இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்லதே நடக்கும்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருணை மழையில் நனைந்து மகிழ்வோம்: தித்திக்கும் திருப்பாவை - 17 https://ift.tt/uzBNrHU

படம்
கருணை மழையில் நனைந்து மகிழ்வோம் அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

”ஹீரோ மாதிரி நடிக்க வேண்டாம்.. அந்த வேலைய நான் பாத்துக்குறேன்” - துணிவு ட்ரெய்லர் இதோ!

படம்
அஜித்தின் 61வது படமான துணிவு ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. ஹெச்.வினோத்தின் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் அஜித் மீண்டும் இணைந்திருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் துணிவு படத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தில் மஞ்சுவாரியர், ஜான் கொக்கேன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. இதனிடையே சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. Just saw something. Buy extra crackers. Lots of extra crackers. — NIRAV SHAH (@nirav_dop) December 29, 2022 இப்படி இருக்கையில், படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா கடந்த இரு நாட்களுக்கு முன்பு, “அதிக அளவிலான பட்டாசுகளை வாங்கி வைத்திருங்கள்.” என பூடகமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக

கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு 2023 எப்படி? - புத்தாண்டு பலன்கள்

படம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்): நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருக்கும் நீங்கள், மற்றவர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாதம், விவாதம் என வந்து விட்டால் வளைத்து கட்டிப் பேசும் நீங்கள் பொதுவாக மவுனத்தை விரும்புவீர்கள். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். உங்கள் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதிக்கு குறைவிருக்காது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். வாகனம் வாங்குவீர்கள். இந்த ஆண்டு முழுக்க பிள்ளைகளுக்கு அருமையாக இருக்கும். சூரியன் 6-ம் வீட்டில் வலுவடைந்திருப்பதால் நிலுவையில் இருந்த அரசுக் காரியங்கள் உடனே முடியும். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். புதன் 6-ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உறவினர்கள், நண்பர்களுக்காக அதிகம் உழைக்க வேண்டி வரும். இந்தாண்டு தொடக்கம் முதல் 23.4.2023 வரை

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு 2023 எப்படி? - புத்தாண்டு பலன்கள்

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்): வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பவர்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை எதிர்பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் உடனே முடியும். கல்யாண விஷயங்கள் கூடி வரும். பழைய வாகனத்தை கொடுத்து புதிதாக வாங்குவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக அறை கட்டுவீர்கள். புதிதாக வீடு கட்டுவதற்கும் இது சரியான நேரம். உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் இருந்தாலும், அதற்கேற்ற வருமானமும் உண்டு. அவ்வப்போது உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் ஆழ்மனதில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டாம். 23.4.2023 வரை குருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் இருப்பதால் சின்ன சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். புண்ணிய ஸ்தலங்கள் பலவற்றுக்கும் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்தில் பாகப் பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணமும் சாதகமாக அமையும். 24.4.2023 முதல் வருடம் முடி

புத்தாண்டு 2023 - பொதுப்பலன்களும் கிரகப் பெயர்ச்சிகளும் | ஒரு பார்வை

படம்
நிகழும் சுபகிருது வருடம் மார்கழி மாதம் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை தசமி திதியில், சமநோக்குடைய அஸ்வினி நட்சத்திரம், மேஷம் ராசி, கன்னி லக்னத்தில், சிவம் நாமயோகத்தில், தைத்துலம் நாம கரணத்தில், சித்தயோகத்தில் நேத்திரம் 1, ஜுவன் 1/2 நிறைந்த நன்னாளில் ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு மணி 12.00-க்கு பிறக்கிறது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி தசமி திதியில் இந்த வருடம் பிறப்பதால் சுய தொழில் தொடங்குவோர் மற்றும் பரம்பரை தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். தோற்றுப் போனவர்கள் ஓர் அணியாக திரண்டு வெற்றி பெறுவார்கள். 5-ல் சுக்கிரன், சனி இருப்பதால் பொருளாதாரம் உயரும். இந்தியாவுக்கு மரியாதை கூடும். புது தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். சினிமாத்துறை பிரமாதமாக இருக்கும். பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகும். சரித்திரப் படங்கள் அதிக வசூல் தரும். அதிக தளங்கள் மற்றும் நவீன வசதி கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கட்டப்படும். புது மாவட்டங்கள் உருவாகும். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களின் புறநகர் பகுதிகள் அதிக வளர்ச்சி அடையும். குடியிருப்பு பகுதிகளில் நூதன திருட்டுகள் அதிகமாகும். புதையல்கள் வெள

