இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமலையில் தெப்போற்சவ திருவிழா https://ift.tt/MdXkTKt

படம்
திருமலை : திருமலையில் மார்ச் மாதம் 3-ம்தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தெப்போற்சவம் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு இவ்விழா மார்ச் 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல்நாள் சீதா, ராமர், லட்சுமணரும், 2-வது நாள் ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணரும் பவனி வருவர். மீதமுள்ள 3 நாட்களும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்னுமா இதெல்லாம் காமெடின்னு நம்பறீங்க! சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் விமர்சனம்

படம்
சிங்கிள் பையன் ஒருவருக்கு ஸ்மார்ட்ஃபோனில் நல்லதொரு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இணை கிடைத்தால் என்ன நடக்கும் என்பது தான் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்’ படத்தின் கதை. உணவு டெலிவரி செயலியின் மூலம் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார் சிவா. அவருக்கு எப்படியோ விஞ்ஞானி ஷாரா கண்டுபிடித்திருக்கும் ஸ்மார்ட்ஃபோன் கைக்கு கிடைத்துவிடுகிறது. அந்த ஸ்மார்ட்ஃபோனின் உதவியுடன் எல்லா விதமான ஸ்மார்ட் வேலைகளையும் செய்து ஓவர்நைட்டில் ஒபாமா அளவுக்கு பாப்புலராகிறார் சிவா. அந்த மொபைலின் முதலீட்டளாரான பக்ஸ் ஒரு பக்கம் மொபைலைத் தேடுகிறார். மொபைலைக் களவாட KPY பாலா ஒரு பக்கம் முயல்கிறார். இதற்கிடையே நல்லது நடந்தா மொத்தமா நடக்கும் என்பதாக சிங்கிள் சிவாவுக்கு ஜோடியும் கிடைத்துவிடுகிறது. இதுவரை எல்லாம் நல்லதாய் போய்க்கொண்டு இருக்க, 2.0 ரெட் சிப் பொருத்தப்பட்ட எந்திரனாக மாறிவிடுகிறார் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் சிம்ரன். சிம்ரன் ஏன் கோபம் அடைந்தார், அதை எப்படி சிவா சமாளித்தார் என்பதுதான் மீதிக்கதை. சிங்கிள் ஷங்கராக சிவா. வழக்கம் போல அவர் எப்படிப் பேசுவாரோ, அப்படியே தான் இந்த படத்திலும் பேசியிருக்கிற

கும்பகோணம் | ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் ஊர்வலம் https://ift.tt/dgcp4CB

படம்
கும்பகோணம் : கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களின் இரட்டை வீதியுலா நடைபெற்றது. மாசிமக விழாவுக்கான இக்கோயிலில் கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்று காலை வெள்ளிப் பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அஷ்டம சனியை கண்டு பயப்பட வேண்டாம்! 

படம்
ஜெனன ராசியை கடக ராசியாக கொண்டவர்கள் புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் 1,2,3,4 ம், ஆயில்யம் 1,2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களா நீங்கள்? அஷ்டம சனியைக் கண்டு பயப்பட வேண்டாம். அஷ்டம சனி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் ஏழரை சனியை விட மோசமான பலன்களை தரவல்லது. ஏழரை சனி என்பது, 3 பிரிவாக பிரித்து, விரய சனி, ஜென்ம சனி, குடும்ப சனி ஆக 2 ½ வருடங்களாக, ஏழரை வருடங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பை தரக் கூடியது. ஆனால் ஏழரை வருட பாதிப்புகளையும், 2 ½ வருடத்தில் கொடுக்கக்கூடியதுதான் அஷ்டம சனி. அப்படி என்னென்ன பாதிப்புகள் நிகழக் கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜ யோகம் தரும் ராகு - கேது

