விற்க தடை இல்லை என்பதால் தமிழகத்தில் கடத்தல் நடக்கிறது”-அமைச்சர்

முன்னதாக நேற்று நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் (பொன்முடி) யுஜிசி-யிடம், ’கல்லூரிகளில் இடைநிற்றலில் உள்ள மாணவர்களின் மீதம் இருக்கும் கல்வியை, திறந்தநிலை பல்கலைகழகத்தின் தொடரும் வகையில் யுஜிசியிடம் ஆளுநர் அனுமதி பெற வேண்டும்’ என்று கூறினார். இவையாவும், புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அதை முழுமையாக பாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புடைய செய்தி: `இந்தி திணிப்பு - புதிய கல்வி கொள்கை’- ஒரே மேடையில் ஆளுநர் Vs அமைச்சர் பொன்முடி காரசாரம்!

image

நமது கல்வியில் புதிய மாற்றங்கள் தேவை. அவற்றை முன்னெடுக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அதில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர் சொல்வதை கேட்டு புதிய கல்விக் கொள்கையை தவிர்க்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்பது தொலைநோக்கு கொள்கை உடையது. மாற்றத்திற்கான கல்வியை நோக்கியது.” என்று கூறியிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்