”நான் தப்பான ரிலேஷன்ஷிப்ல இருந்துட்டேன்” - மனம் திறந்த நடிகை அஞ்சலி!

படம்
தமிழ் சினிமாவின் துருத்துருப்பான நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடியவர் அஞ்சலி. தெலுங்கில் அறிமுகமாகியிருந்தாலும் கற்றது தமிழ், அங்காடி தெரு, வத்திக்குச்சி, எங்கேயும் எப்போதும், இறைவி, பேரன்பு போன்ற பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார் அஞ்சலி. இதனையடுத்து பல தனிப்பட்ட பிரச்னை காரணமாக சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவ்வப்போது பாடல்களில் மட்டும் தலைக்காட்டி வந்த அஞ்சலி கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் நடித்து வந்தவர் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் எட்டிப்பார்த்திருக்கிறார். அதன்படி நெட்ஃப்ளிக்ஸில் வந்த anthology-யான பாவக் கதைகளில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் வெளியான Fall என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த வெப் சீரிஸின் புரோமோஷனுக்கான பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார் அஞ்சலி. அதில் ஒன்றில் தன்னுடைய ரிலேஷன்ஷிப்பில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

பள்ளியெழுச்சி பாட வந்தோம்: தித்திக்கும் திருப்பாவை - 16 https://ift.tt/yaQ8JWx

படம்
பள்ளியெழுச்சி பாட வந்தோம் நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அப்டேட் - படக்குழு பகிர்ந்த புகைப்படம்!

படம்
வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'விடுதலை' படபிடிப்பு நிறைவு #Viduthalai shooting wrapped #VetriMaaran Annan @ilaiyaraaja Sir @elredkumar Sir @VijaySethuOffl mama @VelrajR Annan @PeterHeinOffl @BhavaniSre @mani_rsinfo @rsinfotainment @RedGiantMovies_ Thanks for all technicians & team  pic.twitter.com/TZKARRdH92 — Actor Soori (@sooriofficial) December 30, 2022 ‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்

”பேத்திக்காக பாட்டி நடத்தும் போராட்டம்” - ரசிகர்களை கவர்ந்ததா ‘செம்பி’? - திரைப்பார்வை

படம்
பேத்திக்காக ஒரு பாட்டி நடத்தும் போராட்டம் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்`செம்பி’ படத்தின் ஒன்லைன். கொடைக்கானல், புலியூரில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வீரத்தாயி (கோவை சரளா). அவரது பத்து வயது பேத்தி செம்பி (நிலா). மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு போன்றவற்றை எடுத்து சந்தையில் விற்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். தன்னுடைய மகள், மருமகனை இழந்தப்பின் பேத்திக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான் மட்டுமே, அவளை எப்படியாவது படிக்க வைத்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் பாட்டி வீரத்தாயி. ஆனால் அந்தக் கனவை சிதைப்பது போல, ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. மூன்று பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள் சிறுமி செம்பி. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் வீரத்தாயி. ஆனால், ஒரு கொலை கேஸில் குற்றவாளியாக வீரத்தாயியையே போலீஸ் தேடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, வீரத்தாயியை போலீஸ் தேடுவது ஏன்? இந்தக் கதையில் அஷ்வின் குமாரின் பங்கு என்ன? என்பதை எல்லாம் சொல்கிறது `செம்பி

‘செம்பி’ படம் உணர்வுகளின் கோர்வை’ - இயக்குநர் பிரபு சாலமன் பகிர்ந்த சுவாரஸ்யம்

படம்
‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனிக் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமன், தற்போது ‘செம்பி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘மைனா’ படத்தில் பேருந்துப் பயணத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட நிலையில், அதேபோன்றதொரு பேருந்துப் பயணத்தை வைத்து மீண்டும் த்ரில்லிங்கான கதைக்களத்தை கையாண்டுள்ளார் ‘செம்பி’ படத்தின் மூலம் இயக்குநர் பிரபு சாலமன். மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் அறிமுகமான ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசைமையத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘செம்பி’ படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், மூத்த நடிகை கோவை சரளா, அஸ்வின் ஆகியோர் புதிய தலைமுறை சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளனர். அதில்,  ‘செம்பி’ படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் பிரபு

குவலயாபீடத்தை அழித்த மாயோன்: தித்திக்கும் திருப்பாவை - 15 https://ift.tt/rd8KUkY

படம்
குவலயாபீடத்தை அழித்த மாயோன் எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ! from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பாலிவுட் வாய்ப்புக்காக இப்படி பேசலாமா?’ - சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா

படம்
தென்னிந்திய சினிமாக்களில் மசாலா, ஐட்டம் பாடல்கள்தான் உள்ளன என்றும், பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் உள்ளன எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ தெலுங்குத் திரைப்படம், இவரை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய்யின் ‘வாரிசு’ படத்திலும், இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘மிஷன் மஜ்னு’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரவுள்ள நிலையில், ‘மிஷன் மஜ்னு’ திரைப்படம் ஜனவரி 20-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றிய படமாக வெளிவரவுள்ள ‘மிஷன் மஜ்னு’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்த

‘விஜய்தான் நம்பர் 1 ஹீரோ என்று நான் சொன்னதற்கு இதுதான் காரணம்’ - தில் ராஜூ விளக்கம்!

படம்
நடிகர் அஜித்தைவிட விஜய் தான் நம்பர் 1 என்றுக் கூறி நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளான தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, தான் ஏன் அவ்வாறு கூறினேன் என்று விளக்கமளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வரவுள்ளநிலையில், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளிவரவுள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நட்சத்திரங்களின் படங்களும் நேருக்குநேர் மோதவுள்ளது ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜூ, அஜித்தை விட விஜய்தான் நம்பர் 1 என்றும், அதனால் ‘வாரிசு’ படத்திற்கு தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று ‘துணிவு’ படத்தின் விநியோகஸ்தரும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனருமான உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று கேட்கப்போகிறேன் என்று கூறியிருந்தார். இதற்குப் பல்வேறு

நம்பர் 1 சர்ச்சைக்கிடையே அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடும் ‘வாரிசு’ தயாரிப்பாளர்!

படம்
தமிழ் சினிமாவில் யார் நம்பர் 1 ஹீரோ என்ற சர்ச்சைக்கிடையே, அஜித்தின் ‘துணிவு’ படத்தை ஆந்திராவின் இரண்டு ஏரியாக்களில், விஜய்யின் ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜூ வெளியிட உள்ளார். ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ளப் படம் ‘துணிவு’. ஜிப்ரான் இசையமையத்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ளது. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. மேலும், தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு, ‘Thegimpu’ என்றப் பெயரில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை, ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜூ, ஆந்திரா மற்றும் தெலங்காளாவில் உள்ள விசாக் மற்றும் நிஜாம் ஏரியாக்களில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் விஜய்தான் நம்பர் 1 என்று திரும்பத் திரும்ப கூறி சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், அஜித்தின் ‘துணிவு’ படத்தை தில் ராஜூ வெளியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #Thunivu aka #Thegimpu Nizam & Vizag Release by Dil Raju on this

"முன்பெல்லாம் இப்படி இல்லை; மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?" - சித்தார்த் முழு விளக்கம்

படம்
மதுரை விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் குடும்பத்தினரிடம் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது குறித்து விளக்கமாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவுசெய்துள்ளார். அதில், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து பலரிடமிருந்து எனக்கு அழைப்புகள் வருகிறது. ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எனவே அதை விவரமாக கூற விரும்புகிறேன். நான் அடிக்கடி மதுரை விமான நிலையம் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை நான், எனது சகோதரி, பெற்றோர் உட்பட குடும்பத்தினருடன் வந்திருந்தோம். அப்போது அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் எனது ஆதார் கார்டை சோதனை செய்தார். மேலும் என் முகத்திலிருந்து முகக்கவசத்தை இறக்கியப் பிறகும் இரண்டு மூன்று முறை அவர் சோதனை செய்தார். நான் என்னவென்று கேட்டபோது, இதில் இருப்பது உங்களைப்போல இல்லை என்றார். நான் இப்பொழுது எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் இந்த புகைப்படத்திலும் இருக்கிறேன். இருந்தபோதிலும் அவர் ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. தொடர்ந்து எனது ஏர்பேட் மற்றும் தொலைபேசியை சோதனை செய்து அருகில் இருந்த ட

”யுவனுடன் சேர்ந்து எப்போ படம் பண்ணுவீங்க?” பா.ரஞ்சித்தின் நச் பதிலும் யுவனின் ரியாக்‌ஷனும்

நீலம் பண்பாட்டு மையம் என்றால் அரசாங்க சபாக்களில் கூட அனுமதி மறுக்கிறார்கள் - பா. ரஞ்சித்

படம்
சபாக்களில் முன்பதிவு செய்யப்படவில்லை என்றாலும், நீலம் பண்பாட்டு மையம் என்றால் புறக்கணிக்கிறார்கள்; கலைவாணர் அரங்கத்தில் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை இந்த வருடத்தில் நடத்துவதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தபோதும் நடக்கவில்லை என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான முனைப்பாக கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” என்ற கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சேத்துப்பட்டுவில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று கிராமிய இசை என்ற தலைப்பில் இசை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தர் கலை குழு, இளையராஜா மாரியம்மாள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சி போன்றவை இன்று நடைபெற்றது. அப்போத

மிதுனம் ராசியினருக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023

படம்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) | கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன், ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 08-01-2023 அன்று களத்திர ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். | 13-01-2023 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். | 15-01-2023 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23-01-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

AK62 எப்படிப்பட்ட படமாக இருக்கும்? ”Code word accepted” பாணியில் பதிலளித்த விக்னேஷ் சிவன்!

படம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு படம் ரிலீசாக இருக்கும் நிலையில் அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது. ஆனால் துணிவு படத்தின் வேலைகளுக்கு இடையிலேயே அஜித்தின் 62வது படம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கின. அதன்படி AK62 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு பாடலையும், வலிமையில் வேற மாறி மற்றும் அம்மா பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தையே இயக்கப்போகிறார் என தகவல் வெளியானது அஜித் ரசிகர்களிடையே பெரும் ஆவலையே இப்போதிருந்தே ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், தனியார் இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் AK62 பற்றி பேசியிருப்பதுதான் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில், அஜித்குமாருக்கு என மாஸ் ஹீரோ என்ற எண்ணம் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேவும் இருக்கும் நிலையில் AK62 என்ன மாதிரியான படமாக இருக்கப் போகிறது? அஜித்துக்கான மாஸ் ஹீரோ படமாகவா அல்லது விக்னேஷ் சிவனின் படமாகவா என கேள்வி எழு

ரிஷபம் ராசியினருக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023

படம்
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) | கிரகநிலை: ராசியில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் சந்திரன், ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 08-01-2023 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். | 13-01-2023 அன்று ராசியில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். | 15-01-2023 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23-01-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்வு – மகிழ்ச்சியில் விவசாயிகள்

