மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.26 - அக்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். திடீரென பண வரவு இருக்கும். இழுபரியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல நேரலாம். அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்கும். ஒப்பந்ததாரர், வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை காரணமாக திடீரென டென்ஷன் ஆகலாம். குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக