இடுகைகள்

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்: ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதியின் 100-ம் ஆண்டு விழா தொடக்கம் https://ift.tt/PZhD7gT

படம்
சென்னை: மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ‘இந்து குழுமம்’சார்பில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதி 100-வது ஆண்டை நிறைவு செய்யஉள்ளது. இதையொட்டி 350 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஏப்.1-ம் தேதி மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் நிகழ்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 100-ம்ஆண்டின் தொடக்க விழா மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராக மகாதேசிகன் தொடங்கி வைத்தார். 100-வதுஆண்டு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு மாதமும் கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள், இசை, நாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
19-04-2023 சோபகிருது 6 சித்திரை புதன்கிழமை திதி: சதுர்த்தசி காலை 11.26 வரை. பிறகு அமாவாசை. நட்சத்திரம்: ரேவதி இரவு 11.55 வரை. பிறகு அஸ்வினி. நாமயோகம்: வைதிருதி பிற்பகல் 3.27 வரை. பிறகு விஷ்கம்பம். நாமகரணம்: சகுனி காலை 11.26 வரை. பிறகு சதுஷ்பாதம். நல்லநேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-10. யோகம்: மந்தயோகம் சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை. பரிகாரம்: பால் சூரியஉதயம்: சென்னையில் காலை 5.54. அஸ்தமனம்: மாலை 6.22. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1,3,5 சந்திராஷ்டமம் மகம், பூரம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பழைய நண்பர்களால் தொல்லைகள் அதிகமாகும். பூர்வீக சொத்து பிரச்சினை இழுபறியாக இருக்கும். ரிஷபம்: எதிலும் வெற்றி கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஷேர் மூலம் லாபம் வரும். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிதாக வாங்க திட்டமிடுவீர்கள். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஓம் சக்தி, பராசக்தி’ பக்தி முழக்கத்துடன் சமயபுரம் கோயிலில் சித்திரை தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் https://ift.tt/ltBeQw1

படம்
திருச்சி : திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் சக்தி, பராசக்தி’ என்ற பக்தி முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் திருத்தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இக்கோயிலுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு https://ift.tt/eKWjMEm

படம்
திருமலை : ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நாளை (ஏப்.20) வெளியிட உள்ளது. அதன்படி காலை 10 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் முறை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாக உள்ளன. இதில் 22-ம் தேதி வரை காலை 10 மணி வரை பக்தர்கள் பங்கேற்கலாம். இதையடுத்து ஜூலை மாதத்தில்திருக்கல்யாணம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம்,சகஸ்ர தீப அலங்கார சேவைபோன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்கள் அதே நாளில் காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியாக உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பூர்வீக நிலம், வீடு தொடர்பான பிரச்சினையில் நல்ல தீர்வு காணப்படும். ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங் களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப் படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்: ரெங்கமன்னருக்கு சாற்றுவதற்காக  மங்கல பொருட்கள் அனுப்பி வைப்பு https://ift.tt/LzBD8jM

படம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தின்போது ரெங்கமன்னருக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புமிக்கதாகும். இங்கிருந்து திருப்பதி பிரம்மோற்சவம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம் ஆகியவற்றில் ஆண்டாள் சூடி கலைந்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் அணிந்து பெருமாள் காட்சியளிப்பது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்