அக்னி நட்சத்திர விழா நிறைவு: பழநியில் பக்தர்கள் கிரிவலம் https://ift.tt/C1nBbUu
திண்டுக்கல்: பழநியில் இன்று அக்னி நட்சத்திர விழா நிறைவையொட்டி அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும்,வைகாசி மாதத்தில் முதல் ஏழு நாட்களும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும்.இந்த ஆண்டு அக்னி நட்சத்திர விழா மே8-ம் தொடங்கியது. சித்திரை கழுவு என்று அழைக்கப்படும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 14 நாட்களுக்கு பழநி மலையைச் சுற்றி காலை மற்றும் மாலையில் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக