ஆந்திராவின் காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு - கேது தோஷ பரிகாரத்துக்கு தங்க உருவங்கள் https://ift.tt/kF0wlr2
திருப்பதி: பஞ்சபூல திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயில், ராகு - கேது சர்ப தோஷ நிவாரண திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. சுவர்ணமுகி நதிக்கரையில் ஞான பூங்கோதை தாயார் சமேதமாய் காளத்திநாதரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
இக்கோயிலில் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் தாரக நிவாசுலு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் இது குறித்து சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட காளஹஸ்தி எம்.எல்.ஏ மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பக்தர்கள் உண்டியல் மூலம் தங்க நகைகளையும், வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இதுவரை வெள்ளி பொருட்களை மட்டுமே உருக்கி ராகு - கேது சர்ப தோஷ நிவாரண பூஜையில் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக