கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 10 - 16
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 15-05-2024 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: எதிலும் நேர்மையும், வளைந்து கொடுக்காத உறுதியான கொள்கையும் தலைமைப் பண்பும் உடைய கடக ராசி அன்பர்களே... இந்த வாரம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக