புத்தாண்டு பலன்கள் 2024 - துலாம் ராசியினருக்கு எப்படி?

துலாம் ( சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலா ராசி அன்பர்களே... நீங்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். இயல்பாக செயலாற்றலும் அறிவுத் திறனும் கொண்டவர்களாக இருப்பீர்கள். தனிப்பட்ட திறமைகள் கொண்ட நீங்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்து இருப்பீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நபர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தால் உங்களுக்கு வெற்றி தேடி வரும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது. தெய்வ பலமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு நிறைந்திருக்கும். இதன் மூலம் எல்லாவித பிரச்சினைகளிலிருந்து எளிதாக விடுபடுவீர்கள்.

இந்த ஆண்டில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்