இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருவாரூர்: வயல்களில் பாட்டு பாடிக்கொண்டே களை எடுக்கும் பெண்கள்

படம்
திருவாரூர் மாவட்டத்தில் வயல்களில் பெண்கள் பாட்டு பாடிக்கொண்டே  களை எடுப்பது பார்ப்போரை உற்சாகமூட்டி வருகிறது.  திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. கனமழை காரணமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பயிர்கள் முற்றிலுமாக அழிந்து போயின. தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வந்ததால் பல இடங்களில் பயிர்கள் மூழ்கி சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. வயல்வெளிகளில் களைகளும் பெருகியது. ஏற்கெனவே களைக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் அடித்தபோதும் அவை மழையின் காரணமாக அழியாமல் மீண்டும் துளிர்த்து வந்தது. இந்த நிலையில் தற்போது வெயில் அடிக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பல்வேறு இடங்களில் ஆட்களை வைத்து களைகளை அகற்றி வருகிறார்கள். வயலில் வேலை செய்யும் பெண்கள் அலுப்பு தட்டாமல் இருக்க பாடல்களைப் பாடி வேலை செய்துவருகின்றனர். மேலும், தொடர்ந்து வெயில் அடித்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து வழக்கம்போல் ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தண்ணீர் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். Source : WWW

தென்னை மரம் ஏறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் காப்பீட்டுத் திட்டம்

படம்
தென்னை மரம் ஏறுபவர்களுக்கும், பதநீர் இறக்கும் கலைஞர்களுக்கும் கூடுதல் “கேரா சுரக்ஷா” காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு ரூ.5 லட்சம். இது விபத்துக் காப்பீடு பாலிசி. இதில் 1 லட்சம் ரூபாய் வரை மருத்துவமனைக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. “தென்னை மர நண்பர்கள் பயிற்சித் திட்டம், பதனீர் இறக்கும் கலைஞர்கள் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முதலாண்டு பிரீமியம் தொகை ரூ.398.65-ஐ தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்கும். ஓராண்டு முடிந்ததும் பிரீமியம் தொகையில் 25 சதவீதம் ரூ.99-ஐ செலுத்தி பாலிசியை பயனாளிகள் புதுப்பித்துக் கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரையுள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம். இதற்கான விண்ணப்பத்தை வேளாண் அதிகாரி, பஞ்சாயத்துத் தலைவர், சிபிஃஎப் அலுவலக அதிகாரிகள், சிபிசி இயக்குநர்கள் ஆகியோர் கையெழுத்தைப் பெற்று  எர்ணாகுளத்தில் மாற்றும் வ

கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான ‘கிறிஸ்துமஸ் மரம்’ https://ift.tt/3Ek0ZSQ

படம்
கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் வந்தார். ஊர் ஊராகச் சென்று இதற்காக பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றைமக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்து விடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார். ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக்கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத் தொடங்கினர். போனிபேஸ் மீண்டும் அவ்வழியே சென்றபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்த

கிறிஸ்துமஸ்: 150-ம் ஆண்டு விழா காணும் ரேஸ்கோர் சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ்' தேவாலயம் https://ift.tt/3JjzbBF

படம்
கோவையில் உள்ள பழமையான தேவாலயங்களில் ரேஸ்கோர்ஸில் உள்ள சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் தேவாலயம் குறிப்பிடத்தக்கது. கற்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இன்றளவும் அதன் தன்மை மாறாமல் அப்படியே உள்ளது. 1866-ம் ஆண்டு இந்ததேவாலய கட்டுமானப் பணிகள் தொடங்கின. கட்டுமான செலவாக ரூ.13,767 நிர்ணயிக்கப் பட்டது. இதில், மானியமாக அன்றைய அரசுரூ.5 ஆயிரமாக அளித்துள்ளது. நன் கொடையாளர்கள் உதவியுடன் எஞ்சியுள்ள தொகை பெறப்பட்டு தேவலாயம் கட்டப்பட்டது. 1872-ம்ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பயன் பாட்டுக்கு வந்த இந்த தேவாலயம் நடப்பாண்டு 150-ம் ஆண்டு விழா காண்கிறது. அதை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர். முதலில் ஆங்கிலேயர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் இந்த தேவாலயத்தில் வழிபாடு நடத்தி வந்தனர். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு இந்தியர்களும் இந்த தேவாலயத்தில் வழிபடத் தொடங்கினர். 1980-ம் ஆண்டு வரையிலும் ஆங்கில பாதிரியார்களே இந்த தேவாலயத்தில் இருந்துள்ளனர். அதன்பிறகு இந்திய பாதிரியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலமொழி பேசும் இந்திய மக்கள் வழிபட்டு வருகின்றனர். கல்விபணிக்காக கோவையில் தங்கியிருந்த ஐரோப்பியர்கள், ஆ

