இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விருச்சிகம் ராசியினருக்கான அக்டோபர் மாத பலன்கள் - முழுமையாக | 2022

படம்
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: இம்மாதம் 3-ம் தேதி புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-ம் தேதி செவ்வாய் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18-ம் தேதி சூர்யன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-ம் தேதி சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 23-ம் தேதி புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துலாம் ராசியினருக்கான அக்டோபர் மாத பலன்கள் - முழுமையாக | 2022

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: இம்மாதம் 3-ம் தேதி புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-ம் தேதி செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18-ம் தேதி சூர்யன் பகவான் ராசிக்கு மாறுகிறார். 20-ம் தேதி சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார். 23-ம் தேதி புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

108 வைணவ திவ்ய தேச உலா - 13 | ஒப்பிலியப்பன் கோயில் https://ift.tt/PqNnosw

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோவில் பூமாதேவி சமேத ஒப்பிலியப்பன் பெருமாள் கோயில் 13-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. தென் திருப்பதி என்று இத்தலம் சிறப்பு பெற்றுள்ளதால், இப்பெருமாளுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும் பெருமாளுக்கு உப்பில்லா நிவேதனம் அளிக்கப்படுகிறது. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். தாயாரின் அவதாரத் தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூர்யா முதல் மடோன் அஸ்வின் வரை.. குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற தமிழ் பிரபலங்கள்!

படம்
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 68-வது தேசிய விருதுகளுக்கு தேர்வான பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் பணிபுரிந்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் திரைப்பட விழா இயக்குநரகம் தேசிய விருதினை அறிவிக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேசிய விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020-ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் ஜூலை 22-ம் தேதி டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்திற்காக பெற்றுக்கொண்டார். அவருடன் அவரது மனைவி ஜோதிகாவும் விழாவில் கலந்துகொண்டார். இதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று) பெற்றுக்கொண்டார். சி

‘போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என தெரியவில்லை’ - இயக்குநர் பார்த்திபன்

படம்
தொடர்ந்து சோழர்கள் தொடர்பான கதாபாத்தரங்களே வருவதால், போன ஜென்மத்தில் தான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ சோழனின் பெருமையை சொல்லி நம்மால் மாளாது. ஆயிரம் ஆண்டுகளாக சொல்லி வருகிறோம் ராஜராஜன் செய்த சாதனைகளை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே நிலைத்து நிற்கும். இந்தப் பெரிய கோயிலை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு ரசனையோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதே ரசனையோடு தான் இந்த ‘பொன்னியின் செல்வன்’ இருக்கும். இந்தப் ‘பொன்னியின் செல்வனை’ நாம் கொண்டாட வேண்டியது, பாராட்ட வேண்டியது இந்த தஞ்சை மண்ணில் தான். இது ஒரு பான் (PAN) இந்தியா படம். அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று உள்ளார்கள். இதில் நடித்த - நடிகர் அனைவரும் சிறப்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 6-ம் தேதி மகா தீபம் https://ift.tt/6y1CzIa

படம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று(30-ம் தேதி) நடைபெற்றது . from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

PS1 - நினைத்ததை சாதித்திருக்கிறாரா மணிரத்னம்? #PTReview

படம்
கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு, திரை வடிவத்தைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். அரியணைக்கான போர், சூழ்ச்சியால் நிகழும் குழப்பங்கள், வஞ்சத்தால் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிகள், உறவு, காதல், நட்பு, பகை என அனைத்தும்தான் பொன்னியின் செல்வன். அதை கூடிய வரை உயிர்ப்புடன் திரைக்குக் கடத்தியிருக்கிறார். ராஷ்ட்ரகூடத்தில் போர் வெற்றிக்குப் பின் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), தன் நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தி) ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதித் திட்டம் ஒன்று கடம்பூர் மாளிகையில் தீட்டப்படுகிறது. அது என்னவென அறிந்து தன் தந்தை சுந்தரச்சோழரிடமும் (பிரகாஷ் ராஜ்), தங்கை குந்தவையிடமும் (த்ரிஷா) சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த பொறுப்பு. அதை ஏற்கும் வந்தியத்தேவன் பயணப்படுவதில் தொடங்குகிறது படம். கடம்பூர் சம்புவரையர் மாளிகை, தஞ்சை கோட்டை, பழையரை, இலங்கை என நீள்கிறது அவனது பயணம். ஒரு பக்கம் சோழ சாம்ராஜ்யத்தை சரிக்க நந்தினி (ஐஸ்வர்யா ராய்) போடும் திட்டங்கள், பதவி ஆசையால் மதுராந்தகன் (ரகுமான்) பழுவேட்டரையர் (சரத்குமார்) மற்றும் குறுநில மன்னர்களின் சதி, இன்னொரு பக்கம் எப்படியாவது

``தியேட்டரிலிருந்தபடி படத்தை சிறு சிறு வீடியோக்களாக எடுத்து பரப்புகின்றனர்”- ஜிவிஎம் வேதனை

படம்
“நிறைய உழைத்து, பணம் செலவிட்டு திரைப்படங்களை எடுக்கும் நிலையில், செல்போனில் அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் படக்காட்சியை பதிவிடுகின்றனர். இது வேதனை அளிக்கிறது” என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் அண்மையில் திரைக்கு வந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே ' பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறித்து பேசினார். அப்போது அவர்,  “ ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல் அமைந்திருந்தபோதும், ஒரு பெண் மட்டும் தனியாக நின்று நடனமாடும் பாடலாக இல்லாமல், ஆண்களும் இடம்பெறும் வகையில் அந்த பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதனால் சிறிய அறையில் 40 ஆண்களும் இணைந்து நடனமாடும் வகையில் அந்த பாடலை எடுத்தோம். வழக்கமான முறையிலேயே சிந்திக்காமல் மாற்றி சிந்தித்து படைப்புகளை உருவாக்க வேண்டும்” என்றார். மேலும் பேசுகையில்,  “ திர

கன்னி ராசியினருக்கான அக்டோபர் மாத பலன்கள் - முழுமையாக | 2022

படம்
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) கிரகநிலை - ராசியில் சூர்யன், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: இம்மாதம் 3-ம் தேதி புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார். 9-ம் தேதி செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18-ம் தேதி சூர்யன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-ம் தேதி சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 23-ம் தேதி புதன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக நானே வருவேன்-ஐ தள்ளி வைத்திருக்கணுமா?

படம்
‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் ‘நானே வருவேன்’ படமும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது முதல் பார்க்கும் பக்கங்களில் எல்லாம் ஒரு கேள்வி தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதாவது, தமிழ் சமுதாயத்தின் பெருமையான சோழர்களின் வரலாற்றை தழுவி எடுக்கப்படும் ஒரு படத்திற்கு போட்டியாக ஏன் ‘நானே வருவேன்’ படத்தை வெளியிட வேண்டும், கொஞ்சம் தள்ளி வைக்கலாமே என்று ஒரு தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கில் ‘பாகுபலி’ படம் ரிலீஸ் ஆனபோது மற்ற படங்கள் ஒதுங்கிக் கொண்டதாக குறிப்பிட்டு அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு மற்றவர்கள் வழிவிடலாம் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு சார்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. அவர்கள் புரமோஷன் வேலைகளில் படுவேகமாக செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும், ‘நானே வருவேன்’ பட புரமோஷனை ஒட்டி தாணு அளிக்கும் பேட்டிகளில் தொடர்ச்சியாக இது தொடர்பான கேள்வி முன் வைக்கப்பட்டு வந்தது. அதற்கு தாணு, “இரண்டு படங்களையும் ஏன் ஒரு போட்டியாக கருத வேண்டும். இரண

‘நான் எந்தப் படத்திற்கும் இந்த அளவிற்கு புரமோஷன் செய்ததில்லை’ - நடிகை த்ரிஷா

படம்
மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நாளை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகை ஷோபிதா கூறுகையில், “இந்தப் படத்தின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெரிய பெருமை. சரித்திர கால உடைகள் அணிந்து நடித்தது, நடனமாடியது எல்லாம் எப்போதும் நீங்க நினைவுகளாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியடைய வேண்டும் என்றால், இப்படி ஒரு வெற்றியை இதற்கு முன் யாரும் பார்த்தே இருக்கக் கூடாது. அந்த அளவு ஹிட் ஆக வேண்டும்" என்று தெரிவித்தார். நடிகை த்ரிஷா பேசுகையில், “இந்த சோழா டூரின் போது என்னுடைய தோற்றம் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள். அதற்கு காரணம் எனது குழு. அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளை சென்னையில் தான் துவங்கினோம். இப்போது மறுபடி ச

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

படம்
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் ந

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் கசிவு!

படம்
‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும், ஆதித்யராம் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட கெட்டப்பில் நடந்து வருவது போன்றும், ரசிகர்களை பார்த்து கையசைப்பது போன்றும் உள்ளது. இந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார், விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து வருகின்றனர். அண்மைக்காலமாகவே படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு தெரியாமல் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது வழக்கம

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.5 வரை

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம்) கிரகநிலை - ராசியில் சனி(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.5 வரை

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

`நானும் இன்னும் படத்தை பார்க்கலை... உங்ககூடத்தான் பார்க்கப்போறேன்’- நடிகர் கார்த்தி

படம்
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.  இப்படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் செப் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். நிகழ்வில் பேசிய கார்த்தி "இப்போதுதான் விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களாக படத்தை மற்ற நகரங்களிலும் சென்று சேர்க்கும் விதமாக ப்ரமோஷனுக்காக சென்றிருந்தோம். தொடர்ச்சியாக படத்தைப் பற்றி சொல்லி சொல்லி, இப்போது அவர்களும் பொன்னியின் செல்வன் என்ற பெயரை தெளிவாக உச்சரிக்கிறார்கள். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கூடவே விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், மணிரத்னம் என மிகப்பெரிய திறமையாளர்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படத்திற்கான டிக்கெட் புக்கிங்கைப் பார்க்கும் போதே படத்தைப் பற்றிய ஆர்வம் மக்களிடம் எந்த அளவு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ர

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமலையில் நித்ய கல்யாணம்... பச்சை தோரணம்... - ஏழுமலையானுக்கு 365 நாட்களில் 470 விழாக்கள் https://ift.tt/uIsD15e

படம்
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தின உற்சவம், வார உற்சவம், மாதாந்திர உற்சவம்,வருடாந்திர உற்சவங்கள் என எப்போதும் திருவிழா நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், உற்சவங்கள், சேவைகள் நடந்து கொண்டே இருப்பது இங்கு விசேஷம். அதனால்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலை ‘நித்ய கல்யாணம், பச்சை தோரணம்’ கொண்ட கோயில் என பக்தர்கள் அழைக்கின்றனர். நித்ய உற்சவங்கள் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பரியனுக்கு புரிந்தது ஜோவுக்கு எப்படி புரியாமலேயே போகும்!! பரியேறும் பெருமாள் ஓர் ரிவைண்ட்

படம்
ஒரு குளத்தில் கல்லை எறிந்த பின்னர் சிறிது அங்கு சலனத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். அப்படித்தான் பரியேறும் பெருமாள் திரைப்படமும் பார்த்தவர்களின் மனங்களில் படிந்திருந்த சாதி எனும் நீர்க்குளத்தில் கல்லை விட்டெறிந்தது. கலையால் வடிக்கப்பட்ட அந்த கல்லின் தாக்கம் படம் பார்த்தவர்களின் மனதில் நிச்சயம் சில நாட்களாக குடிகொண்டிருந்திருக்கும். சாதி எனும் அன்பை கொல்லும் அரக்கனுக்கு எதிராய் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கும். பலரையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும். ஒரு பிரசார நெடியில் இல்லாமல், உணர்த்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருந்தது தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அதற்கு முன்பு பா.ரஞ்சித் எடுத்திருந்த படங்களில் இந்த உணர்த்துதல் இல்லாமல் இருந்ததாகவும், ஒரு கலைப்படைப்பாக சில விமர்சனங்களை சந்திக்க செய்திருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு திரைப்படமாக, தான் சொல்ல வந்ததை க்ளியர் அண்டு க்ளியராக பேசியிருப்பார். இந்தப் படத்தை பெரிய அளவில் பலரும் கொண்டாடி தீர்த்தார்கள். படம் வெளியான தருணத்தில் விமர்சன ரீதியாகவும் அப்படியொரு பார

