AK62 எப்படிப்பட்ட படமாக இருக்கும்? ”Code word accepted” பாணியில் பதிலளித்த விக்னேஷ் சிவன்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு படம் ரிலீசாக இருக்கும் நிலையில் அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது. ஆனால் துணிவு படத்தின் வேலைகளுக்கு இடையிலேயே அஜித்தின் 62வது படம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கின.

அதன்படி AK62 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு பாடலையும், வலிமையில் வேற மாறி மற்றும் அம்மா பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தையே இயக்கப்போகிறார் என தகவல் வெளியானது அஜித் ரசிகர்களிடையே பெரும் ஆவலையே இப்போதிருந்தே ஏற்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், தனியார் இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் AK62 பற்றி பேசியிருப்பதுதான் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

அதில், அஜித்குமாருக்கு என மாஸ் ஹீரோ என்ற எண்ணம் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேவும் இருக்கும் நிலையில் AK62 என்ன மாதிரியான படமாக இருக்கப் போகிறது? அஜித்துக்கான மாஸ் ஹீரோ படமாகவா அல்லது விக்னேஷ் சிவனின் படமாகவா என கேள்வி எழுப்பப்பட்டது.

Image

அதற்கு, “நான் இயக்கிய படங்களெல்லாம் முற்றிலும் காமெடி, ரொமான்ஸை கொண்ட வேறு மாதிரியான படங்கள். நான் ஆக்‌ஷன் படங்கள் இயக்கியதில்லை. அதனால் AK62-ல் எனக்கு என்ன வேண்டும் என்பதை கொண்டு வருவதற்கான சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனக்கு முதலில் வந்த அறிவுரையே “உங்க கதைக்கான வேலைகளை சுதந்திரமா பண்ணுங்க” என்றுதான் கூறியிருக்கிறார். ஆகையால் என்ன மாதிரியான கதைக்களத்தை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இருக்கவில்லை.” என விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

ஆக்‌ஷன் படங்கள் இல்லாமல் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் அஜித்தை திரையில் காண வேண்டும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் AK62 நிறைவு செய்யுமா என்பதே பலரது எண்ணமாக இருக்கிறது.

The first instruction (AK gave me) was "You do YOUR film. So I have zero pressure" #AK62 Wikki #Thunivu pic.twitter.com/sviHvu8mWR
— Trollywood (@TrollywoodX) December 27, 2022

முன்னதாக AK62-ல் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும் பணியாற்ற போகிறார்கள் என்றும் லைகா நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்து ராங்கி படத்தின் புரோமோஷன் போது த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் எதுவும் மறுப்போ பதிலோ தெரிவிக்கவில்லை.

அதேவேளையில் விஜய்யின் 67வது படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது. இதனிடையே AK62 படத்தின் ஷூட்டிங் வேலைகள் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் மும்பையில் தொடங்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்