மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்: ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதியின் 100-ம் ஆண்டு விழா தொடக்கம் https://ift.tt/PZhD7gT

சென்னை: மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ‘இந்து குழுமம்’சார்பில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதி 100-வது ஆண்டை நிறைவு செய்யஉள்ளது. இதையொட்டி 350 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஏப்.1-ம் தேதி மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் நிகழ்வு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக 100-ம்ஆண்டின் தொடக்க விழா மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராக மகாதேசிகன் தொடங்கி வைத்தார். 100-வதுஆண்டு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு மாதமும் கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள், இசை, நாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்