மக்கள் மிகவும் விரக்தியில் உள்ளனரா? - பாலியல் தொல்லைக்கு ஆளான மலையாள நடிகை கேள்வி!

படம்
சமீபத்தில் கோழிக்கோட்டில் நடந்த பிரபல சினிமா புரமோஷனுக்குச் சென்ற நடிகைகள் பொதுமக்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள பிரபல மாலில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையங்களில் பரவி வைரலானதை அடித்து தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்த செய்திகள் வெளியானது. பாதிக்கப்பட்ட நடிகை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘’கோழிக்கோடு நான் அதிகம் நேசிக்கக்கூடிய இடம். ஆனால் இன்றிரவு நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது, கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் என்னை பிடித்தார். இதை சொல்வதற்கே அருவருப்பாக இருக்கிறது. நம்மை சுற்றியுள்ள மக்கள் மிகவும் விரக்தியில் உள்ளனரா? புரமோஷனுக்காக நிறைய இடங்களுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் இதுபோன்ற மோசமான அனுபவம் எங்கும் ஏற்பட்டதில்லை. என்னுடன் வந்தவருக்கும் இதேபோன்ற அனுபவம் கிடைத்திருக்கிறது. அவர் அதற்கு ரியாக்ட் செய்துவிட்டார். ஆனால் அந்த சூழ்நிலையில் நான் சில நொடிகள் அசைவற்று போனதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை’’ என்று கூறியுள்ளார்.

”பொன்னியின் செல்வி..!” - கல்கியின் சிறந்த கற்பனை கதாபாத்திரம் ’பேரழகி’ நந்தினிதான்! ஏன்..?

படம்
நூறாண்டு வரலாறு கொண்ட சோழப் பேரரசை, பாண்டிய அரசனை வெட்டி வீழ்த்தி ஈடு இணையற்ற பலத்தோடு தனது பொற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அந்த பேரரசை ஒரு இளம்பெண் மடைமாற்றினார்! தடுத்து நிறுத்தினார். கிட்டத்தட்ட அனைத்து அரச குலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஏற்க மறுக்கிறதா மனம்!? கவலை வேண்டாம்! நீங்கள் பொன்னியின் செல்வன் நாவலை முன்பே படித்திருந்தால் அல்லது இனி அதன் திரைமொழியான “பொன்னியின் செல்வன்” படத்தை பார்க்கும்போது மேற்சொன்ன வரிகளை உங்கள் மனம் நெருடலில்லாமல் முழுமையாக ஏற்கும். பேரழகியான நந்தினியின் நயவஞ்சகத்தால் சோழப் பேரரசு தடம் புரண்டதை உள்ளது உள்ளபடி உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அப்படி கதையில் என்ன மாற்றத்தை செய்து விட்டார் நந்தினி? வாருங்கள் பார்ப்போம்! ஒற்றை நாழிகையில் ஒரு பேரரசை வீழ்த்தும் நயவஞ்சகம்! நந்தினிக்கு இணையான அழகில் நாவலில் வேறு யாரையும் ஒப்பிட்டு இருக்க மாட்டார் கல்கி. அவ்வாறான ஒரு சூழல் கூட நாவலில் வராதவாறு தான் எழுதியிருப்பார். நந்தினியைப் பார்க்க ஒரு ஆண்மகன் செல்கிறாரா? அவனது நோக்கம் என்னவாக வேண்டுமானால் இருக்