கிறிஸ்துமஸ்: பழமை மாறாத போத்தனூர் புனித மாற்கு தேவாலயம்! https://ift.tt/30UGAGg

படம்
1900-ம் ஆண்டுகளில் போத்தனூர் பகுதியில் வசித்த, ஆங்கில ப்ரோடஸ்டன்ட் சமூகத்தினரின் வழிபாட்டுக்காகவும், புனிதப் பணிக்காகவும் 1918-ல் போத்தனூர் ரயில்வே காலனியில் தூய மாற்கு தேவாலயம் கட்டத் தொடங்கினர். தேவாலய கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம் மலபார் பகுதியில் இருந்து செந்நிற கற்கள் கொண்டுவரப்பட்டன. தரைக்கு டெரகோட்டா டைல்ஸ் பதிக்கப்பட்டது. இந்த ஆலயம் மெட்ராஸ் லார்டு பிஷப்பால் 1919 ஜூலை 24-ம் தேதி அர்ப்பணிக்கப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்தும் பழமை மாறாமால் இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது இந்த ஆலயம். இதன் கட்டுமான அமைப்பு மிகவும் அழகானது. தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கைகளால் கட்டப்பட்ட போதிலும், மிகுந்த கலை நுட்பத்துடன் அமைத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிறிஸ்துமஸ்: குழந்தைகளின் உள்ளங்களை கவரும் கிறிஸ்துமஸ் தாத்தா! https://ift.tt/3EpHzvO

படம்
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, உலா வரும் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு தன் உடையில் ஒளித்து வைத்திருக்கும் இனிப்புகளை, தேடிப்பிடித்து வழங்குவது குழந்தைகளை குதூகலப்படுத்தும் விஷயமாகும். அவரது உருவம் குழந்தைகளுக்கு பிடித்த ஒன்றாகிவிட்டதால், உலகமெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா என்றழைக்கப்படும் சாண்டா கிளாஸ் வேடம் தரிக்கும் தாத்தாக்களுக்கு ரசிகர் பட்டாளம் அனைத்து ஊர்களிலும் உண்டு. குறிப்பாக குழந்தைகள் பட்டாளம் தான்! கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளைதாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் உலமைப்புடன் வசீகரமாக வலம் வருபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hin

கிறிஸ்துமஸ்: ஐந்து மெழுகுவர்த்திகள் ஏற்றுவதன் நோக்கம் https://ift.tt/33X3CNZ

படம்
கிறிஸ்துமஸ் குறித்தும் இயேசு பிறப்பின் பெருமைகள் குறித்து வால்பாறை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் பங்குதந்தை மரிய ஜோசப் பகிர்ந்து கொண்டதாவது: பாவங்களில் அகப்பட்டு கிடந்த மக்களின் ஆழ்மனதில் மண்டிக்கிடந்த இருளை அகற்ற உதித்த பேரொளி, அமைதிக்கான வழியை அடையாளம் காட்டியதால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் உளம் மகிழ்ந்து கொண்டாடும் உன்னத விழாவாக கிறிஸ்துமஸ் திருவிழா உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிறிஸ்துமஸ்: ஐந்து மெழுகுவர்த்திகள் ஏற்றுவதன் நோக்கம்