படம்
142 அடியாக உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பென்னிகுக் உருவப்படத்திற்கு விவசாயிகள் மரியாதை செலுத்தினர். தேனி . மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல். உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஐந்தாவது ஆண்டாக 142 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து தேனி மாவட்டம் கம்பம் தமிழக பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். தண்ணீர் தேங்குவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக பொதுப் பணித்துறை அலுவலக ஊழியர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். அதோடு சின்னமனூர் அருகே பாலர்பட்டியில் விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், முல்லைப் பெரியாற்றில் மலர்கள் தூவி நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தியதற்கு வரவேற்ப

தனியாரிடம் ஒப்படைப்பதா?-‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்’ குறித்து திருமா, எஸ்டிபிஐ கேள்வி

படம்
‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்’ குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  இதுகுறித்து விசிக கட்சியின் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு 'இல்லம் தேடி கல்வி' , 'எண்ணும் எழுத்தும்', 'நான் முதல்வன்'  எனப் பல்வேறு திட்டங்கள் முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகிய திட்டங்கள் முன் எப்போதும் விட மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்த்திருக்கின்றன. 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! #VCK #Thiruma pic.twitter.com/G29ghl

108 வைணவ திவ்ய தேச உலா - 99 | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் https://ift.tt/M7CmHQ9

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், 99-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாளின் அவதாரத் தலமான இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள் மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் பாசுரம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

”ஒரு நல்ல படத்திற்கு அதுவே புரமோஷன்”.. புரமோஷன் எல்லாம் ஓகே? கதை, திரைக்கதை எங்கே?

படம்
“நல்ல படத்துக்கு எதுக்கு புரோமோஷன், நல்ல படமாக இருந்தால் அதன் கதையும் வேலையுமே அதற்கு புரோமோஷன்” என நடிகர் அஜித்குமார் கூறியதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இப்படி இருக்கையில், அவரது துணிவு படத்துக்கான வேலைகளை படக்குழு தற்போது இறங்கியிருக்கிறது. அதன்படி துபாயில் ஸ்கைடைவிங் மூலமும், நியூயார்க்கின் டைம் ஸ்கொயரிலும் துணிவு பட புரோமோஷன் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாக் கூட சென்னையில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களை வரவைத்து பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், திரைப்படங்களுக்கு ஷூட்டிங், சம்பளம் போன்றவற்றையெல்லாம் தாண்டி புரோமோஷனுக்காகவே குறிப்பிட்ட அளவில் கோடிக்கணக்கில் செலவிடுவது எந்த அளவுக்கு தேவையானது மற்றும் இத்தனை கோடி செலவு செய்து ஒரு படத்துக்கு புரோமோஷன் செய்வதால் என்ன மாதிரியான பயன்கள் ஏற்படுகின்றன என்பதை காணலாம். உச்ச நட்சத்திரங்களின் படங்களின் கதைக்களத்துக்கும், அதற்காக மேற்கொள்ளப்படும் புரோமோஷன்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கான வித்தியாசமே இருக்கும். குறிப்பாக பிரம்மாண்ட

"குத்தகை பாக்கியை காரணம் காட்டி நில வெளியேற்றம் கூடாது” - பி.ஆர் பாண்டியன்

படம்
குத்தகை பாக்கியை காரணம் காட்டி நில வெளியேற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவெடுக்கவில்லை எனில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். கோயில் அறக்கட்டளை குத்தகை விவசாயிகள் குடியிருப்பு மனை உரிமையாளர்கள் உரிமை மீட்பு மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குத்தகை நில உரிமையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 15 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டி கோவில் மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான விளைநிலங்களையும் குடியிருப்பு மனைகளையும் ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 2010 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு இயற்கை சீற்றங்களால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கிய நிலையில் கோவில் நிலங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் குத்தகை பாக்கி இருப்பதாகக் கூறி நிலு