படம்
ஜோதிடத்தின் புரியாத புதிர் ராகு - கேதுக்கள். ராகு - கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடியது ஒரு பயமும் பதற்றமும் தான். ஆனால், ராகு - கேதுக்கள், இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பலாபலன்களை அப்படியே கொடுக்கும். தாத்தா - பாட்டியின் பிரதிபலிப்பே ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணியமாக கருதப்படுகிறது. தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள். தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கர்ம வினைகள் குறிப்பிட்ட காலத்தில் நல்லவைகளையும், குறிப்பிட்ட காலத்தில் தீயவைகளையும், உணர்த்துவதிலும் உணரவைப்பதிலும் ராகு - கேதுக்களே முதன்மையானது. ஒருவருடைய மன நிலையில் அகம் - புறம் சார்ந்த செயல்பாடுகளிலும் கூட ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு. வெளிப்புற பொருட்கள் வாங்குவதில், ஏற்படக்கூடிய, எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், பேராசைகள் காரணத்தால், உடலின் புறப்பொருட்கள் மூலமாக தண்டனை அனுபவிப்பார். இதுவே ராகுவின் தன்மை, இது ஒரு மாயை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai

லியோ படப்பிடிப்பில் ‘தம்பி விஜய்யுடன்.. லோகேஷ் பெரும் வீரனைப் போல்’ - மிஷ்கின் நெகிழ்ச்சி!

படம்
‘லியோ’ படத்தில் தனது பகுதி நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், காஷ்மீர் படப்பிடிப்பில் நடந்த சுவராஸ்ய விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் வாயிலாக பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானலை அடுத்து தற்போது காஷ்மீரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டு சென்னை திரும்புவதாக தெரிவித்துள்ள மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “இன்று காஷ்மீரிலிருந்து சென்னை திரும்புகிறேன்... மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட 'Leo' படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத

”சங்கடமாதான் இருக்கு.. ஆனா என்ன பண்ண” - சிம்புவின் கெட்டப்பால் பத்து தல இயக்குநர் வருத்தம்

படம்
பரபரப்புக்கும் கிசு கிசுக்களுக்கும் பஞ்சமே இல்லாத நடிகரில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வரக் கூடியவர் சிலம்பரசன். இருப்பினும் அந்த பேச்சுகளுக்கெல்லாம் தன்னுடைய படங்களின் மூலம் பதிலடி கொடுப்பதையும் சிம்பு தவறுவதில்லை. தொடர்ந்து தோல்வி அல்லது சுமாரான படங்களாக நடித்து வந்த சிம்பு, மாநாடு ஹிட்டானதை அடுத்து மீண்டும் முன்னணி நட்சத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார். அதன் பிறகு வந்த வெந்து தணிந்தது காடு வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவரது நடிப்பிலான ’பத்து தல’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி மார்ச் 31ம் தேதி ரிலீசாக இருக்கும் ’பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடியிருக்கும் நம்ம சத்தம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எழச் செய்திருக்கிறது. இந்த நிலையில், பத்து தல படத்தின் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா சிம்புவின் கெட்டப் குறித்தும், படத்தின் சில சாராம்சங்கள் குற

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் 29-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் https://ift.tt/Oneafby

படம்
சென்னை: அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சென்னை அடையாறில் உள்ளஅனந்த பத்மநாப சுவாமி கோயிலின் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அதைத்தொடர்ந்து அனந்த பத்மநாபசுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. மாலையில்கலசஸ்தாபனம் யாகசாலையும், தீபாராதனையும், தொடர்ந்து லட்சுமி நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாரிசை ஓரங்கட்டிய வாத்தி.. எட்டு நாளில் இத்தனை கோடி வசூலா? அண்மைத் தகவல் இதோ!

படம்
கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகர் தனுஷ் தற்போது தென்னிந்திய சினிமாவின் டோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடிப்பில் வெளியான படம்தான் SIR. தமிழில் வாத்தி என்ற பெயரிலும் வெளியானது. சமுத்திரகனி, சம்யுக்தா என பலரும் நடித்திருந்த இந்த படம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன? அதனை இளம் ஆசிரியராக வரும் தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பதுமாகவே அமைந்திருக்கிறது வாத்தி பட கதை. விமர்சன ரீதியில் கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்த தனுஷுக்கு வாத்தி படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையே பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதன்படி படம் வெளியாகி எட்டே நாட்களில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் கலெக்‌ஷனை வாத்தி படம் பெற்றிருப்பதாக படத்தின் இயக்குநரே வெற்றி விழாவின் போது கூறியிருக்கிறார். முதல் இரண்டு நாட்களிலேயே 14 மற்றும் 20 கோடி ரூபாய் முறையே வசூல் நிலவரங்கள் சொல்லப்பட்டாலும் தயாரிப்பு நிர்வாகமே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது தனுஷுக்கு இருக்கு

திருத்தணி, காஞ்சி காமாட்சி, திருப்போரூர் கந்தசுவாமி கோயில்களில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம் https://ift.tt/ZyYKucD

படம்
திருவள்ளூர் / காஞ்சி / திருப்போரூர்: திருத்தணி முருகன் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் மற்றும் திருப்போரூர் கந்த சுவாமி கோயில்களில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா தொடக்கம் https://ift.tt/IrGtqXu

படம்
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 3 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா வந்து கோயிலைச் சேர்ந்தது. அதிகாலை 5.20 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் மாசி திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு 16 வகையான அபிஷேகம், மகா தீபராதனை நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்கும் "தக்ஸ்" தப்பித்ததா? இல்லை நம்மை சிறைபிடித்ததா? #Review

படம்
மலையாளத்தில் தினு பாப்பச்சன் இயக்கி 2018ல் வெளியான படம் 'ஸ்வாதந்தர்யம் அர்தராத்ரியில்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது குமரி மாவட்டத்தின் தக்ஸ். `ஹே சினாமிகா’ படத்திற்குப் பிறகு பிருந்தாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஹ்ருதூ ஹரோன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஷ்காந்த், அனஸ்வரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயலும் ஒரு குழுவைப் பற்றிய கதைதான் இந்த “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” படம். 2005ல் நாகர்கோவில் சிறைச்சாலைக்கு கைதியாக வருகிறார் சேது (ஹ்ருதூ ஹாரோன்). கொலை மற்றும் கொள்ளை குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதே சிறையில் இருக்கும் துரையுடன் (பாபி சிம்ஹா), சேதுவுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த ஜெயிலின் வார்டன் ஆரோக்ய தாஸ் (ஆர்.கே.சுரேஷ்), படு ஸ்ட்ரிக்டான ஆளாக இருக்கிறார். கைதிகளை அடித்து நொறுக்குவது, மிரட்டி உருட்டுவது என டெரர் காட்டுகிறார். இதற்கிடையே தன் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதை விரும்பாத சேது, அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார். அந்த திட்டத்தில்

தரமணி: எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி திரையரங்கில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

படம்
தரமணியில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் திரையரங்கு மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்.ஆர்.திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், 10.30 மணியளவில் தெர்மாகோலால் அமைக்கப்பட்டிருந்த ஃபால் சீலிங் எனப்படும் மேற்கூரை பிய்த்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. திரையின் அருகில் அது விழுந்ததால், மாணவர்கள் ஆசிரியர்கள் என யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனையடுத்து திரையிடல் நிறுத்தப்பட்டது. மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரவும், நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

”நான் போட்டது ரூ. 40,000.. ஆனா எடுத்தது ரூ.2” - சரிந்த வெங்காய விலையால் நொந்த விவசாயி

