ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் கசிவு!

‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும், ஆதித்யராம் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட கெட்டப்பில் நடந்து வருவது போன்றும், ரசிகர்களை பார்த்து கையசைப்பது போன்றும் உள்ளது. இந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

image

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார், விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து வருகின்றனர். அண்மைக்காலமாகவே படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு தெரியாமல் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது வழக்கமாகி வருகிறது.

நடிகர் விஜயின் ‘வாரிசு’ படப்பிடிப்பு புகைப்படங்களும், அஜித்தின் ‘துணிவு’ படப்பிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இதேபோல் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியான நிலையில், இதுபோன்ற புகைப்படங்களை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழுவினர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்