”நான் போட்டது ரூ. 40,000.. ஆனா எடுத்தது ரூ.2” - சரிந்த வெங்காய விலையால் நொந்த விவசாயி

அதிக உற்பத்தியால் வெங்காய விலை இந்த முறை மலிந்துபோயுள்ளது. ரூ. 40,000 செலவு செய்து உற்பத்தி செய்த கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்திற்கு ரூ. 2 காசோலையை வருமானமாக பெற்றுள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பார்சி தாலுக்காவுக்கு உட்பட்டது போர்கோன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துகரம் சாவன். விவசாயியான இவர் ரூ. 40,000 செலவு செய்து வெங்காயம் பயிரிட்டுள்ளார். விளைந்த கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்தை 70 கி.மீ பயணம் செய்து சோலாப்பூர் விவசாய உற்பத்தி சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.

தனது குளிர்கால அறுவடையை அங்கு ஏலம் விட்டதில் 1 கிலோ 1 ரூபாய்க்கு விற்றுள்ளது. இப்படி மொத்த வெங்காயமும் விற்கப்பட்டதில் ரூ.512 கிடைத்துள்ளது. அதில் போக்குவரத்து செலவினமாக ரூ.509.50 எடுக்கப்பட்டு, மீதமுள்ள ரூ.2.49 அவருக்கு லாபமாக கிடைத்துள்ளது. அதையும் காசோலையாக கொடுத்ததால் 15 நாட்கள் கழித்தே அந்த 2 ரூபாயை பெறமுடியும் என்ற கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சாவன்.

இதுகுறித்து சாவன், “கடந்த மூன்று, நான்கு வருடங்களில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்ய ரூ. 40,000 செலவு செய்தேன்” என்கிறார் வருத்தமுடன்.

image

சாவனின் மகன் அன்னா ராஜேந்திர சாவன் கூறுகையில், “நாங்கள் 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு விளைவித்து, 10 சாக்குகள் நிறைய சோலாப்பூர் மண்டிக்கு விற்பனைக்காக கொண்டுசென்றோம். எடைபோட்டு ஏலம்விட்ட பிறகு எங்களுக்கு 2 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதற்காக நான் லோன் வாங்கியுள்ளேன். அதனை எப்படி திருப்பி செலுத்துவேன்?” என்கிறார் ரணமுடன். மேலும், கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் ரூ. 20 விற்பனையானது எனவும், ஆனால் இந்த பருவ அறுவடையில் அதீத உற்பத்தியால் விற்பனை சரிந்துவிட்டது என்கிறார்.

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், விவசாயிகளுக்கு 25 சதவீதத்துக்கு மேல் உயர்தர விளைபொருட்கள் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட 30% விளைபொருட்கள் நடுத்தரமானதாகவும், மீதமுள்ளவை தரம் குறைவானதாகவுமே இருக்கிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டிலுள்ள பெரிய மொத்த விற்பனை வெங்காய மண்டிகளில் வெங்காய விலையானது 70%க்கும் அதிகமாக சரிந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்