நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - உடைந்த கண்ணாடிகள்!

காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டின் மீது கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன, இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து இன்று நடிகர் விஷால் சார்பில் அவரின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சென்னை கே4 அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.

இதையும் படிக்க: சென்னை: பெண் மாணவ நிருபருக்கு பாலியல் தொல்லை – உபர் ஆட்டோ ஓட்டுநர் கைது




Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்