படம்
கிறிஸ்துமஸ் குறித்தும் இயேசு பிறப்பின் பெருமைகள் குறித்து வால்பாறை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் பங்குதந்தை மரிய ஜோசப் பகிர்ந்து கொண்டதாவது: பாவங்களில் அகப்பட்டு கிடந்த மக்களின் ஆழ்மனதில் மண்டிக்கிடந்த இருளை அகற்ற உதித்த பேரொளி, அமைதிக்கான வழியை அடையாளம் காட்டியதால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் உளம் மகிழ்ந்து கொண்டாடும் உன்னத விழாவாக கிறிஸ்துமஸ் திருவிழா உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிறிஸ்துமஸ்: நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க ‘கேக் மிக்ஸிங்’ நிகழ்ச்சி https://ift.tt/3qoVpJP

படம்
டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகளை கிறிஸ்தவர்கள் தொடங்கி விடுவார்கள். வீடுகளின் வாசலில் இயேசுவின் வருகையை குறிக்கும் வகையில் நட்சத்திரங்களைக் கட்டித் தொங்க விடுவது, அவரது பிறப்பைச் சித்தரிக்கும் சொரூபங்களுடன் குடில்களை அமைத்தல், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் (பாடல்கள்) பாடுவது, சான்டா கிளாஸ் வேடமணிவது, கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, கேக் தயாரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வர். இதில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது நீலகிரி மாவட்டத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க ‘ரிச் பிளம் கேக்’ உலகளவில் பிரபலமானது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கிறிஸ்துமஸ் பாரம்பரியத்தை தொடக்கினர். கிறிஸ்துமஸ் அன்று விரதமிருந்து மாலையில் கூழ் தயாரித்து, அதை உண்டு விரதத்தை முடிந்தனர். பின்னர் இந்த கூழில் உலர் பழங்கள், தேன், வாசனை திரவியங்கள், ஓட்ஸ் ஆகியவற்றை கலந்து ஒரு கலவை தயாரித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil Ne

கிறிஸ்துமஸ்: நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க ‘கேக் மிக்ஸிங்’ நிகழ்ச்சி

கிறிஸ்துமஸ்: மாட்டுத் தொழுவத்தை தேர்ந்தெடுத்த மனுஷகுமாரன் https://ift.tt/3EqRuBa

படம்
ரோமப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது கிறிஸ்து இயேசு பிறந்த பெத்லஹேம். இது யூதர்கள் பெரும்பான்மையாக வசித்துவந்த யூதேயா தேசத்தில் இருந்தது. ரோம சாம்ராஜ்யத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அரசு நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. எத்தனை வரிகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவும், குடும்பத்திலிருந்து ஒருவரையேனும் ராணுவத்துக்குக் கட்டாய ஆள் எடுப்பு செய்யவும் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால், யூதர்களுக்கு ராணுவத்தில் சேர்வதில் விருப்பமில்லை. அதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த விலக்கு பெற்றதற்காக அவர்கள் அதிக வரி செலுத்திவந்தனர். எனவே, வரி முறைக்காக அவர்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டது. இயேசுவை நிறைமாதக் குழந்தையாக மரியாள் கருவில் தாங்கியிருந்தபோது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு மக்கள் தொகைப் பதிவேட்டில் தன் குடும்பத்தைப் பதிவு செய்ய பெத்லஹேம் புறப்பட்டார் சூசை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tami

கிறிஸ்துமஸ்: மாட்டுத் தொழுவத்தை தேர்ந்தெடுத்த மனுஷகுமாரன்

திருவையாறு தியாகராஜரின் 175-வது ஆராதனை விழா: இன்று முகூர்த்தப் பந்தக்கால் நடும் நிகழ்வு

படம்
தஞ்சை: தஞ்சையில் திருவையாறு தியாகராஜரின் 175-வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது. தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 18-ம் தேதி, தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவையாறு தியாகராஜரின் 175-வது ஆராதனை விழா: இன்று முகூர்த்தப் பந்தக்கால் நடும் நிகழ்வு https://ift.tt/3J3dO7A