பெற்றோரின் வெளி மாநிலச் சான்று மாணவிக்கு பொருந்தாது - சென்னை உயர் நீதிமன்றம்

பெற்றோர் பிற மாநிலத்தில் சாதிச்சான்று பெற்றவர்கள் என்பதற்காக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டில், மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை மறுத்தது சட்டப்படி தவறானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில், 720க்கு 506 மதிப்பெண்கள் பெற்ற மஹதி பர்லா என்ற மாணவி தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தார். விளக்க குறிப்பேட்டில் குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றமும் செய்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு, பிற மாநிலங்களில் பெற்ற சாதிச் சான்று இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது என்ற விளக்கக் குறிப்பேடு பிரிவைச் சுட்டிக்காட்டி, மாணவி மஹதியின் தந்தை ஆந்திரா மாநிலத்தில் சாதிச்சான்று பெற்றுள்ளதால்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பரிசீலிக்க முடியாது என மறுத்துவிட்டது.
இதை எதிர்த்தும், தனக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கக்கோரியும் மஹதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

image
இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். பிற மாநில சாதிச் சான்றிதழ் பரிசீலிக்கப்பட மாட்டாது என்ற பிரிவு, மாணவர் சேர்க்கை கோரும் விண்ணப்பதாரருக்கு தான் பொருந்துமே தவிர, அவரது பெற்றோருக்கு அல்ல எனவும், மாணவி தமிழகத்தில் தான் சாதிச் சான்று பெற்றுள்ளார் எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெற்றோர் பிற மாநிலத்தில் சாதிச் சான்று பெற்றவர் என்பதற்காக மாணவர் சேர்க்கை மறுப்பது சட்டப்படி தவறானது எனக் கூறி, மனுதாரரை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக கருதி, கலந்தாய்வில் அனுமதிக்கவும், தகுதிபெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்