”எங்களது தேர்வு முடிவு வெளியாகல”-போராட்டத்தில் ஈடுபட்ட TNPSC தேர்வர்கள் அதிர்ச்சி புகார்!
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் அடுத்தடுத்து பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சிபெற்றது குறித்து விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு புகார் குறித்து, குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை எனக் கூறி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு 40க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. விதிகளை மீறியதாகக் கூறி தங்களது தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யத் தகுதியற்றது என டிஎன்பிஎஸ்சி பதிலளித்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு, நில அளவர் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இரண்டு தேர்வுகளிலும் முறைகேடு புகார் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முறைகேடு புகார் தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை செயலாளரிடம் கூறி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், காரைக்குடியில் ஒரே மையத்தில் நிலஅளவர் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற 615 பேரின் விவரங்கள்கிடைத்துள்ளாகவும் குறிப்பிட்டார். தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விவாதத்தின்போது, தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் நடந்ததை சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
கருத்துகள்
கருத்துரையிடுக