ஆன்மாவையும் உயிரையும் கொடுக்கும் உன்னத கலைஞனின் பிறந்தநாள் இன்று! #YuvanShankarRaja
ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையால் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவிற்கு பின்னணி இசையானது ஒரு நல்ல படத்திற்கு முக்கியமானது. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை இயக்குநர் பாரதிராஜாவின் வார்த்தைகளிலேயே நாம் புரிந்து கொள்ளலாம். பாரதிராஜா கொடுத்த வெற்றிப் படங்களில் முதன்மையான படம் என்றால் அது ’முதல் மரியாதை’தான். முதல் மரியாதை படம் குறித்து பேட்டி ஒன்றில் பாரதிராஜா பேசிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட ஒரு காட்சியை பின்னணி இசை கோர்வைக்கு முன்னும் பின்னும் எப்படி இருந்தது என்று விளக்கி இருப்பார். பின்னணி இசையால் அந்த காட்சியினை மிக உச்சமான இடத்திற்கு கொண்டு சென்றிருப்பார் இசைஞானி இளையராஜா. புல்லாங்குழலை வைத்து மேஜிக் செய்திருப்பார். ஆம், ஒரு காட்சிக்கு உயிர் போன்றது அதன் பின்னணி. தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்திருந்தாலும் பின்னணி இசையில் முத்திரை பதித்தவர்கள் சொற்பமானவர்களே. அதில் பின்னணி இசையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர