மதுரையில் ‘கோப்ரா’ பட புரமோஷன் விழா - கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர்கள்

மதுரையில் நடந்த ‘கோப்ரா’ பட புரமோஷனில் கூட்ட நெரிசலில் சிக்கி கல்லூரி மாணவர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் மீனாட்சி, மிருனாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர் விக்ரம் வருகைக்காக ஏராளமான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஆடல் ஆடியபடியும், பாடல் பாடியபடியும் காத்திருந்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு வருகை தந்த நடிகர் விக்ரம் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மத்தியில் கடும் நெரிசலில் சிக்கியபடி வருகை தந்தார்.

இதனையடுத்து மேடைக்கு வந்தப்பின் நடிகைகள் திரைப்படம் குறித்து பேசியதை அடுத்து நடிகர் விக்ரம் பேசியபோது, “மதுரைக்கு வந்தவுடன் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், மீசைத் தானாகவே மேலே சென்றுவிட்டது. நடிகர் துருவ் விக்ரம் அனைவருக்கும் ஐ லவ்யூ சொல்ல சொன்னார். மதுரை என்றாலே ரொம்ப பிடிக்கும். எனது அப்பா படித்தது அமெரிக்கன் கல்லூரி தான். நான் கல்லூரி படித்துகொண்டிருந்தபோது மதுரைக்கு அடிக்கடி வருவேன். மதுரை என்றாலே நல்ல ருசியான உணவும், ஜாலியும் தான்.

image

மதுரை அமெரிக்கன் கல்லூரி குறித்து இயக்குனர் அமீர் அடிக்கடி என்னிடம் பேசுவார். ‘ஹவுஸ்புல்’ பட சூட்டிங்கின்போது மதுரைக்கு வந்த நான் மதுரை பற்றிய பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டேன். சுவையான வகை வகையான உணவுகளை சாப்பிட்டேன். இன்று நான் டயட்டில் இருந்தாலும் கூட மதுரை ஸ்பெசல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன். அவ்வளவு ருசியாக இருந்தது. ‘அந்நியன்’ திரைப்படம் போன்று சண்டை, காதல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ள படம் ‘கோப்ரா’ எனவும், மதுரைக்காரர்களுக்கு சினிமா என்றாலே வெறி தான் போல் என்பதை நிருபிக்கும் வகையில் அவ்வளவு வரவேற்பு தருகிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விக்ரம், உங்களுடைய பேவரிட் படம் எந்த படம் என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தபோது, தனது பேவரிட் ‘கோப்ரா’ தான் என்றார்.

தொடர்ந்து மற்றொரு ரசிகர் நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமா? என்று கேட்ட கேள்விக்கு நான் எப்போதும் ரசிகர்களின் செல்லம் தான் என்றார். சினிமாவிற்கு வருவது கடினமா? எளிமையா? என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விக்ரம், சினிமாவிற்கு வருவது மிகுந்த கடினமானதுதான் இருந்தாலும் விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வரலாம் என்றார்.

image

இதனிடையே விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பல மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதில் முற்றிலும் சுயநினைவு இழந்த மாணவர் ஒருவரை, சக மாணவர்கள் தூக்கி கொண்டு சாலையில் ஓடினர்.

கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஆம்புலன்ஸ் வர வழி இல்லாத காரணத்தால், ஆட்டோ ஒன்றில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் கோரிப்பாளையம் சாலையில் திரண்டு சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவர்கள் சிலர் சாலையின் குறுக்கே நின்று ஆடி, ஓடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்