மேஷம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள். பரந்த மனப்பான்மை உடையவர்கள். கிரகநிலை - ராசி ஸ்தானத்தில் இருந்து தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

பலன்கள்: இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். உங்களின் சுய முயற்சியினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதிக வேகமில்லாமல் நிதானமாகவும், பொறுப்புடனும் காரியமாற்றுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். வீண் அபவாதங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். உங்களின் இரக்க குணத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். அதேநேரம் சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம். தாயார் வழி உறவுகள் சீராகும். உங்களுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் அடங்குவார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்