படம்
அதிக உற்பத்தியால் வெங்காய விலை இந்த முறை மலிந்துபோயுள்ளது. ரூ. 40,000 செலவு செய்து உற்பத்தி செய்த கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்திற்கு ரூ. 2 காசோலையை வருமானமாக பெற்றுள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பார்சி தாலுக்காவுக்கு உட்பட்டது போர்கோன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துகரம் சாவன். விவசாயியான இவர் ரூ. 40,000 செலவு செய்து வெங்காயம் பயிரிட்டுள்ளார். விளைந்த கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்தை 70 கி.மீ பயணம் செய்து சோலாப்பூர் விவசாய உற்பத்தி சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார். தனது குளிர்கால அறுவடையை அங்கு ஏலம் விட்டதில் 1 கிலோ 1 ரூபாய்க்கு விற்றுள்ளது. இப்படி மொத்த வெங்காயமும் விற்கப்பட்டதில் ரூ.512 கிடைத்துள்ளது. அதில் போக்குவரத்து செலவினமாக ரூ.509.50 எடுக்கப்பட்டு, மீதமுள்ள ரூ.2.49 அவருக்கு லாபமாக கிடைத்துள்ளது. அதையும் காசோலையாக கொடுத்ததால் 15 நாட்கள் கழித்தே அந்த 2 ரூபாயை பெறமுடியும் என்ற கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சாவன். இதுகுறித்து சாவன், “கடந்த மூன்று, நான்கு வருடங்களில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்ச

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம் https://ift.tt/ye04UKW

படம்
விழுப்புரம் : செஞ்சி அருகேயுள்ள மேல் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற மாசி தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் இழுத்தனர். இக்கோயிலில் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெருவிழா தொடங்கியது. கடந்த 19-ம் தேதி மயானக் கொள்ளை, 22-ம் தேதி தீமிதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரிலிருந்து லெஜண்ட் சரவணன் வெளியிடப்போகும் முக்கிய அப்டேட்... ஒருவேளை இருக்குமோ! #LEO

படம்
இன்னும் ஒரு சில நாட்களில் முக்கிய அப்டேட்டுகளை வெளியிடப்போவதாக, காஷ்மீரில் இருக்கும் தனது புகைப்படங்களை லெஜண்ட் சரவணன் ட்வீட் செய்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்ஸ், ஒருவேளை விஜய்யின் ‘லியோ’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் அவர் வருகிறாரோ என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கிய இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா நடித்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிய இந்தப் படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மயில்சாமி நடித்திருந்தனர். அவர்களுடன் விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, பேபி மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும், இந்தப் படம் ஆரம்பித்தது முதல்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி | ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு https://ift.tt/e4sFcrb

படம்
திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் 80 சதவீத டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவே வெளியிட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு பக்தர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து போய் விடுகின்றன. இந்நிலையில், வரும் மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான அங்கபிரதட்சனம் டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முத்தழகின் வாழ்க்கை பருத்திவீரனால் காவு வாங்கப்பட்டதா? என்ன சொல்கிறது படம்? - ஓர் அலசல்!

படம்
சினிமா என்பது மனிதர்களுடைய எண்ணங்களை, கனவுகளை ஒரு கலைப் படைப்பாக உருவாக்குவது மட்டுமல்ல. அது, சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்கவும், மனிதர்களின் சிந்தனையை வளர்க்கவும் செய்யும். அந்த அளவிற்கு நவீன காலத்தில் மற்ற எல்லா கலைகளை காட்டிலும் சினிமாவின் தாக்கம் அதிக அளவில் சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஆனால், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்ற அளவிலேயே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஒரு திரைப்படம் குறித்த விமர்சனங்கள் எழும்போது ’ஏன் ஒரு பொழுதுபோக்கு சினிமாவுக்கு இப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள்?’ என்று பலரும் கூறுகிறார்கள். அது அப்படி அல்ல. கலை வடிவங்களே ஒரு மனிதனுக்கு அவனை தாண்டிய உலகின் பரந்த பார்வையை எடுத்துக்காட்டுகிறது. பரந்து விரிந்த இந்த உலகமானது ஒரு மனிதனுக்கு சினிமா போன்ற கலைப்படைப்புகளின் வழியேதான் பெரும்பாலும் அறிமுகம் ஆகிறது. அதனால், ஒரு சினிமா என்பதை வெறுமனே பொழுதுபோக்கு அம்சம் என்று புறந்தள்ளி விட முடியாது. இந்த கட்டுரையில் நாம் பருத்திவீரன் படம் குறித்துதான் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் போகிறோம். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பென்ச் மார்க் திரைப்படமாக பரு