புத்தாண்டு பலன்கள் 2024 - மகரம் ராசியினருக்கு எப்படி?

மகரம் (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கல்விமான் என்று பலராலும் பாரட்டப்படும் அளவுக்கு உங்களிடம் சிறப்பான அறிவாற்றல் மட்டுமல்லாமல், கற்பனைத் திறனும் அபரிமிதமாக அமைந்திருக்கும். இளம் வயதில் எப்படியிருப்பினும் உங்கள் அயராத உழைப்பால் நாளும் படிப்படியாக முன்னேறி வாழ்வில் ஓர் உயர்வான உன்னத நிலையை எட்டிப்பிடித்துச் சாதனையாளராகத் திகழ்வீர்கள். மலை குலைந்தாலும் நிலைகுலையாத மனஉறுதி கொண்டவர்களாக இருந்து எதையும் எதிர்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பீர்கள். ஓரளவு பிடிவாதகுணம் என்ற உங்கள் பலவீனத்தைக் கைவிட்டீர்களானால், உங்களுக்கு எதிரிகளே இல்லை என்னும் அளவுக்கு எல்லோரையும் உங்கள் வசம் ஈர்த்துக் கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர்கள் நீங்கள். எதிரிகளைச் சமயம் பார்த்திருந்து கவிழ்த்து விடுவதிலும் தயங்க மாட்டீர்கள். ஜோதிடம், வாஸ்து போன்றவற்றிலும் எழுத்துத்துறையிலும் சிறந்த ஞானஸ்தர்களாக விளங்குவீர்கள்.

இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணப்படுவீர்கள். வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதோடு பிள்ளைகளின் நலனுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும். சமூகத்தில் உங்கள் பெயர் கவுரவம் கூடும். இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்